இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

Monday, December 31, 2012



வாசகர்கள் அனைவர்க்கும் என் மனமார்ந்த ஆங்கிலபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

- அன்புடன்

****தினேஷ்மாயா****

கோ-ஹி-நூர் வைரம்

Sunday, December 30, 2012




உலகின் விலைமதிப்பற்ற வைரம் என்றால் அது கோ-ஹி-நூர் வைரம்தான். இந்தியர்களிடம் இருந்து ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு அவர்கள் நாட்டின் அருங்காட்சியகத்தை அலங்கரித்துவருகிறது இந்த வைரம். எது எப்படியோ, அது இந்தியர்களின் கைவண்ணத்திலும் கலை இரசனையாலும் உருவானது என்பதை எவரும் மறுக்க முடியாது.


- அன்புடன்

****தினேஷ்மாயா****

முத்தமிழ் இதுதானோ ?




‎* சென்னை தமிழ்
* மதுரை தமிழ்
* கோவை தமிழ் - இதுதானோ முத்தமிழ் என்பது ??


-அன்புடன்

****தினேஷ்மாயா****

விஞ்ஞான மயானம்






உலகம் விஞ்ஞான மயமாகிவிட்டது என்று அனைவரும் சொல்கிறார்கள். ஆனால், என்னைப்பொறுத்தவரை இந்த உலகம் விஞ்ஞான மயானமாகிவிட்டது என்றே சொல்வேன்...




- அன்புடன்

****தினேஷ்மாயா****

நெற்களஞ்சியம்



நமக்கெல்லாம் இன்றுவரை உணவளித்துவருவது இந்த நெற்கதிர்கள். விஞ்ஞானமயமாகிவிட்ட இந்த உலகத்தில் விவசாயத்திற்கு இடமில்லை. வெறும் விஞ்ஞானமும் உங்கள் தொழில்நுட்பமும் ஒருபோதும் உங்களுக்கு சோறுபோடாது. மனிதனின் உழைப்பும் இயற்கையுன் துணையும் இருந்தால்மட்டுமே இந்த உலகம் நகர்ந்து செல்லும். இல்லையே நரகத்தை இங்கேயே சந்திக்க வேண்டியிருக்கும் இனி வரும் தலைமுறைகள்.

- அன்புடன்

****தினேஷ்மாயா****

ஆலயமணி



ஆலயமணியானாலும் சரி, நாம் வீட்டில் வைத்திருக்கும் சிறிய மணியானாலும் சரி. நம் பூசைகள் அனைத்திலும் மணி கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். இதற்கு பல காரணங்கள் உண்டு. மணி அடிக்கும்போது அதில் இருந்து வெளிவரும் சப்தம் ஓங்காரத்தை உணர்த்துகிறது. மணியோசை கேட்கும்போது நம்மைச்சுற்றி இருக்கும் துஷ்ட சக்திகள் நம்மை விட்டு விலகும் என்பர். மணிக்கு இன்னும் பல சிறப்புகள் உண்டு.

- அன்புடன்

****தினேஷ்மாயா****

கோலம்



நம் தமிழர்களின் தொன்றுத்தொட்டு நடைமுறையில் இருக்கும்   கலாச்சாரத்தில் ஒன்று கோலம். எனக்கும் சில சிறு வகையான கோலங்கள் போடத்தெரியும். சின்ன வயசில் கொஞ்சம் கத்துக்கிட்டேன். என்னதான் ரங்கோலி கோலங்கள் வந்தாலும், புள்ளிக்கோலத்திற்கு இருக்கும் தனிச்சிறப்பை யாரும் மறுக்கமுடியாது.

- அன்புடன்

****தினேஷ்மாயா****

போதி மரம்



புத்தருக்கு ஞானம் கிடைத்ததாக சொல்லும் போதிமரம் இதுதான்.



- அன்புடன்

****தினேஷ்மாயா****

திரு அண்ணாமலை கோபுரம்


திரு அண்ணாமலை கோபுரமும் அதன் பின்புறத் தோற்றத்தில் மலையும். இந்த கோணத்தில் காணக்கிடைக்காத அரிய புகைப்படம்.



- அன்புடன்

****தினேஷ்மாயா****

நம்ம ஊர் சாப்பாடு



எங்கு சென்றாலும் எனக்கு எப்பவும் பிடிச்சது நம்ம ஊர் சாப்பாடுதான்.

- அன்புடன்

****தினேஷ்மாயா****

தைவிக ர்ஓ.. ( <-- ஓர் கவிதை )

Friday, December 28, 2012




என் உயிரால் வார்த்தை திரட்டி

என்னவளுக்காக

ஓர் கவிதை சொன்னேன்..

அது அவளுக்கு புரியவில்லை...

அந்த கவிதையின் பெயர்

“ என் காதல் ”


- அன்புடன்

****தினேஷ்மாயா****

இதயம் அழுமா ?



வழக்கமாக எல்லோருக்கும்

கண்கள்தான் அழும்...

எனக்கோ,

என் இதயம் அழுகிறது...



- அன்புடன்

****தினேஷ்மாயா****

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு



தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் பழங்கால கல்வெட்டு இது. தமிழ் ப்ராமி வகையை சேர்ந்த எழுத்துக்கள் இவை. என்ன எழுதியிருக்கிறது என்று இப்போதிருக்கும் நம் அறிவுக்கு புலப்படாது. ஆனால் எதோ இங்கும் அங்கும் நமக்கு தெரிந்த தமிழ் எழுத்துக்கள் தென்படுகிறது என்று நினைக்கும்போது நாம் இன்னும் தமிழை விடவில்லை என்று புரிகிறது.


- அன்புடன்

****தினேஷ்மாயா****

தாமரை கோவில் - டில்லி









டில்லியில் இருக்கும் தாமரை கோவில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று. ஒருமுறைதான் இங்கே சென்றிருக்கிறேன். இதன் அமைதி  என்னை மிகவும் கவர்ந்தது. அதோடு இந்த கோவிலின் உட்புறம் இருக்கும் இந்த தோற்றத்தை புகைப்படம் எடுக்க முயன்றேன் ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. இணையதளம் மூலம் என் ஆசையை    நிறைவேற்றிக்கொண்டேன்.


- அன்புடன்

****தினேஷ்மாயா****

இந்திய இரயில்வே



நான் பலமுறை பதிவு செய்திருக்கிறேன். இந்திய இரயில்வே என் மனதில் தனியாக ஒரு இடம் பிடித்திருக்கிறது. அதை மீண்டும் இங்கே கொஞ்சம் புதுமையாகவும் கொஞ்சம் அழுத்தமாக பதிய விரும்பினேன். அதான் இந்த புகைப்படம்..


- அன்புடன்

****தினேஷ்மாயா****

என் இந்தியா..




செயற்கைகோள் என் இந்தியாவின் அழகை ரசிக்கிறது போலும்..


- அன்புடன்

****தினேஷ்மாயா****

சுஜாதா இரசிகன்

Thursday, December 27, 2012



நான் எழுத்தாளர் சுஜாதாவின் இரசிகன். அவர் எழுத்துக்கள்தான் என் எழுத்துக்களுக்கு ஆசான். அவரின் எழுத்துக்கள்தான் என்னை எழுத வைத்தன. இது நான் என் வீட்டில் வாங்கி வைத்திருக்கும் சுஜாதாவின் நூல்களின் சிறு பகுதி..

நான் பச்சைத் தமிழன்



நான் பச்சைத் தமிழன் ....

- அன்புடன்

****தினேஷ்மாயா****

பச்சை பயணம்



இந்த இடத்தில் பயணிக்க ஆசை எனக்கு..

- அன்புடன்

****தினேஷ்மாயா****

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



      2012 - மிகப்பெரிய மாற்றங்களை என் வாழ்வில் தந்துள்ளது. வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சியும் காதலில் மிகப்பெரிய வீழ்ச்சியையும் தந்திருக்கிறது. என்ன இருந்தாலும், இந்தவருடமும் வழக்கமாக நன்றாகவே சென்றது. இனி உதயமாக இருக்கும் புது வருடத்தை புன்னகையுடன் வரவேற்க தயாராகிவிட்டேன். 

     இந்த புதிய வருடத்தில் ஒரு புதிய மனிதனாய் மாறவேண்டும் என்று நினைக்கிறேன். சென்ற வருடம் நான் பதிவு செய்ததைவிட என் வலைப்பக்கத்தில் இந்த வருடம் கொஞ்சம் அதிகம் பதிவு செய்திருக்கிறேன். இதுவே எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது. இனிவரும் வருடத்தில் இன்னும் அதிகமான பதிவுகளை இங்கே விட்டுசெல்லவேண்டும் என்பதே.

     அனைவர்க்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

- அன்புடன்
****தினேஷ்மாயா****

ஏகப்பத்தினி விரதன்

Tuesday, December 25, 2012




ஏகப்பத்தினி விரதன் என்று

எவனும் இல்லை இங்கு..

பெரும்பாலும்

“ஏகப்பட்ட பத்தினி” விரதனாகத்தான்

அனைவரும் இருக்கின்றனர்.


@ ஆண்களைவிட இந்த உண்மையை பெண்கள் நன்கு அறிவர்.


- அன்புடன்
****தினேஷ்மாயா****

வேடம்



அனைவரும் வேடமிட்டு திரிகின்றனர். வேடம் கலைந்தால் மேடை போய்விடும் என்பதால், அனைவரும் அந்தந்த வேடத்துடனேயே வாழப்பழகிவிட்டனர்..

- அன்புடன்
****தினேஷ்மாயா****

தெருவில்





  • அன்பு
  • உண்மை
  • ஜனநாயகம்
  • நீதி
  • தர்மம்
  • காதல்
  • நேர்மை
இவையாவும் இன்று தெருவில் கேட்பாரற்று கிடக்கின்றன.


- அன்புடன்

****தினேஷ்மாயா****

இலக்கணப்பிழை



இலக்கணப்பிழை என்பது வரவேற்கத்தக்க ஒன்று என்று எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை சொல்ல கேட்டிருக்கிறேன்.
    எனக்கும் ஆசைதான்.. இலக்கணப்பிழைகளோடு எதையாச்சும் எழுதவேண்டும் என்று.. 

    இயன்றவரை முயல்கிறேன்.

      • கிழிந்த என் இதயத்தை “ஊசிகள்” கொண்டு தைக்கிறேன்.
      • ஓரெழுத்தில் கவிதை செதுக்கினேன். “பிழைகளை”திருத்தம் செய்ய ஓடிவருகிறது இலக்கணம்.
      • களவாடிய “பொழுதுகளை” களவாடி சென்றவள் எங்கே??
      • காதல் “விதைகளை” விதைத்துவிட்டு “வலியை” மட்டும் அறுவடை  செய்கிறாள்..
      • நீயில்லாமல் நானில்லை.. இப்படி பல  “பொய்கள்” சொன்னவள் நீயடி..
      • இருப்பதோ இருவரின் இதழ்கள். பின்னர் அதை எப்படி முத்தம் எனலாம். “முத்தங்கள்” என்றுதானே பன்மையில் சொல்லவேண்டும்.
      • உனை தினமும் எண்ணி வீண் “ஏக்கங்கள்” கொள்கிறேன்.
      • என் காதல் தாகத்தை போக்க “கண்ணீரை” தந்தவள் நீ.
      • காதல் பசிக்கு கனவுகளை “உண்ண” கொடுக்கிறாய் நீ.
      • “ ஜென்மம் முழுவதும் ” உன்கூடவே இருக்க வேண்டும்.
      • என் காதல் நான் இறந்தபின்பும் “என்னுடன் வரும்”
      • மேகம் தான் மழையை பொழிகிறது. ஆனால், “வானம் பொழியுது” என்று சொல்கிறார்கள்.
      • என் கனவுகளுக்கு “சிறகு” தந்து வானில் பறக்கவிட்டிருக்கிறேன்.
      • “காதல் தேவதை” தினமும் கனவில் வந்து என்னை “தொல்லை பண்ணுகிறாள்”
      • ”பார்வைகளால்” என்னை கொல்கிறாள்.

    - அன்புடன்
    ****தினேஷ்மாயா****

    நியூட்டனின் நான்காம் விதி



     நியூட்டனின் நான்காம் விதி..

    “ காதல் எப்போதும் வலியைத்தான் தரும் ”




    - அன்புடன்

    ****தினேஷ்மாயா****

    எழுதி கிழித்த காதல் கடிதங்கள்



    268

    அவளுக்காக நான்

    எழுதி, கிழித்த காதல் கடிதங்களின்

    எண்ணிக்கை ...


    - அன்புடன்

    ****தினேஷ்மாயா****

    உலக அழகி



    உலக அழகி என்று

    ஏன் போட்டிவைத்து

    வருடாவருடம் ஒருத்தியை

    தேர்ந்தெடுக்கிறார்கள்..

    இந்த உலகே

    ஓர் பேரழகிதானே !!


    -அன்புடன்

    ****தினேஷ்மாயா****

    கவிதையே என் தூக்கம்




    பொதுவாக இரவில்

    கவிதை எழுதுவேன்..

    எப்போதாவது கவிதை வராதபோதுமட்டும்,

    தூங்கிவிடுவேன்...


    - அன்புடன்

    ****தினேஷ்மாயா****

    ரிக்‌ஷா வாழ்க




    கால் டாக்ஸி வந்துவிட்டதால்

    தங்கள் வருமானம்

    குறைந்துவிட்டது என்று

    போர்க்கொடி தூக்கும்

    ஆட்டோ ஓட்டுனர்களே ...

    நீங்கள் வந்தபோது

    இதே நிலைமைதான்

    எங்கள் -

    ரிக்‌ஷா தொழிலாளிகளுக்கு...


    - அன்புடன்

    ****தினேஷ்மாயா****


    கருணை மழை




    கருணை இல்லங்களில்

    மட்டும்தான்

    கருணை மழைகள்

    பொழிகின்றன..

    நம் மனதினில் அல்ல...


    - அன்புடன்

    ****தினேஷ்மாயா****

    சிகையலங்காரம்




      இன்று சிகையலங்காரம் செய்துக்கொள்ள சென்றேன். வழக்கத்தைவிட அதிக நேரம் ஆகிவிட்டது அங்கே. எல்லாவற்றையும் பதிவு செய்கிறேன் நான். சரி இதையும் கொஞ்சம் பதிவு செய்வோமே என்று நினைத்தேன்.
     எனக்கு நினைவு தெரிஞ்த நாளிலிருந்து எனக்கு பத்து வயது ஆகும்வரை என் கிராமத்தில் இருக்கும் ஒருவரிடம்தான் எப்போதுமே முடிதிருத்தம் செய்துக்கொள்வேன். அவர் பெயர் இன்னமும் ஞாபகம் இருக்கிறது. திரு.வேதநாயகம். அவர் வரு நாதஸ்வர கலைஞரும்கூட. அப்பாதான் என்னை மாதம் ஒருமுறை அவர் கடைக்கு கூட்டி செல்வார். அந்த நாற்காலியின் மீது ஒரு சின்ன பலகையை வைத்து அதில் என்னை உட்காரவைத்து முடிதிருத்தம் செய்வார். ( நான் அப்போ சின்ன பையன்.. அதான்.. )
    நான் ஏழாவது படிக்கும்போதுதான் முதல்முறையாக என்னை அந்த நாற்காலியில் உட்காரவைத்து முடிதிருத்தம் செய்தார்கள். அட.. நான் இப்போ வளர்ந்துட்டேன்ல..
    நான் அங்கே ரசித்த சில விஷயங்களை இங்கே பகிர்கிறேன்.
    முதலாவதாக என்னை அதிகம் கவர்ந்தது எதிரும் புதிருமாக வைத்திருக்கும் கண்ணாடி பிம்பங்கள். அதில் நம் உருவம் கணக்கிலடங்காமல் தோன்றிக்கொண்டே இருக்கும். எத்தனை பிம்பங்கள் என் கண்ணுக்கு தெரிகிறது என்று நான் என்னால் இயன்றவரை எண்ணிக் கொண்டிருப்பேன்.
    இங்கே எல்லா முடித்திருத்தகத்திலும் கட்டாயம் இரண்டு செய்தித்தாள்கள் இருக்கும். அப்படியே வானொலி அல்லது தொலைக்காட்சி இதில் எதாச்சும் ஒன்று கண்டிப்பாக இருக்கும்.
    அப்புறம், விதவிதமாக சிகையலங்காரங்கள் கொண்ட சில போஸ்டர்கள் அங்கே ஒட்டப்பட்டிருக்கும். ஆனால் ஒரு விஷயம் நீங்க இங்க கவனிக்கனும். அதில் இருப்பதுபோல இவர்களுக்கு வெட்டிவிடவும் தெரியாது, அங்கே வரும் யாரும் அப்படி வெட்டிவிட வேண்டும் என்று கேட்கவும் மாட்டார்கள். வெறும் போஸ்டரைமட்டும் வெறித்து பார்த்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
    பலவகையான பவுடர்கள் அங்கே வைத்திருப்பார்கள். பலவிதமான சீப்புகளும் இருக்கும். சீப்புகளிலும் இத்தனை வகை இருக்கா என்று அங்கேதான் தெரிந்துக்கொண்டேன்.
    எனக்கு ஒரு பெருமிதம் என்ன தெரியுமா. பத்து வயதிலேயே Rolling Chair-ல நான் உட்கார்ந்திருக்கேன் என்பதுதான்.
    ஒருசில கடைகளில் பார்த்திருக்கேன். முடிதிருத்தம் செய்பவர் ஒரு சிற்பி சிலையை செதுக்குவது போல, இவரும் தன் செயலை அவ்வளவு ரசித்து செய்வார். சிலர் இருக்கிறார்கள். ஒருவன் சிக்கிவிட்டான் என்று நம் தலையை ஒருவழி செய்துவிடுவார்கள்.
    இன்னும் இங்கே நான் ரசித்த விஷயங்கள் ஏராளம். நேரம் இல்லாத காரணத்தால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

     - அன்புடன்
    ****தினேஷ்மாயா****

    உலகம் அழியுமா ?




           உலகம் அழியுமா என்ற கேள்வி பலரின் மனதிலும் பரவலாக வந்து செல்கிறது சில நாட்களாக. அவர்களைப்போன்றோருக்கு என் தரப்பு வாதத்தை முன்வைக்க விரும்புகிறேன். இந்த வெட்கங்கெட்ட மனிதனை பொறுத்தவரை உலகம் என்பது 700 கோடி மனிதனை கொண்டது மட்டுமே என்று நினைத்துக்கொண்டிருக்கிறான். ஆனால், இந்த மனிதனே வெறும் 4 இலட்சம் வருடங்களுக்கு முன்னர் தோன்றியவன். ஆனால் இந்த பூமியோ 450 கோடி வருடங்களுக்கு முன்பே தோன்றியது. இயற்கையை பொறுத்தவரை மனிதன் என்பவனும் ஒருவகை விலங்கினம். அவ்வளவுதான். அவனைத்தவிர இந்த உலகில் ஏராளமான உயிரினங்கள் இருக்கின்றன. அதையும்விட பஞ்சபூதங்களால் ஆனவை இந்த உலகம். 

        நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். இந்த ஐந்தும் அழிந்தால் வேண்டுமானால் உலகம் அழியும் என்று சொல்வேன் நான். சுமார் 10 கோடி வருடங்களுக்கு முன்னர், இப்போது இந்த உலகத்தில் மனிதர்கள் எத்தனைபேர் இருக்கிறோமோ அதைவிட பல்லாயிரம்  மடங்கு அதிகமாக இருந்த டைனோசர்கள் வாழ்ந்துவந்தன. இந்த உலகம் முழுதும் பரவியிருந்த அந்த உயிரினங்கள் இப்போது எங்கே ?

             அத்தனை உயிரினங்கள் அழிந்தபின்னும் இந்த உலகம் இன்னமும் அழியாமல் இந்த மனிதன் போன்ற விலங்கினங்களுக்கு வாழ்விடம் அளித்துவருகிறது. உலகம் ஒருபோதும் அழியாது. உலகத்தில் வாழும் உயிரினங்கள் வேண்டுமானால் அழியுமே தவிர உலகம் என்றுமே அழியாது. அப்படி இந்த உலகத்திற்கு அழிவு வருமானால் அது இந்த மனிதனால் மட்டுமே வரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.


    - அன்புடன்
    ****தினேஷ்மாயா****

    நேரம் இருக்கிறதா ??

     

     நம்மில் பலரும் தவறாக எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்ன தெரியுமா ?

    இன்றைவிட நாளைதான் அதிக நேரம் இருக்கும். இந்த வேலையை நாளை செய்துக்கொள்ளலாம் என்று.

    நாளை என்பது நிச்சயமில்லாத ஒன்று. அதன்மீது அசாத்திய நம்பிக்கை வைப்பது சரியா சொல்லுங்கள்..

    இன்றைய வேலையை இன்றே முடிப்பதுதான் சிறந்தது..


    - அன்புடன்

    ****தினேஷ்மாயா****

    ஆசைகள் இன்றி



        ஆசைகள் தான் உலகத்தில் நமக்கு வரும் அனைத்து துன்பங்களுக்கெல்லாம் காரணம். அவர் வாக்கின்படி, இயன்றவரை ஆசைகளை குறைத்துக்கொண்டு வாழ முடிவு செய்திருக்கிறேன்.


    - ஆசைகளுடன்

    **** தினேஷ்மாயா ****

    Facial




         இன்னைக்கு ஒரு நாள் விடுமுறை..

    தலைக்கு மேல வேல இருந்துச்சுனு முடிவெட்ட சென்றேன். எல்லாம் முடிஞ்சு முகத்தில் எதோ க்ரீம் பூசி ஒரு மணி நேரம் கண்ணைமூடி உட்கார வெச்சுட்டான். அப்புறம் திரும்பவும் ரெண்டு மூனு க்ரீமெல்லாம் பூசி இன்னும் அரைமணி நேரம் உட்கார வெச்சான். எல்லாம் முடிச்சு முன்னூறு ரூபாயை புடுங்கிட்டான். என்னடானு கேட்டா...

    “சார்.. இதான் சார் பேஷியல்”-னு கூலா சொல்றான்..
     

    மனசாட்சி: “ நான் கேட்டனா.. எனக்கு பேஷியல் பண்ணுனு நான் கேட்டனா.. ??”
     
    எனக்கென்ன கடுப்புனா, 2 மணிநேரம் தேவையில்லாம என்ன அங்கேயே அரஸ்ட் பண்ணி வெச்சிடானேனுதான்.

    - அன்புடன்

    ****தினேஷ்மாயா****

    காதல் என்று சொல்லும்போது





    காதல் என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது..
    கோவமாகர்மம் புடிச்ச காதல்”-னு சொல்லும்போதுதான் உதடுகள் கூட ஒட்டும்...

    - அன்புடன்

    ****தினேஷ்மாயா****

    Gold Medal..



     
        தேர்வுக்கு படிச்சதெல்லாம் இந்த காதல் மாதிரியே மறக்க முடியாதமாதிரி இருந்திருந்தா இன்னைக்கு நானும் Gold Medal வாங்கியிப்பேன் !!

    - அன்புடன்

    ****தினேஷ்மாயா****

    இதுபோன்ற தருணங்களில்


    • பேருந்தில் ரொம்ப நேரம் இடம் கிடைக்காமல் நின்றுகொண்டு வருவோம்.  ஒரு நிறுத்தத்தில் சில பயணிகள் இறங்குவார்கள். நாம் அந்த இறுக்கைக்கு சென்று அமர்வதற்குள், அந்த நிறுத்தத்தில்தான் புதிதாக ஏறிய பயணி வந்து அந்த இருக்கையில் நமக்கு முன்னர் வந்து அமர்வார்..
    • ஒரு ஓட்டலுக்கு சாப்பிட செல்கிறோம். நாம் ஒரு தோசை சொல்லி பத்து நிமிடங்கள் ஆகும். வெறும் இலையுடன் நாம் காத்திருப்போம். ஆனால் நாம் உட்கார்ந்த பிறகு நமக்கு அருகில் வந்து அமரும் நபர் நம் தோசை வரும் முன்னரே எதாச்சும் ஒரு உனவை ஆர்டர் செய்து நம் தோசை வரும் முன்னரே அவர் சாப்பிட்டு முடித்துவிட்டு சென்றிடுவார். என்னடா ஓட்டல் நடத்துறீங்கனு மனசுக்குள் கோவமாய் வரும்.
    • தொலைதூர பேருந்தில் ஓர் இரவு நேரப் பயணத்தில் நமக்கு அருகில் ஒருவர் வந்து அமர்வார். தலை முழுக்க எண்ணெய் தெய்த்திருப்பார். நாம் நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும்போது அந்த எண்ணெய் தலையுடன் நம் தோழில் சாய்வார். எத்தனைமுறை சொன்னாலும் கேட்பதாயில்லை அவர். அப்போது எப்படி நமக்கு தூக்கம் வரும்.
    • நமக்கு ரொம்ப பிடித்த திரைப்படத்தை முதல்முறையாக திரையரங்கில் பார்க்க சென்றிருப்போம். தெரியாத்தனமாக ஏற்கெனவே படம் பார்த்த ஒருவர் பக்கத்தில் அமர்ந்திருப்போம். ஒவ்வொரு காட்சியையும் அந்த காட்சி வரும் முன்னமே அவர் சொல்லி நம்மை கடுப்பேத்துவார் பாருங்க...
    • தூக்கம் வராத ஓர் இரவில் அதிசயமாக நமக்கு பிடித்த புத்தகத்தை எடுத்து சில பக்கங்களை புரட்ட ஆரம்பித்திருப்போம். அப்போதுதான் திடீரென மின்சாரம் தடைபடும். ஓரிண்டு நிமிடங்கள் போராடி ஒருவழியாக தீப்பெட்டியை தேடி கண்டுபிடிப்போம். ஆனால் அதில் தீக்குச்சி ஒன்று கூட இருக்காது.
    • எப்போதுமே காதலியுடன் வெளியே செல்ல மாட்டேன். அதிசயமாக அவள் விருப்பத்திற்கேற்ப அவளை வெளியே எங்காவது அழைத்து செல்வேன். ஒரு பழச்சாறு கடைக்கோ அல்லது பனிக்குழம்பியகத்திற்கு ( Ice Cream Shop) அழைத்து சென்று பேசிக்கொண்டிருப்போம். சொல்லிவைத்தார் போல, அப்பா தன் நண்பர்களுடன் அல்லது அவள் அண்ணன் தன் நண்பர்களுடன் எங்கள் இருக்கைக்கு அருகில் வந்து அமர்வார்.
    • இரண்டு நாட்களில் சொந்த பந்தத்தின் திருமணம் ஒன்று. அழகழகான பெண்கள் எல்லாம் வருவார்கள். சரி, கொஞ்சம் முடியை அழகாய் திருத்தம் செய்துக்கொள்வோம் என்று சென்றால், முடித்திருத்தம் செய்பவர் அப்போதென்று பார்த்து மொத்தமாய் சொதப்பிவிடுவார்.
    • சென்னையில் இருந்து ஊருக்கு ஒரு தனியார் பேருந்தில் செல்லும்போது, கொஞ்சம் அழகான பெண் ஒருத்தி என் இருக்கைக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்த அடுத்த நிமிடமே பின் இருக்கையில் இருக்கும் ஒரு வயதான பெண் ஒருவர் தம்பி கொஞ்சம் பின்னாடி வந்து உட்கார்ந்துக்குறியா, நாங்க லேடீஸ் ஒன்னா உட்கார்ந்துக்குறோம்னு சொல்வாங்க. ஆனால் என் பக்கத்தில் இருக்கும் பெண்ணே அமைதியாக இருப்பாள். இவங்களுக்கு என்ன வந்தது என்று மனசில் அப்படியொரு ரோஷம் வரும்.
    • காதலியின் பிறந்தநாளன்று, சரியாக கவனிக்காத காரணத்தால் செல்பேசியில் அழைத்துபேச தொகை இல்லாமல் இருக்கும். குறுஞ்செய்திக்கூட போகாத நிலை. காலையில் நேரில் சென்று  அவள் கோபத்தை வாங்கிக்கட்டிக்க வேண்டிய நிலை.
    இன்னும் இது போன்ற தருணங்கள் வாழ்வில் ஏராளம் வரும். நம்மால் ஒன்றும் சொல்ல முடியாத நிலை, எதுவும் செய்ய  முடியாத நிலை. வாழ்க்கையை வெறுக்க மாட்டோம் ஆனால் என்ன வாழ்க்கடா இது என்று நொந்துக்கொள்ளும் சில தருணங்கள் அனைவருக்குமே வரும். நேரம் கிடைக்கும்போது இன்னும் அதிகம் பதிவு செய்கிறேன்.

    - அன்புடன்

    ****தினேஷ்மாயா****

    Sex



    நான் ஒரு புத்தகத்தில் படித்து ரசித்த வாசகம் இது.

    " Sex is happening everywhere, except in Bedrooms "

    படுக்கையறைகளில் மட்டுமே அரங்கேற வேண்டிய காமம் அந்த இடத்தைத்தவிர எல்லா இடங்களிலும் அரங்கேறி வருகிறது..

    படித்ததும் மனதில் நச்சென்று அமர்ந்துவிட்டது இந்த கருத்து. அதான் இங்கே பதிந்தேன்.

    - அன்புடன்

    ****தினேஷ்மாயா****

    பசி



    பசி என்ற ஒன்று

    இருப்பதால்தான்

    இன்னமும் மனிதன்

    உலகில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறான்...

    @ அது எதற்கான பசி என்பது ஒவ்வொரு மனிதனை பொறுத்தது.

    - அன்புடன்

    ****தினேஷ்மாயா**** 

    கண் இல்லை





    காதலுக்கு மட்டும் இல்லை,

    சில நேரங்களில்

    காமத்திற்கும் கூட

    கண் இல்லை...

    ( காதலையும் காமத்தையும் உணர்ந்தவர்களுக்கு இது புரியும் )


    - அன்புடன்

    ****தினேஷ்மாயா****

    வயசு




         அந்தந்த வயசில் அது அது நடந்தாக வேண்டும். வயசாகிவிட்டாலோ அல்லது அதற்கு முன்னர் நடந்தாலோ, எல்லாமே கொஞ்சம் கஷ்டம்தான். 35 வயதாகும் போதுதான் சிலர் திருமணத்தைப்பற்றியே சிந்திப்பர். இன்னும் சிலரோ, 18 வயதிலே 2 குழந்தைகளை பெற்றெடுக்கின்றனர். கல்வியும் சரி. படிக்கிற வயதில் படிக்க வேண்டும். இங்கே அரசு வேலையிலும் சேர அதிகபட்ச வயதாக 35 என்று நிர்ணயித்து இருக்கின்றனர். அதற்குமேல் எவ்வளவு முயன்றாலும் அரசு வேலையில் சேர முடியாது. எனக்கு 18 வயதாகும்போதே அரசு வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அப்போது எனக்கு வயது குறைவாக இருந்தது. அப்போதுதான் உணர்ந்தேன். சில விஷயங்களுக்கென்று சில வயது வரம்பு இருக்கிறது. அந்த வரம்புக்கு முன்னரோ அல்லது பின்னரோ அதை எட்ட முடியாது, வயது இருக்கும்போதே அந்தந்த வேலைகளையும் கடமைகளையும் செய்து முடிக்க வேண்டும் என்று…

    - அன்புடன்
    ****தினேஷ்மாயா****

    பூவாசம்



    பூ மார்க்கெட்டின் உள்ளே
    நடந்து செல்கிறேன்..
    எந்தவித மாற்றமும்
    என்னுள் ஏற்படவில்லை..
    ஒருமுழம் மல்லிப்பூ வைத்துக்கொண்டு,
    என்னவள் என்னை கடந்து சென்றாள்…
    எங்கே நான் ??


    - அன்புடன்

    ****தினேஷ்மாயா****

    நீதானே என் பொன்வசந்தம்




     நேற்று இரண்டாவதுமுறையாக நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தேன். ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் புதிதாய் பார்க்கும் அனுபவம் எனக்கு. பாடல்கள்தான் என்னை அதிகம் கவர்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வருவது போலவே சில வசனங்களும் வசன உச்சரிப்புகளும் இருப்பதால் அந்த படத்தையே சில காட்சிகள் நினைக்க வைக்கிறது. பல காட்சிகள் கௌதம் மேனனின் தனி பாணியில் அமைத்திருக்கிறார் அவைகளை வெகுவாக ரசித்தேன். 

    437 மின்னஞ்சல்களை நித்யாவிற்காக எழுதி அவளுக்கு அனுப்பாமல் ஒரே நாளில் அத்தனையையும் வருன் அவளுக்கு அனுப்புவது சற்று வித்தியாசமாக இருந்தது.

    Punish me, but pls Forgive me - வசனம் ரொம்பவே பிடித்திருந்தது.

    Forget and Forgive - என்னும் தலைப்பில் சமந்தா பேசுவதை பெரும்பாலும் யாரும் கவனித்திருக்க மாட்டார்கள், அப்போது சந்தானத்தின் பேச்சைத்தான் அனைவரும் ரசித்திருப்பார்கள். ஆனால் அப்போது சமந்தா ஆங்கிலத்தில் பேசுவது ரொம்பவே கவர்ந்தது. நமக்கும் சரி, நம்மை அதிகம் நேசித்தவர்க்கும் சரி இரண்டாவது வாய்ப்பு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்வார். மிகப்பெரிய தத்துவம் இது, ஆனால் என்ன ஆங்கிலத்தில் சொல்வதால் பலருக்கு இது சென்று சேராமல் போய்விட்டது.

    இதை படமாக பார்ப்பவர்களுக்கு நிஜமாகவே வெறுப்புதான் வரும். ஆனால் இதை ஒரு காதலாக பார்ப்பவர்க்கு நிஜமான காதல் போன்றே தோன்றும். நேற்று என் நண்பருடன் படம் பார்க்க சென்றேன். கொஞ்சம் அறுவை என்று ஆரம்பத்தில் சொன்னவர் இடைவேளையில் தன் காதலைப்பற்றி முதல்முறையாக என்னிடம் பேசினார். அப்போது அவரிடம் சொன்னேன், இதுதான் இந்த திரைப்படத்தின் வெற்றி. உங்களுக்குள் மறைந்திருக்கும் உங்கள் காதலை வெளிகொண்டுவரும். அதான் போஸ்டரிலேயே போட்டிருக்கிறார்கள்.. This could be your love story !!! என்று.

    கௌதம் மேனன், இசைஞானியுடன் இணைந்து பணியாற்றவே இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். கதையைவிட இசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இசையும் பாடல்களும் தனியாக இல்லாமல் திரைப்படத்தோடு ஒருங்கே பயணிப்பதால் படம் வேறு இசை வேறு என்று பிரித்து பார்க்க முடியவில்லை.

    இதை கதையாக பார்க்காமல் காதலாக பார்க்கிறேன் நான். இன்னும் பல முறை பார்ப்பேன் என்று உறுதியாக கூறிவிட்டு இப்போதைக்கு விடைப்பெறுகிறேன்.


    - அன்புடன்

    ****தினேஷ்மாயா****

    முருகன்

    Monday, December 24, 2012



    இது அவள் செல்பேசியில் இருந்து அவளுக்கு தெரியாமல் எடுத்த முருகன் படம் இது. அவளுக்கும் எனக்கும் முருகன் தான் அதிகம் பிடிக்கும். தெரிந்தோ தெரியாமலோ முருகன் எங்களை சேரவும் செய்தார் பிரியவும் செய்தார்...

    - அன்புடன்

    **** தினேஷ்மாயா ****

    நாமும் அனாதைதான்




     பெற்றோர் இல்லாமல் இருப்பவர்கள் மட்டும் அனாதைகள் அல்ல, உற்றார் உறவினர் இருந்தும் அன்பிற்காக ஏங்கும் நாமும் ஒருவகையில் அனாதைதான்.

    - அன்புடன்

    ****தினேஷ்மாயா****

    என் வீட்டில் ஏற்றிய கார்த்திகை தீபம்

    Sunday, December 23, 2012



    எல்லா புகழும் இறைவனுக்கே என்பார்கள், இந்த தீபத்தை ஏற்றிய புகழ் என் தங்கைக்கும் அன்னைக்கும் செல்லும்.

    - அன்புடன்
    ****தினேஷ்மாயா****

    * கும்கி *



    * கும்கி *

       பிரபு சாலமனின் இன்னுமொரு இயற்கை படைப்பு. மைனா திரைப்படத்தின் சாயலை இதிலும் கொஞ்சம் தந்திருக்கிறார். இருப்பினும் ஒரு வித்தியாசமான கதைக்களம். இங்கே திரையரங்கில் பத்து நாட்களாக இடம் கிடைக்கவில்லை. அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் என்றுதான் ஓடுகிறது. 

      படம் அருமை. சாதாரண கதை. திரைக்கதைதான் இந்த படத்திற்கு பலம். இசையும் ஒளிப்பதிவும் திரைக்கதையையும் நம்மையும் நகர்த்தி செல்கிறது. விக்ரம் பிரபு புதுமுகம் என்று தெரியாதபடி நடித்திருக்கிறார். நடிகர் திலகம் மற்றும் இளைய திலகம் இவர்களின் வாரிசாயிற்றே. அந்த சாயல் இருக்காதா என்ன. லஷ்மி மேனன் சுந்தரபாண்டியனுக்கு அடுத்து இதிலும் கலக்கியிருக்கிறார். தன் கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இதுவரை இரண்டுமுறை இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தாச்சு, இன்று இரவு பத்துமணி காட்சிக்கு நண்பர்கள் அழைப்பை ஏற்று மூன்றாவது முறையாக பார்க்க செல்கிறேன். சுந்தரபாண்டியன் திரைப்படத்தை திரையரங்கில் இரண்டு முறை பார்த்தேன் அடுத்து கும்கியை இரண்டுமுறை பார்த்திருக்கேன், இன்று மூன்றாவது முறையாக பார்க்கப்போறேன்.


    சற்று வித்தியாசமான கதை. அறுவடைக்கு பங்கம் விளைவிக்கும் காட்டு யானையை விரட்ட கும்கி யானையை ஒரு கிராமமே ஒன்று சேர்ந்து அழைத்துவருகிறது. வழக்கமான தமிழ் சினிமாவிற்கு தேவையானதை சேர்த்து விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர்.

    பாடல்கள் அனைத்தும் அருமை. “சொல்லிட்டாலே அவ காதல” பாடலில் காட்டும் அருவியை படம் பார்க்கும் எவராலும் மறக்க முடியாது. இதற்காகவே இன்னுமொருமுறை கூட படம் பார்க்க செல்வேன். கதைக்களத்திற்காக இயக்குனர் தேர்ந்தெடுத்திருக்கும் இடம் கண்ணுக்கு குளிர்ச்சியாய் அமைகிறது. 

    படத்திலேயே எனக்கு அதிகம் பிடித்த காட்சி, மேலே நான் போட்டிருக்கும் காட்சிதான். (மாணிக்கம்)யானையின் தந்தத்தை பிடித்துக்கொண்டு பொம்மா மாணிக்கத்திற்கு முத்தம் கொடுப்பது. 

    அறுவடை ஆரம்பிக்கும் முன்னர் யானை ஊருக்குள் வரும். அப்போது பயிர்கள் அனைத்தும் பச்சை பசேல் என்று காட்சியளிக்கும். அறுவடையின் போது யானைக்கு மதம் பிடிக்கும். அப்போது வயல்வெளியின் பக்கத்தில்தான் யானையை கட்டியிருப்பார்கள். அப்போது பயிர்களைப் பார்த்தால், நன்கு பயிர் முற்றி மஞ்சள் நிற்மாய் காட்சியளிக்கும். இயக்குனர் இந்த விஷயத்தில் கொஞ்சம் அதிகமாகவே கவனம் செலுத்தியிருக்கிறார் என்று படம் பார்க்கும்போதே கவனித்து ரசித்தேன்.

    படத்தின் கடைசியில் இரண்டு யானைகளுக்கும் நடக்கும் சண்டை கொஞ்ச நேரமானாலும் வெகுவாக ரசிக்கும்படி இருந்தது. அனைத்தும் கிராபிக்ஸ் என்று தெரியாதபடி இருந்தது இன்னும் ரசிக்கவைத்தது.

    தம்பி ராமையாவின் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது. மருமகனின் நிழலில் வாழும் தாய்மாமனாய் வருகிறார். தனக்குரிய கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

    பாடல்கள் அனைத்தும் சீரான இடைவேளையில் அதுவும் கதையோடு ஒட்டி அமைந்திருக்கிறது. தேவையான இடத்தில் தேவையான பாடல்களை கவிஞர் யுகபாரதியும் இசையமைப்பாளர் இமானும் கொடுத்திருக்கின்றனர்.

    “கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆச மச்சாம்” பாடல் ஆட்டம் போட்டு ரசிக்க வைக்கிறது. கொஞ்ச நேரம் வந்தாலும் சரியான நேரத்தில் பாடல் வந்து ரசிகர்கள் அனைவரையும் ஆடவைத்துவிட்டு செல்கிறது. 

    இந்த திரைப்படத்தை திரையரங்கில் மட்டுமே பாருங்கள். அப்போதுதான் இந்த படத்தை பார்த்த முழு திருப்தி கிடைக்கும்.

    - அன்புடன்

    ****தினேஷ்மாயா****

    நீதானே என் பொன்வசந்தம்




     * நீதானே என் பொன்வசந்தம் *

       கௌதம் வாசுதேவ் மேனனின் இன்னொரு காதல் காவியம். வழக்கமாக காதக் கதையை அவர் பாணியில் கொடுத்திருக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா போல இல்லை என்று சொல்பவர்கள் கவனத்திற்கு, எந்த திரைப்படத்தையும் ஒரு இயக்குனர் தான் ஏற்கெனவே எடுத்த திரைப்படம் போல் இருக்ககூடாது என்றுதான் நினைப்பார். அது புரியாமல் அதைப்போல் இது இல்லை என்று பேசினால் எப்படி. 

        எனக்கு இந்த திரைப்படம் ரொம்பவே பிடிச்சிருக்கு. This could be your love story-னு போஸ்டரில் போட்டிருந்துச்சு. அதனாலேயே, பலர் கல்லூரியை கட் அடிச்சிட்டுத்தான் படம் பார்க்க போவாங்க, ஆனால் நான் அலுவலகத்தை கட் அடிச்சிட்டு படம் பார்க்க சென்றேன். Yes Of Course. This seems to be my love story-னு மனசு பதில் சொல்லிச்சு.

       பாடல்கள் அனைத்து மிக அருமை. படம் பார்க்கும் வரை ஒரு பாடலைக்கூட கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இப்போது இதை எழுதும்போது கூட இந்த திரைப்படத்தின் பாடல்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. படம் பார்க்கும்போது பத்து நிமிடத்திற்கு ஒரு பாடல் வருவதைப்போல் உணர்ந்தேன். இப்படத்தின் பாடல்களின் மொத்த நேரம் 42 நிமிடங்கள். இப்போதுதான் அதிகமுறை இந்த படத்தின் பாடல்களை கேட்டுவருகிறேன். எந்த பாடல் அதிகம் பிடிக்கிறது என்று சொல்ல முடியாமல் இருக்கிறேன். இருப்பினும் என் வலையில் இந்த பதிவிற்கு முன்னர் எழுதிய நான்கு பாடல்கள் என் மனதை அதிகம் கவர்ந்தது. 
      
       வழக்கமாக கௌதம் மேனனின் படங்கள் என்றால் பாடலாசிரியை தாமரை தான் பாடல்கள் அனைத்தையும் எழுதுவார். இம்முறை நா.முத்துகுமாரின் வரிகளில் நம்மை கைது செய்கிறார். இளையராஜாவின் இசையோடு நம்மை இசையால் தண்டிக்கிறார் இயக்குனர். ஆனால் இந்த இசை தண்டனை ரசிக்கும்படி அமைந்திருக்கிறது.

     “ காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன் ” பாடலின் வரிகள் அனைத்து கவித கவித என்று சொல்லும்படி அவ்வளவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த பாடலை கேட்டிராத உங்கள் பெண் தோழியிடம் இந்த வரிகளை எழுதி கொடுங்கள் அப்படியே உங்களுக்காக அவர் உருகுவார்.

    “ முதல்முறை பார்த்த நியாபகம் ” பாடலும் புதுரகம். அதிகம் ரசிக்க வைத்தது.

    “ வானம் மெல்ல கீழிறங்கி ” பாடல் இசைஞானியின் குரலுக்காகவே எத்தனைமுறை வேண்டுமானாலும் கேட்கலாம். வரிகளும் அருமை. திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது.

    “ என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன் ” பாடலும் கவிதைரகம். 

    மற்ற பாடல்களும் குறைச்சல் இல்லை. அனைத்து பாடல்களையும் ஒன்றாகவே இரசிக்கிறேன். 

    பள்ளிப்பருவத்தில் நடக்கும் காதலும் சரி, கல்லூரி பருவத்தில் நடக்கும் காதலும் சரி, இன்றைய இளைஞர்களின் காதலை நம் கண்முன் கொண்டுவர இயக்குனர் கொஞ்சம் அதிகமாவே மெனக்கெட்டிருக்கிறார்.

    போஸ்டரில் ஜீவாவின் பெயரை ரகு என்று சமந்தாவின் பெயரை நித்யா என்று விளம்பரப்படுத்திவிட்டு படத்தில் ஜீவாவின் பெயரை வருன் என்று மாற்றியிருக்கின்றனர். இது யார் கவனிக்காமல் செய்த தவறு என்று தெரியவில்லை.

    படத்தின் ஆரம்பத்திலேயே வருன் - நித்யா இவர்களின் காதல் கதையில் இருந்து கொஞ்சம் பக்கங்கள் என்றுதானே சொல்லி இயக்குனர் கதையை தொடங்குகிறார். பின் ஏன் படத்தில் எதிர்பார்த்தவிதம் எதுவும் இல்லை என்கிறார்கள் இரசிகர்கள் என்றுதான் புரியவில்லை. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள். நிச்சயம் இப்படம் உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.


    **** * நீதானே என் பொன்வசந்தம் *****
    - அன்புடன்

    ****தினேஷ்மாயா****