சமீபத்தில் நான் பார்த்த இரண்டு படங்கள் என்னை கொஞ்சம் அதிகம் பாதித்தது. கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படமும், தென்மேற்கு பருவக்காற்று திரைப்படமும் சில தினங்களுக்கு முன்னர் பார்த்தேன்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் ஆரம்பம் முதல் நகைச்சுவையாக ரசிக்கும்படி இருந்தது. படம் முடியும் தருவாயில் தந்தையின் அன்பை எடுத்துரைக்கும் ஓர் பாடல் வந்து என் கண்களை குளமாக்கியது. இன்னமும் அந்த பாடல் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தை பார்க்கும்போதும் இதே உணர்வுதான். படம் ஆரம்பத்தில் வரும் பாடல்தான் கடைசியிலும் வந்தது. ஆனால், கடைசியில் அந்த பாடலை கேட்கும்போதும் மேலே சொன்ன அதே நிலைதான் ஏற்பட்டது. தாயின் அன்பை அற்புதமாக வெளிக்காட்டியிருக்கிறார் இயக்குனர்.
எத்தனையோ தமிழ் படங்கள் பார்த்திருக்கிறேன், இந்த இரண்டு படங்கள் காட்டும் தந்தையின் அன்பையும், தாயின் பாசத்தையும் மற்ற படங்களில் என்னால் உணரமுடியவில்லை..
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment