இராமேஸ்வரம்
சமீப காலமாக இலங்கை கடற்படையினர் நம் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கிறது. சில நாட்கள் முன்னர் தான் தமிழக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதை நான் செய்திகளில் பார்த்து தெரிந்துக் கொண்டேன். உயிரிழந்த அவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு 5 இலட்சம் நிவாரண நிதி அளித்து உதவியது…
போதுமா இந்த பணம் ? இல்லை 5 கோடி தந்தால் அந்த பணம் அந்த குடும்பத்திற்கு பத்துமா ?
தந்தை இல்லாத குறையை எப்படி அந்த தாய் சமாளிப்பாள். விவரம் தெரியாத குழந்தை விவரம் தெரியவந்து அப்பா எங்கே அம்மா என்று கேட்டால், அந்த தாய் என்ன சொல்லி புரியவைப்பாள்.
இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஒருநாளும் எட்டப்படாதா. அவர்களின் வாழ்வு தினமும் கேள்விக்குறியாகவே இருந்திடுமா.
இவர்களின் நிலையை வைத்து அரசியல் பேசும் அரசாங்கமே, அவர்களை எதிர்த்து அரசியல் செய்யும் எதிர்கட்சிகளே, கொஞ்சம் உங்கள் முகமூடியை கழட்டி வைத்துவிட்டு கொஞ்சம் மனிதாபிமானத்துடன் இவர்களின் நிலையை பாருங்கள்.
மத்திய அரசு நினைத்தால், இலங்கை மீனவர்களின் அட்டூழியத்தை ஒரு நொடியில் நிறுத்திவிட முடியும். ஆனால், அதற்கு முயற்சி செய்வதாக தெரியவுமில்லை. நீங்கள் இலங்கைக்கு ஆயுதமாவது வழங்குங்கள் அல்லது எதையாவது தந்து உதவுங்கள். ஆனால், இங்கே கடலோரம் இருக்கும் என் மக்களிடம் அராஜகம் செய்வதை நிறுத்திக் கொள்ளும்படி செய்யுங்கள்.
இல்லையேல், இறக்கும் ஒருவருக்கும் 5 இலட்சம் என்று தந்தால், அரசின் பணம் காலியாகிறதோ இல்லையோ, இன்னொரு முறை அந்த மாதிரி நிவாரணம் அளிக்க மீனவர்கள் ஒருவரும் இனிவரும் காலத்தில் இருக்க மாட்டார்கள். எல்லோரும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களுக்கும், உங்கள் அரசியல் விளையாட்டிற்கும் தங்கள் உயிரை தியாகம் செய்திருப்பார்கள்.
முடிவு எடுக்கும் அதிகாரம் இருப்பவர்கள், தகுந்த முடிவு எடுத்து என் மக்களை காப்பாற்றுங்கள்…
- என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment