சில மாதங்களுக்கு முன்னர் எங்கள் தெருவில் இருக்கும் நாய் ஒன்று நான்கு அழகான குட்டிகளை ஈன்றது. அது தன் குட்டிகளை அவ்வளவு பத்திரமாக பாத்துக்கொண்டது. இதில் வருத்தம் என்னவென்றால், நான்கு குட்டிகளையும் அக்கம்பக்கத்தில் இருக்கும் சின்னஞ்சிறு பொடிசுகள் தங்கள் வீட்டுக்கு எடுத்துசென்றுவிட்டனர். நான்கு குட்டிகளையும் இழந்து தவித்த அந்த நாயை பார்க்கும் போதெல்லாம் மனம் லேசாக வலிக்கும்.
பிறந்த குழந்தையை மருத்துவமனையில் இருந்து திருடினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் இங்கே யார் நடவடிக்கை எடுப்பார் ??
தன் குட்டிகளை தான் வைத்துக் கொள்ள முடியவில்லை, தன் கண் முன்னே தன் குழந்தைகளை எடுத்து செல்ல எந்த தாயுள்ளமும் அனுமதிக்காது. அனாதையாக இருக்கும் ஒரு நாய்க்கு ஆதரவு தாருங்கள். ஆனால் இப்படி தாயிடமிருந்து பிரித்து தாயின் அன்பு அதற்கு கிடைக்காமல் செய்துவிடாதீர்கள். நீங்கள் சொல்லலாம், எங்கள் வீட்டில் எங்களுக்கு இணையாக அந்த நாயை வளர்ப்போம், அதற்கு எல்லா வசதிகளையும் செய்துக்கொடுப்போம் என்று. ஆனால் ஒன்று தெரிந்துக்கொள்ளுங்கள், உங்கள் வசதி அந்த தாயின் அன்பைவிடவும் பெரிதல்ல. தாயிடம் இருந்து எந்த குழந்தையையும் பிரிக்காதீர்கள். அந்த தாய்க்கு வேண்டுமானால் வேறு குழந்தை பிறக்கலாம், ஆனால் அந்த குழந்தைக்கு வேறு தாய் கிடைத்தாலும் இந்த தாய்ப்போல இருக்காது.
அதற்காக விலங்குகளை வீட்டில் வளர்க்காதீர்கள் என்று நான் சொல்லவில்லை. விலங்குகள் வீட்டில் நம்முடன் வாழ விரும்புவதில்லை. நாம்தான் அதை நம்மோடு இருக்கும்படி செய்துவிடுகிறோம். அந்தந்த உயிர்களை அதனதன் போக்கில் விட்டுவிடுங்கள். அதுதான் இயற்கையின் விதியும் கூட. இந்த விதியில் நாம் தலையிடுவது முறையா சொல்லுங்கள் ?
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment