ஏப்ரல் 23 - உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டிருந்த புத்தக திருவிழாவிற்கு சென்றிருந்தேன்.
பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள், நூற்றுகணக்கான பதிப்பகங்கள் இடம்பெற்றிருந்தன. மாலை 6 மணிக்கு கருத்தரங்கம் நடைபெற்றது.
எனக்கு மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால், புத்தக தினத்தன்று புத்தக திருவிழாவிற்கு வருகை தந்தவர்கள் வெகுசிலரே. புத்தகம் ஒரு சிறந்த நண்பன் என்பார்கள். எனக்கென்னவோ, சென்னைவாசிகளுக்கு அதிக நண்பர்கள் இருக்கிறார்கள் போல, அதானால்தானோ என்னவோ புத்தக நண்பர்களைத்தேடி எவரும் வரவில்லைப்போலும். கருத்தரங்கிற்கு இருபது பேருக்கு மேல் கலந்துக்கொள்ளவில்லை. எதிரே இருக்கும் கடற்கரைக்கு வரும் கூட்டத்தில் ஒரு சதவிகிதம் கூட புத்தக திருவிழா பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.
விழா அமைப்பாளர்கள் இதனை பிரபலபடுத்தவில்லையா, இல்லை மக்களிடம் புத்தகங்கள் மீதான விருப்பம் குறைந்துவிட்டதா என்று தெரியவில்லை.
நாம் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். ஒருவர் இறந்துவிட்டால் அவரின் உடலை கட்டைகளை வைத்து எரித்தால் நேரமாகும் அந்த நேரத்தைக்கூட மிச்சம்பிடிக்க மின்மயானம் கொண்டுவந்துவிட்டார்கள். எதற்கும் நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்த நாளைய பிணங்களாகிய இன்றைய ம்னிதர்களுக்கு புத்தகத்தின் அருமை எல்லாம் எப்படி தெரியும் சொல்லுங்கள்...
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment