இலக்கணப்பிழை

Tuesday, December 25, 2012



இலக்கணப்பிழை என்பது வரவேற்கத்தக்க ஒன்று என்று எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை சொல்ல கேட்டிருக்கிறேன்.
    எனக்கும் ஆசைதான்.. இலக்கணப்பிழைகளோடு எதையாச்சும் எழுதவேண்டும் என்று.. 

    இயன்றவரை முயல்கிறேன்.

      • கிழிந்த என் இதயத்தை “ஊசிகள்” கொண்டு தைக்கிறேன்.
      • ஓரெழுத்தில் கவிதை செதுக்கினேன். “பிழைகளை”திருத்தம் செய்ய ஓடிவருகிறது இலக்கணம்.
      • களவாடிய “பொழுதுகளை” களவாடி சென்றவள் எங்கே??
      • காதல் “விதைகளை” விதைத்துவிட்டு “வலியை” மட்டும் அறுவடை  செய்கிறாள்..
      • நீயில்லாமல் நானில்லை.. இப்படி பல  “பொய்கள்” சொன்னவள் நீயடி..
      • இருப்பதோ இருவரின் இதழ்கள். பின்னர் அதை எப்படி முத்தம் எனலாம். “முத்தங்கள்” என்றுதானே பன்மையில் சொல்லவேண்டும்.
      • உனை தினமும் எண்ணி வீண் “ஏக்கங்கள்” கொள்கிறேன்.
      • என் காதல் தாகத்தை போக்க “கண்ணீரை” தந்தவள் நீ.
      • காதல் பசிக்கு கனவுகளை “உண்ண” கொடுக்கிறாய் நீ.
      • “ ஜென்மம் முழுவதும் ” உன்கூடவே இருக்க வேண்டும்.
      • என் காதல் நான் இறந்தபின்பும் “என்னுடன் வரும்”
      • மேகம் தான் மழையை பொழிகிறது. ஆனால், “வானம் பொழியுது” என்று சொல்கிறார்கள்.
      • என் கனவுகளுக்கு “சிறகு” தந்து வானில் பறக்கவிட்டிருக்கிறேன்.
      • “காதல் தேவதை” தினமும் கனவில் வந்து என்னை “தொல்லை பண்ணுகிறாள்”
      • ”பார்வைகளால்” என்னை கொல்கிறாள்.

    - அன்புடன்
    ****தினேஷ்மாயா****

    0 Comments: