இரத்த தானம்...

Sunday, February 14, 2010


13-02-2010....

அன்று மாலை கல்லூரி முடித்து வீடு வந்து சிறிது நேரம் உறங்கிக் கொண்டிருந்தேன். தீடிரென்று கண்விழித்து பார்த்தேன். மாலை 6 மணிதான் ஆகியிருந்தது. சரி இன்னமும் கொஞ்ச நேரம் தூங்கலாமென நினைத்தேன். அதற்குமுன் என் செல்லை எடுத்து என்னென்ன Message வந்திருக்கு என்று பார்த்தேன். வழக்கம்போல சில Forward Messages அதோடு ஒருவர்க்கு அவசரமாய் இரத்தம் தேவை என்றும் ஒரு Message வந்திருந்தது. அதுவும் என் Blood Group.எதுவும் யோசிக்காமல் அந்த நபரை செல்லில் அழைத்துப் பேசினேன்.
அவரும் அவசரமாக இரத்தம் தேவை, உடனே போருர் இராமசந்திரா மருத்துவமனை வரமுடியுமா என்று கேட்டார். நானும் உடனே படுக்கையை உதறிவிட்டு விரைந்தேன்.
அங்கே செல்ல கொஞ்சம் நேரம் பிடித்தது. இந்த சென்னையின் Traffic-ல் பேருந்து மெதுவாக ஊர்ந்து செல்வதற்க்குள் ஒருமணி நேரம் ஓடியிருந்தது..

அவரும் என்னை வரவேற்று என்னைப் பற்றி விசாரித்தார். நானும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, Blood Donation Form fill செய்ய துவங்கினேன். அங்கே இருந்த மருத்துவர் என்னை பரிசோதித்துவிட்டு எல்லாம் சரியாக இருக்கு எதற்க்கும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு வாருங்கள் என்றார். சாப்பிட்டுவிட்டு மீண்டும் திரும்பவந்தேன். சாதாரன Procedures எல்லாம் முடித்துவிட்டு நானும் Blood Donate செய்துவிட்டு வந்தேன்.

வெளியே அந்த Patient-ன் அம்மாவும் அவரின் மனைவியும் மற்றும் சில உறவினர்களும் காத்திருந்தனர். அவரின் அம்மா என்னைப் பார்த்து “ரொம்ப நன்றி தம்பி.கடவுள் புண்ணியத்துல நீ நல்லா இருப்பயா” என்றார் கண்ணீரோடு. எதற்க்கும் கவலைப்படாதீங்க அண்ணா குணமாகிவிடுவார் நிச்சயம் அவர் சரியானதும் நான் வந்து பார்க்கிறேன் என்று சொன்னேன். நேரம் 9.30 ஆலியிருந்ததால் நான் கிளம்ப தயாரானேன். ”தம்பி வந்து எங்களுடன் சாப்பிட்டுவிட்டு போப்பா” அவரின் அம்மா என்னை அழைத்தார். இல்லமா இப்பதான் சாபிட்டேன் இருக்கட்டுமென சொன்னேன். என் மனசு திருப்திக்காகவாவது எங்ககூட வந்து சாப்பிடுபா என்றார்கள். மறுக்கமுடியாமல் சென்றேன்.

எனக்கு பசியில்லயாதலால் ஒரு Apple Juice மட்டும் எடுத்துக் கொண்டேன். அவரின் அம்மா என்னைப் பார்த்து, தம்பி இவ்ளோ ஒல்லியா இருக்கியே உன்கிட்ட எப்படி இரத்தம் எடுத்தாங்க.
நான் முன்னாடியே உன்னைப் பார்த்தா இரத்தம் எடுக்க வேண்டாமென சொல்லியிருப்பேன் என்றார். இல்லமா நான் ஏற்கெனவே இரத்தம் தந்திருக்கிறேன், பிரச்சனை இல்லை என்றேன். சரி என்ன Weight இருக்க என்றார் அவரின் இன்னொரு மகன். 55 கிலோ இருக்கேன் 50 கிலோ இருந்தாலே இரத்தம் தரலாம்னா என்றேன. அரைமணி நேரம் அவர்களுடன் பேசிவிட்டு நான் கிளம்பினேன்.

என்னுடம் பேசும்போது அவர்கள் அவர்களின் கண்ணீரை மறைத்து முகமலர்ச்சியுடம் பேசினர்.
அவர்கள் என்மீது காட்டிய அன்பினையும் அவர்களின் நன்றியுணர்வையும் கண்டு வியந்தேன்.அவரின் அம்மா நான் கிளம்பும்போது“ நீ என் பிள்ளை போல பா. அவசரத்துக்கு வந்து உதவின ரொம்ப நன்றி தம்பி என்று சொல்லி என்னை கட்டிப்பிடித்து நன்றி சொன்னார்.”அவரின் இன்னொரு மகனுக்கு திருமணம் நடக்கவிருப்பதாகவும் நிச்சயம் வரனும் என்றும் சொன்னார். கண்டிப்பா அண்ணன் குணமாகிடுவார், நிச்சயம் நான் அவரை விரைவில் வந்து திருமணத்தில் சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டு விடைப்பெற்றேன்.

உலகில் நிறைய பேர் இரத்த தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அயராது உழைக்கின்றனர். நான் ஏற்கெனவே இரத்த தானம் செய்துள்ளதால் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை. என் நண்பர்களில் பல பேர் இன்னமும் இரத்த தானம் செய்ய தயக்கமும் பயமும் கொண்டிருக்கின்றனர். நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர்கட்கு புரிவதாய் தெரியவில்லை. அனைவர்க்கும் நல்ல மனம் இருக்கிறது ஆனால் அதை வெளிபடுத்த தயக்கமும் பயமும் உள்ளது. அதையும் தாண்டி ஓர் உயிரை காப்பாற்ற நாம் தரும் இரத்தம் உதவும் என்பதை ஒரு நொடி நினைத்துப்பார்த்தால் அந்த பயமும் தயக்கமும் வரவே வராது..

நான் இரத்தம் தந்தவர்கு விரைவில் உடல் குணமாகனும் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டு வீடு திரும்பினேன்...

எனக்கு இன்னொரு எண்ணமும் தோன்றியது, அதை நிச்சயம் பதிவு செய்தாக வேண்டும்.
ஒருமுறை என் நண்பன் என் வீட்டிற்க்கு வந்திருந்த போது, என்னடா மச்சி இவ்ளோ ஒல்லியா இருக்கியே 4 பேர் அடிக்க வந்தா என்னடா செய்வ, என்றான். நான் சொன்னேன், மச்சி மனசுல 10 பேரை அடிக்கிற தைரியம் இருக்குடா. அதுபோதும் என்றேன். அவனும் தன் GYM உடலை என்னிடம் காட்டி என் தோளில் சிறிதாய் குத்தினான். { கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது...:) }

நான் ஏன் இதை சொல்லவந்தேன் என்றால், 4 பேரை அடிக்க உடம்பை வளர்ப்பதை விட, அந்த உடலில் இருக்கும் இரத்தத்தை தானம் செய்தால் 4 பேர் பிழைப்பார்கள்.. ஆம் நாம் தரும் இரத்தத்தில் இருந்து RBC, Platelets, Plasma இவைகளை பிரித்து, நோயாளிகளின் தேவைக்கேற்ப
உபயோகித்து கொள்வார்கள். நமது இரத்தம் 4 பேரின் உயிரை காப்பாற்ற உதவியாய் இருக்கும்.

என் பிறந்தநாளன்று என் கண்ணை தானமாக எழுதி தர முடிவெடுத்துள்ளேன். விருப்பமுள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்...

இரண்டு கைகளை கூப்பி இறைவனிடம் வேண்டுவதைவிட, ஒரு கையை நீட்டி இரத்த தானம் செய்தால் அதுவே இறைவனை அடைய சிறந்த வழி...

Donate Blood.. Save Life..



என்றும் அன்புடன் -

தினேஷ்மாயா

0 Comments: