அந்தந்த
வயசில் அது அது நடந்தாக
வேண்டும். வயசாகிவிட்டாலோ அல்லது அதற்கு முன்னர் நடந்தாலோ,
எல்லாமே கொஞ்சம் கஷ்டம்தான். 35 வயதாகும்
போதுதான் சிலர் திருமணத்தைப்பற்றியே சிந்திப்பர். இன்னும் சிலரோ, 18 வயதிலே 2 குழந்தைகளை
பெற்றெடுக்கின்றனர். கல்வியும் சரி. படிக்கிற வயதில் படிக்க வேண்டும். இங்கே அரசு வேலையிலும்
சேர அதிகபட்ச வயதாக 35 என்று நிர்ணயித்து இருக்கின்றனர். அதற்குமேல் எவ்வளவு முயன்றாலும்
அரசு வேலையில் சேர முடியாது. எனக்கு 18 வயதாகும்போதே அரசு வேலையில் சேர்ந்துவிட வேண்டும்
என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அப்போது எனக்கு வயது குறைவாக இருந்தது. அப்போதுதான் உணர்ந்தேன்.
சில விஷயங்களுக்கென்று சில வயது வரம்பு இருக்கிறது. அந்த வரம்புக்கு முன்னரோ அல்லது
பின்னரோ அதை எட்ட முடியாது, வயது இருக்கும்போதே அந்தந்த வேலைகளையும் கடமைகளையும் செய்து
முடிக்க வேண்டும் என்று…
- அன்புடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment