விவேகானந்தர் இல்லம்.....

Sunday, February 07, 2010



இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். இன்று மாலை என் நண்பர்களுடன் கடற்கரை சென்றிருந்தேன். வீட்டிற்கு கிளம்பும் முன், விவேகானந்தர் இல்லம் செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.

நாங்கள் சென்ற தினம், அதாவது 07-02-2010....
சுவாமி விவேகானந்தர் சென்னை வந்தபோது அங்கே தங்கியிருந்தார்.
அவர் அங்கே தங்கியிருந்தது 06-15 February 1897.
நாங்கள் அங்கு சென்ற தினமும் அவர் அங்கு தங்கியிருந்த தினமும் ஒன்றே.

அவர் தங்கியிருந்த அறைக்குள் சென்று அரை மணிநேரம் தியானம் செய்தேன்.
உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது. ஏனோ எனக்கே தெரியாமல் கண்ணீர் சிந்தினேன்.
அங்கே 3மணி நேரம் இருந்துவிட்டு வீடு திரும்பினோம்.

அவர் இருந்த அறையில் அவர் புகைப்படம் முன்பே அமர்ந்து தியானம் செய்தது அவரை நேரில் சந்தித்தது போல ஒரு உணர்வை தந்தது...

சென்னையில் உள்ள அனைவரும் சென்று பார்க்கவேண்டிய ஒரு அற்புத அறிவு கோவில்.
நம் பாரதமே பெருமைக்கொள்ளும் அளவு பெருமை வாய்ந்த ஒரு மகானின் திருவடிகளை அனைவரும் சென்று காணவேண்டுமாய் கேட்டுகொள்கிறேன்...

அங்கு சென்றுவர உகந்த நேரம் மாலை 4-7. நுழைவு கட்டனம் சிறுவர்களுக்கு ரூ.1
பெரியவர்களுக்கு ரூ.2. புதன்கிழமை விடுமுறை.

குறைந்தது 3 மணிநேரமாவது அங்கே இருக்க பாருங்கள். அதில் ஒரு மணிநேரமாவது தியானம் செய்வதற்கு பாருங்கள். அங்கே இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் பார்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்...

என்னால் ஒரு கோர்வையாய் எழுத முடியவில்லை. அவரை நேரில் பார்த்த ஒரு ஆனந்த களிப்பில் இருக்கிறேன்..

நீங்களும் தவறாமல் விவேகானந்தர் இல்லம் சென்று பரவச நிலையை அடையுங்கள்..



















என்றென்றும் அன்புடன் -

தினேஷ்மாயா

0 Comments: