போலீசாருக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது ?
“உத்தர பிரதேச மாநிலத்தில் கொலை வழக்கில் பிடிபட்டவர், போலீஸ் சித்ரவதையால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.உத்தர பிரதேச மாநிலம் இடா மாவட்டத்தை சேர்ந்தவர் பல்பீர். கடந்த மாதம் நடந்த ஒரு கொலை தொடர்பாக பல்பீரையும் பேனி கான் என்பவரையும் சந்தேகத்தின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவகார் போலீசார் பிடித்து சென்றனர். குற்றத்தை ஒப்புக் கொள்ள வைப்பதற்காக, போலீசாரால் பல்பீர் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். சூடான தட்டில் அவரை உட்கார வைத்துள்ளனர்.
அடித்து உதைத்ததோடு பெட்ரோல், ஆசிட்டை ஊசி மூலம் உடலில் ஏற்றி டார்ச்சர் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சித்ரவதை தாங்காமல் மயங்கி விழுந்த பல்பீர், இடாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவரது நிலைமை மோசமானதை தொடர்ந்து லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, போலீசாரால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவர் வாக்குமூலமாக கொடுத்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பல்பீர் இறந்தார். பிரேத பரிசோதனையில் பல்பீர் உடல் முழுவதும் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பாக அவகார் போலீஸ் நிலைய சப்இன்ஸ்பெக்டர் சைலேந்திர சிங் உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.”
- இதை ஒரு மனித உரிமை மீறல் பிரச்சனையாக பார்க்க வேண்டும். உயிரை கொல்லும் அதிகாரத்தை போலீசாரின் கைகளில் இந்த அரசாங்கமே கொடுத்திருக்கிறது. இது தீயவர்களை தண்டிக்கும் ஒரு கருவி என்று நீங்கள் கருதினால், அது நல்லவர்களையும் பதம்பார்க்கிறதே என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. தங்களை கேட்க யாருமில்லை என்கிற தைரியத்தில்தான் போலீசார் தங்கள் இஷ்டம்போல நடந்துக்கொள்கின்றனர். இந்த நிலையை மாற்ற நிச்சயம் ஒரு புரட்சி ஏற்பட்டால் மட்டுமே முடியும் என்று நினைக்கிறேன்.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment