- பேருந்தில் ரொம்ப நேரம் இடம் கிடைக்காமல் நின்றுகொண்டு வருவோம். ஒரு நிறுத்தத்தில் சில பயணிகள் இறங்குவார்கள். நாம் அந்த இறுக்கைக்கு சென்று அமர்வதற்குள், அந்த நிறுத்தத்தில்தான் புதிதாக ஏறிய பயணி வந்து அந்த இருக்கையில் நமக்கு முன்னர் வந்து அமர்வார்..
- ஒரு ஓட்டலுக்கு சாப்பிட செல்கிறோம். நாம் ஒரு தோசை சொல்லி பத்து நிமிடங்கள் ஆகும். வெறும் இலையுடன் நாம் காத்திருப்போம். ஆனால் நாம் உட்கார்ந்த பிறகு நமக்கு அருகில் வந்து அமரும் நபர் நம் தோசை வரும் முன்னரே எதாச்சும் ஒரு உனவை ஆர்டர் செய்து நம் தோசை வரும் முன்னரே அவர் சாப்பிட்டு முடித்துவிட்டு சென்றிடுவார். என்னடா ஓட்டல் நடத்துறீங்கனு மனசுக்குள் கோவமாய் வரும்.
- தொலைதூர பேருந்தில் ஓர் இரவு நேரப் பயணத்தில் நமக்கு அருகில் ஒருவர் வந்து அமர்வார். தலை முழுக்க எண்ணெய் தெய்த்திருப்பார். நாம் நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும்போது அந்த எண்ணெய் தலையுடன் நம் தோழில் சாய்வார். எத்தனைமுறை சொன்னாலும் கேட்பதாயில்லை அவர். அப்போது எப்படி நமக்கு தூக்கம் வரும்.
- நமக்கு ரொம்ப பிடித்த திரைப்படத்தை முதல்முறையாக திரையரங்கில் பார்க்க சென்றிருப்போம். தெரியாத்தனமாக ஏற்கெனவே படம் பார்த்த ஒருவர் பக்கத்தில் அமர்ந்திருப்போம். ஒவ்வொரு காட்சியையும் அந்த காட்சி வரும் முன்னமே அவர் சொல்லி நம்மை கடுப்பேத்துவார் பாருங்க...
- தூக்கம் வராத ஓர் இரவில் அதிசயமாக நமக்கு பிடித்த புத்தகத்தை எடுத்து சில பக்கங்களை புரட்ட ஆரம்பித்திருப்போம். அப்போதுதான் திடீரென மின்சாரம் தடைபடும். ஓரிண்டு நிமிடங்கள் போராடி ஒருவழியாக தீப்பெட்டியை தேடி கண்டுபிடிப்போம். ஆனால் அதில் தீக்குச்சி ஒன்று கூட இருக்காது.
- எப்போதுமே காதலியுடன் வெளியே செல்ல மாட்டேன். அதிசயமாக அவள் விருப்பத்திற்கேற்ப அவளை வெளியே எங்காவது அழைத்து செல்வேன். ஒரு பழச்சாறு கடைக்கோ அல்லது பனிக்குழம்பியகத்திற்கு ( Ice Cream Shop) அழைத்து சென்று பேசிக்கொண்டிருப்போம். சொல்லிவைத்தார் போல, அப்பா தன் நண்பர்களுடன் அல்லது அவள் அண்ணன் தன் நண்பர்களுடன் எங்கள் இருக்கைக்கு அருகில் வந்து அமர்வார்.
- இரண்டு நாட்களில் சொந்த பந்தத்தின் திருமணம் ஒன்று. அழகழகான பெண்கள் எல்லாம் வருவார்கள். சரி, கொஞ்சம் முடியை அழகாய் திருத்தம் செய்துக்கொள்வோம் என்று சென்றால், முடித்திருத்தம் செய்பவர் அப்போதென்று பார்த்து மொத்தமாய் சொதப்பிவிடுவார்.
- சென்னையில் இருந்து ஊருக்கு ஒரு தனியார் பேருந்தில் செல்லும்போது, கொஞ்சம் அழகான பெண் ஒருத்தி என் இருக்கைக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்த அடுத்த நிமிடமே பின் இருக்கையில் இருக்கும் ஒரு வயதான பெண் ஒருவர் தம்பி கொஞ்சம் பின்னாடி வந்து உட்கார்ந்துக்குறியா, நாங்க லேடீஸ் ஒன்னா உட்கார்ந்துக்குறோம்னு சொல்வாங்க. ஆனால் என் பக்கத்தில் இருக்கும் பெண்ணே அமைதியாக இருப்பாள். இவங்களுக்கு என்ன வந்தது என்று மனசில் அப்படியொரு ரோஷம் வரும்.
- காதலியின் பிறந்தநாளன்று, சரியாக கவனிக்காத காரணத்தால் செல்பேசியில் அழைத்துபேச தொகை இல்லாமல் இருக்கும். குறுஞ்செய்திக்கூட போகாத நிலை. காலையில் நேரில் சென்று அவள் கோபத்தை வாங்கிக்கட்டிக்க வேண்டிய நிலை.
இன்னும் இது போன்ற தருணங்கள் வாழ்வில் ஏராளம் வரும். நம்மால் ஒன்றும் சொல்ல முடியாத நிலை, எதுவும் செய்ய முடியாத நிலை. வாழ்க்கையை வெறுக்க மாட்டோம் ஆனால் என்ன வாழ்க்கடா இது என்று நொந்துக்கொள்ளும் சில தருணங்கள் அனைவருக்குமே வரும். நேரம் கிடைக்கும்போது இன்னும் அதிகம் பதிவு செய்கிறேன்.
- அன்புடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment