ஒரு கப்

Thursday, April 25, 2013



* தினேஷ்மாயா *

யார் செய்வார்


வெளியே சுத்தம் செய்கிறார் 

சரி..

உள்ளே இருக்கும் குப்பையை யார்

சுத்தம் செய்வார் ?

* தினேஷ்மாயா *


அதிக அன்பு


நன்றி: முகநூல்

* தினேஷ்மாயா *

உன் வார்த்தைகள்

Wednesday, April 24, 2013


நன்றி: முகநூல்

* தினேஷ்மாயா *

கோழைத்தனம்


நன்றி: முகநூல்

* தினேஷ்மாயா *

விட்டுக்கொடுங்கள்


* தினேஷ்மாயா *

சே..


* தினேஷ்மாயா *

நீயே என் கவிதை


* தினேஷ்மாயா *

ஆராரிராரோ




* தினேஷ்மாயா *

சூழ்நிலை



நன்றி: முகநூல்

* தினேஷ்மாயா *

முதல் மரணம்



நன்றி: முகநூல்

* தினேஷ்மாயா *

நீ இல்லாமல் இல்லை


நன்றி: முகநூல்

* தினேஷ்மாயா *

Relax Please


ALWAYS STAY RELAX PLEASE.........................

*  தினேஷ்மாயா *

காமம்



    இயற்கையின் படைப்பில் காமம் என்பது ஒரு இயல்பான விஷயமே. ஆனால் பெரும்பாலான மக்கள் அதை தவறான் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். என்னவோ காமம் என்பது ஒரு கொலைக்குற்றம் என்பது போல. ஆனால் அதற்கென நேரம், காலம், இடம், இப்படி பல விஷயங்களை பார்க்கவேண்டும் தான். அதை பார்க்காமல் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் காதல் என்னும் பெயரில் காமத்தை வெளிப்படுத்துவது எனக்கும் கொஞ்சம் அந்த மக்கள் மீது வெறுப்பைத்தான் உண்டாக்குகிறது. 

* தினேஷ்மாயா *

மகிழ்ச்சி


    மகிழ்ச்சி என்பது ஆடம்பரமான வாழ்வில் மட்டும்தான் கிடைக்கும் என்கிற தவறான எண்ணம் நம் மக்களிடையே பரவி கிடக்கிறது. ஆனால், மகிழ்ச்சியை நாம் ஆடம்பரமான வாழ்க்கைமூலம் தான் தேடவேண்டும் என்றில்லை. நம் மகிழ்ச்சியை நாம் இருக்கும் இடத்திலேயே நம் வாழ்க்கை முறையிலேயே உருவாக்கிக்கொள்ள முடியும். அந்த வழிமுறைகளை நாம் பின்பற்றினால், நாமும் நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவருமே மகிழ்ச்சியாகத்தான் இருப்பர்..

* தினேஷ்மாயா *

தன்னம்பிக்கை



“வேரோடு என்னை அழித்தாலும்

மீண்டும் தளைத்து வருவேன்” என்பதே

உண்மையான தன்னம்பிக்கை...

* தினேஷ்மாயா *

காகிதம்


பணம் வெறும் காகிதம் மட்டுமே. ஆனால் அதுதான் மனிதனின் வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிறது. இந்த உண்மையை உணர்ந்தவன் பணத்திற்கு முதலாளி ஆகிறான். இதை உணர மறந்தவன், பணத்திற்கு அடிமை ஆகிறான்..


* தினேஷ்மாயா *

மாற்றிக்கொள்..



* தினேஷ்மாயா *

மன்னிப்பு


* தினேஷ்மாயா *

செல்ல பிராணிகள்


நம்மில் பலர்,

செல்லப்பிராணிகள் வளர்க்க

அதிகம் விரும்புகிறோம்..

ஆனால்,

ஒரு அனாதை குழந்தையை

தத்தெடுத்து வளர்க்க

அதிகம் தயங்குகிறோம்..

* தினேஷ்மாயா *

உலக புத்தக தினம்




    ஏப்ரல் 23 - உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டிருந்த புத்தக திருவிழாவிற்கு சென்றிருந்தேன்.

   பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள், நூற்றுகணக்கான பதிப்பகங்கள் இடம்பெற்றிருந்தன. மாலை 6 மணிக்கு கருத்தரங்கம் நடைபெற்றது.

       எனக்கு மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால், புத்தக தினத்தன்று புத்தக திருவிழாவிற்கு வருகை தந்தவர்கள் வெகுசிலரே.  புத்தகம் ஒரு சிறந்த நண்பன் என்பார்கள். எனக்கென்னவோ, சென்னைவாசிகளுக்கு அதிக நண்பர்கள் இருக்கிறார்கள் போல, அதானால்தானோ என்னவோ புத்தக நண்பர்களைத்தேடி எவரும் வரவில்லைப்போலும். கருத்தரங்கிற்கு இருபது பேருக்கு மேல் கலந்துக்கொள்ளவில்லை. எதிரே இருக்கும் கடற்கரைக்கு வரும் கூட்டத்தில் ஒரு சதவிகிதம் கூட புத்தக திருவிழா பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. 

   விழா அமைப்பாளர்கள் இதனை பிரபலபடுத்தவில்லையா, இல்லை மக்களிடம் புத்தகங்கள் மீதான விருப்பம் குறைந்துவிட்டதா என்று தெரியவில்லை. 

    நாம் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். ஒருவர் இறந்துவிட்டால் அவரின் உடலை கட்டைகளை வைத்து எரித்தால் நேரமாகும் அந்த நேரத்தைக்கூட மிச்சம்பிடிக்க மின்மயானம் கொண்டுவந்துவிட்டார்கள். எதற்கும் நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்த நாளைய பிணங்களாகிய இன்றைய ம்னிதர்களுக்கு புத்தகத்தின் அருமை எல்லாம் எப்படி தெரியும் சொல்லுங்கள்...

* தினேஷ்மாயா *

ஒற்றுமை


உழைப்பால் மட்டும் 

உலகம் உயரவில்லை...

உழைப்பாளிகளின் ஒற்றுமையினாலும் தான்

உலகம் செழித்திருக்கிறது...

* தினேஷ்மாயா *

ஈ.வெ.ரா




ரேழுலகத்தை பகுத்தறிவால் வென்ற ராமசாமி- ஈ.வெ.ரா.

* தினேஷ்மாயா *

கோடி புண்ணியம்


கோபுர தரிசனம்

கோடி புண்ணியம்...

அது சரி -

பாவம் செய்தவன் தானே

புண்ணியம் தேடுவான் !!!

* தினேஷ்மாயா *

சைக்கிள்


பதினைந்து வயதுவரை சைக்கிள்..

அதன்பிறகு செல்வதோ பைக்கில்..

* தினேஷ்மாயா *

சுதந்திரம்

Tuesday, April 23, 2013


சுதந்திரம் ...

யாரும் நமக்கு கொடுக்க வேண்டியதில்லை...

நாமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்...

இல்லையேல்,

காலங்காலமாய்

அடிமையாய் மட்டுமே இருக்க வேண்டும்..

* தினேஷ்மாயா *

கண்ணீர்


அவள் பிரிந்துசென்ற போது

சிந்திய கண்ணீரைவிட

பிரிந்து சென்றபின்

என் கனவில் அவள் வரும்போது

நான் சிந்தும் கண்ணீரே அதிகம்...

* தினேஷ்மாயா *

அழுகை

Saturday, April 20, 2013


எல்லோர் முன்னிலையிலும்

சிரித்து விடலாம்...

ஆனால்

மனதிற்கு நெருக்கமான

உறவுகளிடம் மட்டும்தான்

மனம்விட்டு அழ முடியும்..

* தினேஷ்மாயா *

நான் அசைந்தால் அசையும்

Friday, April 19, 2013



ஆடுபவனும் அவனே !!

ஆட்டி வைப்பவனும் அவனே !!



* தினேஷ்மாயா *

தேவ தூதன்


தேவதூதன் என்றழைக்கப்படும் இயேசு கிறித்து...

* தினேஷ்மாயா *

அலங்காரம்



இந்த சிலையைவிட

இச்சிலைக்கு செய்திருக்கும்

அலங்காரம் என்னை

அதிகம் கவர்ந்தது..

* தினேஷ்மாயா *

பின்குறிப்பு: இயற்கையையும் அழகையும் எங்கிருந்தாலும் ரசிப்பவன்தானே ஒரு சிறந்த ரசிகன் !!

நான் யார்?




“நான் யார்?” - இந்த கேள்விதான் ஒரு மனிதனை மகான் ஆக்கியது.. விடை தெரிந்ததால் அவர் மகான் ஆகிவிட்டார். விடை தெரியாததால் நாம் இன்னும் மனிதர்களாகவே இருக்கிறோம்..

* தினேஷ்மாயா *

கடவுள் நம்பிக்கை



கடவுள் இருக்கிறான் என்று நம்புவது கடவுள் நம்பிக்கை ஆகிவிடாது. எந்த சூழ்நிலையிலும் எவ்வளவு துன்பம் வந்தாலும் அவன் நம்மை கைவிடமாட்டான் என்று மனதார நம்புவதுதான் உண்மையான் இறைநம்பிக்கை...

* தினேஷ்மாயா *

நாத்திகன்



உண்மையான 

ஆத்மஞானம் உள்ளவன் மட்டுமே

உண்மையான

நாத்திகனாக இருக்க முடியும்...

* தினேஷ்மாயா *

விதி

Thursday, April 18, 2013



வீதி வீதியாக

அலைவதுதான் - என்

விதி...

அவளுக்காக !!

* தினேஷ்மாயா *

போதும்.. நான்....


இணையத்தில் உலாவரும் போது என்னை கொஞ்சம் கவர்ந்த படம் இது..

* தினேஷ்மாயா *

மனிதன்


* தினேஷ்மாயா *

பரதேசி


   பரதேசி திரைப்படத்தைப் பற்றிய என் கருத்துக்களை இங்கே பதியவேண்டும் என்று பல வாரங்களாக நினைத்திருந்தேன். இன்றுதான் நேரம் கிடைத்திருக்கிறது.

“ இன்று நாம் கதகதப்பாக அருந்தும் தேநீருக்காக அன்று ரத்தம் சிந்திய அந்த ஏழை மக்களின் உண்மை கதை ... ”   என்று சொல்லி படத்தை துவங்குகிறார் இயக்குனர்.

1939-ஆம் ஆண்டில் துவங்குகிறது கதை. அன்றைய காலகட்டத்தில் இருந்த பேச்சு வழக்கு, உடை, பாவனைகள் எல்லாவற்றியையும் சரியே நம் முன் கொண்டு வந்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே ராசாவாக வரும் அதர்வா தன் கதாபாத்திரத்தில் தனியாக தெரிகிறார். அங்கம்மாவின் குறும்புத்தனங்கள் ரசிக்க வைக்கின்றன. வெள்ளந்தியாக வரும் கதாநாயகனை அனைவரும் உபயோகித்துக்கொள்கிறார்கள். 

பஞ்சம் பிழைக்க ஊர் விட்டு ஊர் தேடி செல்கின்றனர் கிராம மக்கள். ஆனால் அவர்கள் அப்படி செல்லும்வரை அந்த கிராமத்தில் பஞ்சம் இருப்பதாக ஒரு காட்சிக்கூட வைக்கவில்லை.

பாதி கிராமமே பிழைப்பைத்தேடி கங்கானியின் ஆசை வார்த்தைகளை நம்பி ஊரை விட்டு செல்கிறது. செங்காடே பாடலை திரையரங்கில் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண் கலங்கிவிட்டேன். வரிகள் அனைத்தும் ரத்தத்தால் எழுதியிருக்கிறார் வைரமுத்து. 48 நாட்கள் பயணத்திற்கு பிறகு என்றதை பார்த்ததும் மனம் ஒரு நொடி துடிக்கவே இல்லை. இந்த அளவிற்கெல்லாம் நம் முன்னோர்கள் கஷ்டப்பட்டிருப்பார்களா என்று நினைத்தும்கூட பார்க்க முடியவில்லை..

நான் மேலே பதிவு செய்திருக்கும் காட்சி, திரைப்படத்தில் இடைவேளை காட்சி. என்னைப்பொறுத்தவரை இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் முதலிடம் இந்த காட்சிக்கு நான் தருவேன்... அந்த காட்சி சொல்லும் அர்த்தத்தை புரிந்துக்கொண்டப்பின் என்னால் திரையரங்கில் ஒரு நொடிகூட உட்காரமுடியவில்லை.... மனதை வாட்டி எடுத்துவிட்டது அந்த காட்சி. 

பல நாட்கள் போரட்டத்திற்குப் பிறகு ஒருவழியாக தேயிலைத் தோட்டம் வந்தடைகிறது அந்த பாதி கிராமம். அங்கு அவர்களுக்கு வேலையும் கொடுத்துவிட்டு சம்பளம் கொடுக்கிறோம் என்ற பெயரில் கொள்ளையடிக்கிறது ஒரு கூட்டம். வைத்தியம் பார்க்க, தாயத்து கட்ட இப்படி ஒவ்வொருவரும் கூலியை பிடுங்கிக்கொள்ள ஊருக்கு திரும்பவே முடியாத அளவிற்கு அந்த மக்களின் கதை செல்கிறது.

வெள்ளையனுக்கு கற்பை பறிகொடுத்துவிட்டு தவிக்கிறாள் ஒருத்தி. இவளைப்போன்ற ஒருத்திகள் அந்த காலத்தில் ஆயிரமாயிரம் !!

“இவள் உயிர் காத்த ஒரு சொத்தும் பறிபோனதே”  வரிகள் போதும் அந்த அவலத்தை சொல்ல...

மரகதம் கதாபாத்திரமும் மனதில் நிற்கிறது.. இவளின் துணிச்சல் மிகவும் கவர்ந்தது. 

படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் தனியாக நிற்கிறார்கள். அனைவருக்கும் சரிசமமான அளவில் முக்கியத்துவம் கொடுத்து அதைவிட கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, இசையாலும் வரிகளாலும் இன்னொரு அத்தியாயத்தையும் புகுத்தி பரதேசி என்னும் காவியம் படைத்திருக்கிறார் பாலா...

வெகுசில படங்களே என்னை அதிகம் பாதித்துள்ளன. அந்த வரிசையில் பரதேசியும் ஒருவன்...

@ அனைத்து திரைப்படங்களையும் திரையரங்கில் சென்று பார்க்க முயற்சி செய்யுங்கள் @


* தினேஷ்மாயா *

நீ..

Tuesday, April 16, 2013

வாழ்க்கை ..

அமாவாசை மதியம் ..

உணவுக்காக
காக்கைகள் காத்திருக்கும் காலம்
மலையேறிவிட்டது..

காக்கைகாக
ஒரு குடும்பமே
உண்ணாவிரதம் இருக்கிறது ..

ஓர் அமாவாசை மதியம் !!

* தினேஷ்மாயா *

இனி எப்போதும் ..



இனி என் செல்பேசியில் இருந்தும் என் வலைப்பக்கத்தில் பதிவு செய்யப் போகிறேன் ..
* தினேஷ்மாயா *

செங்காடே சிறுகரடே போய் வரவா

Saturday, April 13, 2013





ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா
சுடு சுடு காடு விட்டு போகிற பொணங்க போல
சன சன சனங்களெல்லாம் போகுது பாத மேல
உள்ளூரில் காக்கா குருவி இரை தேடுதே ஹோ..
பசியோட மனுச கூட்டம் வெளியேருதே

பொட்ட கல்லியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துட்டோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல்
வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங்கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு

ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா

வெளையாத காட்ட விட்டு விளையான்ட விட்ட விட்டு
வெளந்தியா வெகுளிச்சனம் வெளியேருதே ஓ...
வாழ்வவோடு கொண்டுவிடுமோ சாவோடு கொண்டுவிடுமோ
போகும் தெசை சொல்லாமலே வழி நீழுதே
உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே ஓ...
வயிரோடு வாழ்வது தானே பெரும் துன்பமே
பெல்லாத விதியின் மழைக்க போரோமே பஞ்சம் பொழைக்க
யார் மீள்வதோ யார் வாழ்வதோ யார் கண்டது

பாலம் பாலமா வெடிச்சு கிடக்குதே பாடு பட்டவன் பூமி
வெடிச்ச பூமியில் புதைக்க பாக்குதே கேடு கெட்டவன் சாமி
புலியங்கொட்டய அவிச்சு தின்னுதான் பொழைச்சு கிடக்குது மேனி
பஞ்சம் பொழைக்கவும் பசிய தேக்கவும் பச்ச பூமிய காமி

ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா

காலோடு சரல கிழிக்க கண்ணோடு புழுதி அடிக்க
ஊர் தாண்டியே ஊர் தேடியே ஊர் போகுதே
கருவேலங் காடு கடந்து கல்லூத்து மேடு கடந்து
ஊர் சேரலாம் உசுர் சேருமா வழி இல்லையே
கண்கானி பேச்ச நம்பி சனம் போகுதே ஓ...
நண்டுகள கூட்டிக் கொண்டு நரி போகுதே
உடல் மட்டும் முதலீடாக ஒரு நூறு சனம் போலாக
உயிர் மீழுமோ உடல் மீழுமோ யார் கண்டது

பொட்ட கல்லியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துட்டோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல்
வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங்கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு


ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா
சுடு சுடு காடு விட்டு போகிற பொணங்க போல
சன சன சனங்களெல்லாம் போகுது பாத மேல
உள்ளூரில் காக்கா குருவி இரை தேடுதே ஹோ..
பசியோட மனுச கூட்டம் வெளியேருதே

பொட்ட கல்லியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துட்டோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல்
வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங்கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு




படம் : பரதேசி
இசை : G.V. பிரகாஷ்குமார்
பாடியவர்கள் : மதுபாலகிருஷ்ணன், ப்ரகதி குருபிரசாத்
வரிகள் : வைரமுத்து


* தினேஷ்மாயா *

செந்நீர் தானா



செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம்பாதி கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா
ஆண்டைக்கு ஒரு பாதி ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே
எங்க மேலு காலு வெறும் தோளா போச்சே
அது கங்காணி செருப்புக்கு தோதா போச்சே


செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம்பாதி கண்ணீர் தானா

நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா

ஏ ஊசி மழையே ஊசி மழையே
எங்க உடலோடு உயிர் சூடு அத்து போச்சே
ஏ ஊதக்காத்தே ஊதக்காத்தே
எங்க பூர்வீக போர்வையும் பொத்து போச்சே
தேகத்தில் உள்ள எலும்புக்கு
ஒரு வெறி நாயும் தெரு நாயும் மோதுதே
வானத்தில் வாழும் நெஞ்சமோ
தன் மாராப்பை தாராமல் ஓடுதே
உயிர் காப்பாத்தும் தெய்வங்கள் கண் மூடுதே

ஊரெல்லாம் விட்டு நம் இளமை கெட்டு
நாம் வெளியானோம் பூனைக்கு வாக்கப்பட்டு
ஒரு மானம் கெட்டு சிறு சோறு திம்போம்
பேய் மழையோடும் பனியோடும் தூக்கங்கெட்டு
பாம்புக்கு பசி வந்ததே ஒரு சிறு கோழி என்னாகும் கூட்டிலே
யானையின் பெருங்காலிலே சிறு காளான்கள் என்னாகும் காட்டிலே
இவள் உயிர் காத்த ஒரு சொத்தும் பறிபோனதே


செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம்பாதி கண்ணீர் தானா

நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா
ஆண்டைக்கு ஒரு பாதி ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே
எங்க மேலு காலு வெறும் தோளா போச்சு
அது கங்கானி செருப்புக்கு தோதா போச்சு

படம் : பரதேசி

இசை : G.V.பிரகாஷ்குமார்

பாடியவர்கள் : கங்கை அமரன், ப்ரியா ஹிமேஷ்

வரிகள் : வைரமுத்து


* தினேஷ்மாயா *

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்



அனைவர்க்கும் என் மனமார்ந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ..

* தினேஷ்மாயா *

ஐந்து பேர்

Friday, April 12, 2013



உன் வாழ்க்கையில்

நீ 

உன் மனதிற்கு 

அருகில் வைத்திருக்கும் 

ஐந்து பேரை ,

மிக கவனமாக தேர்ந்தெடு..

அவர்களின் குணம்தான்

உன் குணத்தையும்

தீர்மானிக்கும்...


* தினேஷ்மாயா *

தொட்டுவிடாது


என்னதான் உங்கள் தொழில்நுட்பம்

விண்ணில் கால் பதித்தாலும்..

மனிதநேயம் என்னும் புனிதத்தை

தொட்டுவிடாது !

* தினேஷ்மாயா *

உன்னை ஏமாற்றாதே


இவ்வுலகில் நீ,

யாரை வேண்டுமானாலும் ஏமாற்று..

ஆனால்,

உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே..

உன் மனதிற்கு

உண்மையாய் இரு..

* தினேஷ்மாயா *

தைரியம் வேண்டும்


எல்லா நிலையிலும்

தன் உண்மை முகத்தையே

உலகிற்கு காட்ட

ஒருவனுக்கு நிச்சயம்

கொஞ்சம் அதிகமாகவே

தைரியம் வேண்டும்...

* தினேஷ்மாயா *

கொஞ்சம்..


       நான் யார் என்று பல சமயங்களில் எனக்கு நானே கேட்டுக்கொண்டதுண்டு. இந்த வாழ்க்கை நாடகத்தில் என் கதாபாத்திரம் என்ன, என் குணாதிசயம் என்னென்ன என்றெல்லாம் நான் அதிகம் சிந்தித்திருக்கிறேன். எனக்கு விவரம் தெரிந்த ஆரம்பகாலத்தில் விளையாட்டுதான் அதிகம் எனக்கு பிடிக்கும். பிறகு கொஞ்சம் படிப்பில் கவனம் செலுத்தியதால் வேறு எங்கும் கவனம் சிதறவில்லை. விடலைப்பருவம் வந்ததும் அந்த பருவத்திற்கே உரியதான நக்கல்,கிண்டல், சேட்டைகள் தொடர்ந்தது. பிறகு அவள் என்னுள் வந்தாள். காதலும் என்னுள் எட்டிப்பார்த்தது. நான் இருக்கும் இடத்தில் அனைவரும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதற்காக அவள் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றினாள். நானும் அவ்வாறே மாறினேன். எப்போதும் அனைவரிடத்தும் சிரித்துப்பேசி அனைவரின் கவலைகளையும் என்னுடம் பேசும்போது மறக்கவைக்கும் திறன் ஆண்டவனால் கிடைத்தது. காதலும் ஒருபக்கம் என் மனதில் வேறூன்றி இருந்தது.

      பொதுவாக நான் அதிகம் பேசுபவனாக இருந்தேன். அது காலப்போக்கில் தலைகீழாய் மாறியது. இப்போதெல்லாம் அதிகம் கவனிக்கிறேன். ஒருவர் பேசினால், அவர் மனதில் என்ன நினைத்துப்பேசுகிறார், எதற்காக பேசுகிறார் இப்படி இன்னும் பலவிஷயங்களை சிந்திக்கிறேன். அதிகம் படிப்பதால் இந்த மாற்றமா என்று எனக்கு தெரியவில்லை. சைக்காலஜியும் படிக்கிறேன். அதனாலேயே மக்களின் மனநிலையை புரிந்துக்கொள்ளும் ஆவலில் அவர்களை அதிகம் பேசவிட்டு நான் கவனிக்க ஆரம்பித்துவிடுகிறேன். இதுவும் ஒருவகை கலை தான். 

    அவள் பிரிந்து சென்றதிலிருந்து சிற்சில மாற்றங்கள் என்னுள் நிகழ்ந்திருப்பதை நானேஉணர்கிறேன். அதிகம் பேசமாட்டேன். உள்மனதில் இருக்கும் விஷயங்களை அதிகம் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள மாட்டேன். அதனாலோ என்னவோ எனக்கு நானே அடிக்கடி சொல்லிக்கொள்வேன். இவன் கொஞ்சம் அழுத்தமானவன் என்று. சாமான்யமாக என் மனதில் இருக்கும் விஷயங்களை வார்த்தைகளாக வாங்கிவிட முடியாது. ஏனோ தெரியவில்லை என் மனதை இங்கே என் வலையில் பகிர்ந்துக்கொண்ட அளவிற்கு அவளைத்தவிர வேறு எவரிடமும் பகிர்ந்ததில்லை. அப்படியொரு நபரை இறைவன் கொடுக்கவில்லை என்று சொல்லிவிடமுடியாது. அப்படியொரு நபரை நான் தேடிசெல்லவில்லை என்றும் சொல்லலாம். ஆரம்பத்தில் மாயா என்னும் என்னவளை தேடிக்கொண்டிருந்தேன். இன்னும் அந்த தேடல் என் மனதில் இருக்கிற்து. ஆனாலும் அவளே என்னைத்தேடி வரட்டும் நான் தேடி கலைத்துவிட்டேன் என்று மனம் சொல்கிறது.

     இந்த அழுத்தமான மனதை பகிர்ந்துக்கொள்ள எவரும் வேண்டாம். தனியாய் இருப்பதிலும் ஒரு சுகம் இருப்பதை இப்போது உணர்கிறேன் நான். ஆனாலும் இன்னொரு உண்மை என்னவெனில், இல்லற வாழ்வில் இருக்கும் வலியும் சுகமும் தனிதான்...