செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம்பாதி கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா
ஆண்டைக்கு ஒரு பாதி ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே
எங்க மேலு காலு வெறும் தோளா போச்சே
அது கங்காணி செருப்புக்கு தோதா போச்சே
செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம்பாதி கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா
ஏ ஊசி மழையே ஊசி மழையே
எங்க உடலோடு உயிர் சூடு அத்து போச்சே
ஏ ஊதக்காத்தே ஊதக்காத்தே
எங்க பூர்வீக போர்வையும் பொத்து போச்சே
தேகத்தில் உள்ள எலும்புக்கு
ஒரு வெறி நாயும் தெரு நாயும் மோதுதே
வானத்தில் வாழும் நெஞ்சமோ
தன் மாராப்பை தாராமல் ஓடுதே
உயிர் காப்பாத்தும் தெய்வங்கள் கண் மூடுதே
ஊரெல்லாம் விட்டு நம் இளமை கெட்டு
நாம் வெளியானோம் பூனைக்கு வாக்கப்பட்டு
ஒரு மானம் கெட்டு சிறு சோறு திம்போம்
பேய் மழையோடும் பனியோடும் தூக்கங்கெட்டு
பாம்புக்கு பசி வந்ததே ஒரு சிறு கோழி என்னாகும் கூட்டிலே
யானையின் பெருங்காலிலே சிறு காளான்கள் என்னாகும் காட்டிலே
இவள் உயிர் காத்த ஒரு சொத்தும் பறிபோனதே
செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம்பாதி கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா
ஆண்டைக்கு ஒரு பாதி ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே
எங்க மேலு காலு வெறும் தோளா போச்சு
அது கங்கானி செருப்புக்கு தோதா போச்சு
படம் : பரதேசி
இசை : G.V.பிரகாஷ்குமார்
பாடியவர்கள் : கங்கை அமரன், ப்ரியா ஹிமேஷ்
வரிகள் : வைரமுத்து
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment