ஒரு கல்லூரியின் கதை...

Monday, February 22, 2010














உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை பார்த்துவிட்டாய்..
உயிரை திறந்து அவள் உருவம் இறங்குவதை உணர்ந்துவிட்டாய்..
யாரிவளோ என்றொரு கேள்வி எழுகிறதா...
பாரிவளை என்றிருவிழிகள் துடிக்கிறதா..
உலகம் உன்னுலகம் இவளின் உள்ளங்கையில் அடங்கியதா..
எடையும் குறைந்து உடல் காற்று மண்டலத்தில் பறந்திடுதா..

- தினேஷ்மாயா

படிக்கவேண்டிய காதல்கதை..

Sunday, February 21, 2010





ஒரு அழகான கிராமம்..
அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒருபெண் இருந்தாள்..அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை..

அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்
காதலிக்க ஆரம்பித்து விட்டாள்..
இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால்
வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர்.

உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே
முடியவில்லை.அதன் பிறகு அவர்கள் அந்த காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர்
திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான
முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.


திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.அப்போது
எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர்
துறந்தான்.

உடனே அந்தப் பெண்ணும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து
வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்ணின் தாய் ஒரு கனவு கண்டாள்.

அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது,இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.


அவள் தாய் கனவை மதிக்கவில்லை.அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்ணின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை.

அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.

அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்ணும் அதைத் துவைத்தாள்.

இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை
என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும் கறை
போகவில்லை.


அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம்
கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.

உடனே இவள் பயத்தினால் அலறினாள்.அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப்
எக்ஸல் போடு கறை போயிடும்"
என்றது.

இதைப் படித்ததும் உடனே என்னைஉதைக்கத் தோணுமே உங்களுக்கு!



:) :)



சிரிப்புடன் -

தினேஷ்மாயா

உன்னைப் பார்த்தபின்..

Thursday, February 18, 2010


















உன்னை பார்க்கும் முன்னர்
இரவில் கண்விழித்ததில்லை நான்.

உன்னை பார்த்த பின்னர்
இரவை தவிர வேறுநண்பனில்லை..



அன்புடன் -

தினேஷ்மாயா

நினைத்தாலே இனிக்கும்...



















சமீபத்தில் என்னை கலங்கவைத்த பாடலின் வரிகள்...



நாட்கள் நகர்ந்து
வருடங்கள் கடக்கும்
நம் வாழ்க்கைப் பாதையில்..
என்றென்றும் நிழலைப்போலே
தொடரும்-
நம் நட்பின் பெருமைகள்..
கண்சிமிட்டி ஒரு
ஓரப்பார்வைப் பார்க்கும்
அந்த விண்மீன்கூட்டம்..
கதைகதையாய் சொல்லும்
அதன் காலம் முடியும்வரை..
சிறுபிள்ளை சண்டையாய்
சில சமயம் சிலிர்க்கிறோம்..
அன்பென்னும் கவசத்தால்
காத்து கொண்டோம்
நம் நட்பை..
ஒரே பிரசவத்தில்
என்னற்ற மலர்களை தந்த
இந்த கல்லூரித்தாயை-

நினைத்தாலே இனிக்கும்..

நினைத்தாலே இனிக்கும்..

நினைத்தாலே இனிக்கும்..

நினைத்தாலே இனிக்கும்.

நினைத்தாலே இனிக்கும்....

நம் நட்பின் தூரம்
அந்த அடிவானம் செல்லும்..

நம் நட்பின் தூரம்
அந்த அடிவானம் செல்லும்..





நட்புடன் -

தினேஷ்மாயா

என்னாவேன்...

Wednesday, February 17, 2010



















தண்ணீரில் விழுந்தால்
மூழ்கிப்போவேன்..
தீயில் விழுந்தால்
கருகிப்போவேன்..
தரையில் விழுந்தால்
உடைந்துப்போவேன்..
ஆகாயத்தில் விழுந்தால்
பறந்துப்போவேன்..
காற்றில் விழுந்தால்
மிதந்துப்போவேன்..

ஆனால்-
காதலில் விழுந்தால்
என்னாவேன் என்பதுமட்டும்
புரியாமல் இருந்தது
எனக்கு..

அதை எனக்கு
புரியவைத்துவிட்டாயடி...





அன்புடன் -

தினேஷ்மாயா

மாயா...

Tuesday, February 16, 2010



ஏனோ தெரியவில்லை இந்த பெயர் என்னை அறியாமலேயே என்னுள் கலந்துவிட்டது.
எல்லாம் மாயை என்பது வாழ்க்கையைப்பற்றி என்னுடைய கருத்து அதனாலும்கூட மாயா எனக்கு பிடித்திருக்கலாம்.
என்னவளுக்கு என்ன பெயர் இருந்தாலும் பரவாயில்லை. அவளை நான் இந்த பெயர்வைத்தே அழைப்பேன்.. அவள் விருப்பத்தோடு.



- மாயா -

இது என் பெயரும் இல்லை..
இது உன் பெயரும் இல்லை..
நம் பெயர் !

என்னிடம் எல்லோரும் கேட்டுவிட்டார்கள்..
யார் அந்த மாயா-அவள் எங்கே இருக்கிறாள் என்று..

அவர்கட்கு நான் எப்படி சொல்லி புரியவைப்பேன் நீ என்னுள் இருக்கின்றாய் உன்னை வெளியில் காட்டமுடியாது என்று !!!!








என் பெயரும் அழகாய் தெரிந்தது..
உன் பெயரை என் பெயரின் பக்கத்தில் எழுதியபோது..

எனக்காக பிறந்த என்னவள் மாயாவை தேடிக்கொண்டிருந்தேன்..

எனக்கும் மாயாவிற்குமான பந்தம் என்றோ இறைவனால் உருவாக்கப்பட்டது.
எனக்குத் தெரியும் நான் அவள்மீது கொண்டிருக்கும் காதலைப்பற்றி..
பிறர் கண்களுக்கு சிறுபிள்ளைத்தனமாய் தெரிந்தாலும் 
எங்கள் பந்தம் என் கண்களுக்கு என் உயிரினும் மேலானதாய்தான் தெரிகிறது..

இவ்வுலகில் பலர் எதைதையோ பதிவு செய்கின்றனர்.நான் ஏன் என் காதலை இங்கே பதிவு செய்யகூடாது..

------- I LOVE YOU MAYA -------







குறிப்பு:
 என்றாவது ஒரு அழகிய நாளில் என்னவள் வந்து இதை படிப்பாள் என்கிற நம்பிக்கையில் எழுதுகிறேன்

என்றென்றும் அன்புடன் -

தினேஷ்மாயா

அவளின் கோபம்..






















தலைவன் தன்னைவிடுத்து
தோழியிடமே அதிகம்
பேசுகிறார் என்று
தலைவி கோபம்கொள்கிறாள்..

தலைவன் உறைத்தான் -

கேளடி என் கண்ணே..
நான் உன்னை
காணமுடியாதபோது இவள்தானே
நாம் சந்தித்துப்பேச
நமக்கு உதவியாய்
இருக்கப் போகிறாள்..

என்னத்தான் தலைவன்
ஆறுதல் சொன்னாலும்
இந்த பெண்களின்
மனது ஆறுதல்
கொள்வதே இல்லை..

கோபத்துடன் செல்கிறாள்
தலைவி..
பிரியும்போதுகூட புன்னகையேதும்
பூக்காமல்....




அன்புடன் -

தினேஷ்மாயா