மறக்கமுடியுமா......

Tuesday, February 02, 2010



  • என்னுடன் பயின்ற நண்பன்
    இரயிலில் சென்று தற்கொலை
    செய்துகொண்டதை
    தூங்கிகொண்டிருந்த என்னை எழுப்பி
    என் அம்மா சொன்னது..
    அப்போது நான் கண்ணீரே
    தீர்ந்துபோகும்படி
    நான் அழுதது.....



  • +2 படிக்கும்போது
    நடந்த FAREWELL கொண்டாட்டம்..
    நண்பர்களின் பிரிவை
    ஏற்க மனமில்லாமல்
    நான் அழுதது.....



  • விபத்தில் சிக்கியவருக்காக
    முதல்முறையாய் நான்
    இரத்ததானம் செய்தது..
    அவரின் பிள்ளைகள்
    என்னிடம் நன்றி சொன்னபோது
    அவர்களுக்கு ஆறுதல் சொல்ல
    வார்த்தைகளில்லாமல்
    கண்ணீர் வடித்தது.....



  • செய்யாத தவறுக்காக
    என் நண்பர்களே
    என்னை தவறாக
    பேசியது..
    அப்போது நான்
    தற்கொலைவரை
    சென்று-
    மனம் மாறி
    திரும்பிவரும்போது அழுதது.....



  • உயிருக்குயிராக பழகிய
    தோழி ஒரே நொடியில்
    என்னை மறந்துவிட்டது..
    அப்போது நான் அழுதது.....



  • அவள் என்னை
    பிரிந்து சென்ற பின்
    ஒரு மாதகாலம்
    என் வாழ்வில்
    கண்ணீரைத்தவிர வேறெதுவும் இல்லை..
    அப்போது நான் அழுதது.....



  • நான் என் உயிரினும்
    மேலாக நினைக்கும்
    என் நண்பனை பிரிந்து
    5 வருடங்களாக
    தவித்துக்கொண்டிருந்தபோது-
    எதேச்சையாக அவனை
    இரயிலில் சந்தித்தது..
    அவனோ சுயநினைவில்லாமல்
    இருந்தது..
    அந்த நிலையிலும்
    அவன் என்னைமட்டும்
    அடையாளம் கண்டுகொண்டது..
    இரயில் என்றும் பாராமல்
    அவனை கட்டித்தழுவி
    கண்ணீர் வடித்தது.....



  • விளையாடிக் கொண்டிருக்கும்போது
    காலில் பலத்த காயம்
    ஏற்பட்டு-
    அப்பா என்னை
    மருத்துவமனையில் சேர்த்துவிட்டு
    மருத்துவர் என் கால்களில்
    தையல் போடும்போது
    நான் வலியினால்
    துடிப்பதைக் கண்டு
    தந்தை அழுதது..
    எனக்கு வலியைவிட
    அவர் கண்ணீர்தான்
    என்னை அதிகம்
    அழவைத்தது.....



  • என் பிறந்தநாளின்போது
    இரவு 12மணிக்கு
    என் வீட்டுக்கு வந்து
    என்னை நண்பர்கள்
    வாழ்த்தியது..
    ஆனந்தமாய் நான்
    கண்ணீர் சிந்துயது.....

    இது போன்ற நிகழ்ச்சிகளை
    யாரால்தான்
    மறக்கமுடியும்....

    இன்னும் பல நிகழ்வுகளை
    உங்களுடன் பின்னர்
    பகிர்ந்து கொள்கிறேன்...


    என்றென்றும் அன்புடன் -

    தினேஷ்மாயா
  • 0 Comments: