மிஸ்டு கால்

Thursday, April 04, 2013


           சில காலமாக தமிழ் ஈழ மக்களுக்காக தமிழகத்தில் ஆதரவு குரல்களை என்னால் கேட்க முடிகிறது. இன்றைய தொழில்நுட்ப வசதிகளைக்கொண்டு, பல வழிகளிலும் மக்களிடம் ஆதரவு திரட்டுகின்றனர்.

      சில நாட்களுக்கு முன்பு எனக்கொரு குறுஞ்செய்தி வந்தது. ஒரு எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க சொல்லி. அப்படி சில லட்சம் அழைப்புகள் அந்த எண்ணிற்கு சென்றால், நம் பாரத பிரதமரை இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க அவர் சம்மதிப்பார் என்று. வந்த கோபத்தில் அந்த குறுஞ்செய்தியை அழித்துவிட்டேன்.

         அங்கே என் மக்கள் இறந்து வருகின்றனர், ஒரு மனிதாபிமானம்கூட இல்லாமல் மிஸ்டு கால் கொடுத்து அவருக்கு நம் ஆதங்கத்தை பதிவு செய்தால் மட்டுமே அவர் என் மக்களுக்கு ஆதரவாக செயல்படுவார் என்றால் அப்படியான ஆதரவு என் மக்களுக்கு தேவையில்லை. என் தமிழன் இன்றும் சரி என்றும் சரி மற்றவனை நம்பி வாழ்பவன் இல்லை. 

பிச்சை வாங்கி உண்ணும்வாழ்க்கை
பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே !

என்றான் பாரதி. அங்கே என் மக்கள் வேலைவாய்ப்பின்றி, பிழைக்க வழியின்றி தவித்தாலும் உங்கள் பொய்யான ஆதரவை நம்பி இருக்க மாட்டான். அவனுக்கு எதற்கும் அச்சமில்லை. எத்தனையோ முறை அவனை அங்கே மனதால் சாகடித்துவிட்டீர்கள். இனிமேலும் அவனை இப்படி சில்லறைத்தனமாய் நடந்துக்கொண்டு சாகடிக்காதீர்கள். 

        மனிதநேயம் என்பது செத்துக்கொண்டிருக்கிறது என்றுதான் நினைத்தேன். ஆனால் அது மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்பதை உணர்கிறேன்.

      நான் மனிதன் என்று சொல்லிக்கொள்வதற்கு மிகவும் வெட்கப்படுகிறேன். 

* தினேஷ்மாயா *

0 Comments: