இந்தியா... பணக்கார நாடாம்..!

Monday, February 15, 2010

















சிறிது நாட்களுக்கு முன் எனக்கு ஒரு SMS வந்தது..
இந்தியா உலகின் முதல் 20 பணக்கார நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது என்று.
அந்த Sms படிச்சதும் ரொம்ப சிரிச்சிட்டேன்.

இன்னமும் இந்தியாவில் பட்டினி சாவுகள் இருக்கத்தான் செய்கிறது. ஒரு நாளில் மட்டும் குறைந்தது 50 பிச்சைக்காரர்களையாவது பார்த்துவிடுகிறேன். இலஞ்சம் ஊழல் இன்னமும் ஏசி அறைகளில் சொகுசாய் வாழ்ந்தவண்ணம் ஊள்ளது. குழந்தை தொழிலாளர்களை அன்றாட வாழ்வில் பார்க்க நேர்கிறது. சிறந்த கல்வி முறை இருப்பதாய் தெரிந்தாலும் அது அனைவருக்கும் கிடைப்பதில்லை. நாட்டின் உள்கட்டமைப்பு சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை மாறாக சொல்லிக் கொல்லும் அளவில் இருக்கிறது. இந்தியா எப்படி சென்றால் என்ன என்று கருதும் இளைஞர்கள் பலர் உள்ளனர்(நான் நல்ல உள்ளங்களை சொல்லவில்லை). இன்னமும் இந்திய அரசியல் சாக்கடையாய்தான் இருக்கிறது.வறுமையும் ஏழ்மையும் ஒழிந்தபாடில்லை.

இவை எல்லவற்றையும்விட இன்னமும் இந்திய மக்கள் ஒரு சந்தோஷமான வாழ்க்கையை வாழவில்லை..

உயர்தர மக்களை நான் ஒருபோதும் குறை சொல்லவில்லை. நடுத்தர மக்களின் குறையைதான் இங்கே விவாதிக்கிறேன்..

அன்றாட தேவையான Gas Cylinder Book செய்து 1 அல்லது 2 மாதம் கழித்துதான் வீடு வருகிறது என்று பலமுறை என் அம்மா சொல்லவே கேட்டிருக்கிறேன். அரசு சில தினங்களுக்கு முன், Gas Cylinder வாங்கும்போது மேலும் 50 ரூபாய் தந்தால், Gas Book செய்த அடுத்த நாளே வீடு வந்திடும். என்ன கொடுமை சார் இது. ஏற்கெனவே Gas விலை அதிகம் என்று புலம்பும் நடுத்தர மக்கள், இன்னமும் 50 ரூபாய் தந்தால்தான் வீட்டுக்கு Gas உடனே வரும் என்று வருத்தப்படுகின்றனர். என் பார்வையில் இதுவும் ஒரு மிரட்டலே.

பணம் இருப்பவர்கள் அனைவரும் 50 ரூபாய் அதிகம் தந்து உடனே Gas வாங்கிக் கொண்டால்
1 அல்லது 2 மாசத்தில் வரவேண்டிய Gas மேலும் தாமதமாகதானே வரும். இலவசமாய் Gas அடுப்பு தரும் தமிழக அரசே Gas வாங்க ஒவ்வொருமுறையும் பணம் தருவாயா. அப்படி பணம் தரவேண்டும் என்று மக்கள் கேட்டிருந்தால், இந்த இலவச Gas இணைப்பை தந்திருப்பாயா.

நான் அனைவருக்கும் முக்கியமாக சொல்லிக்கொள்ள விரும்பும் ஒரு விஷயம்.
நான் எந்த ஒரு அரசியல் கட்சியினையும் சார்ந்தவனில்லை. ஓர் சாதரண இந்திய குடிமகன்.
நாட்டின் இன்றைய நிலைக்கண்டு வருந்தும் நல்ல இதயத்தில் எனதும் ஒன்று. நாட்டினை மாற்ற விழையும் ஒரு இந்தியன். இன்றைய அரசியலை ஓர் சராசரி இந்தியனின் பார்வையிலிருந்து விமர்சிப்பதற்கு எனக்கு உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.

இப்போதைக்கு போதும் என்று நினைக்கிறேன்.Gas பிரச்சனை பற்றி கொஞ்சம்தான் பேசியிருக்கிறேன். இன்னமும் எழுதுவேன். மற்ற பல சமூகப் பிரச்சனைகளையும் பின்னர் அலசலாம்...



என்றும் அன்புடன் -

தினேஷ்மாயா

2 Comments:

elamthenral said...

தினேஷ்

உன் பதிவு மிகவும் அருமை... ஆனால் இதில் குறிப்பட்டது போல்.. எரிவாயுக்கே இந்த நிலை.. இதற்கு அரசாங்கம் அதன் பனியை பனியாக செய்யவில்லை.. money க்காக செய்கிறது.. இதில் உன்னை போல் என்னை போல் உள்ளவர்கள் நினைத்து கஷ்டம் மட்டும்தான் பன்னமுடியும்..... "ம்", 'சரி' என்று ஒதுங்க மட்டும்தான் முடிகிறது.........

தினேஷ்மாயா said...

No ka.. We can change this situation.. That day is not so long...