காலம்

Wednesday, September 17, 2014



கடந்தகாலம்

நிகழ்காலம்

எதிர்காலம்

இதில் எதுவும் வேண்டாம் எனக்கு..

உன்னுடன் வாழும்

காதல் காலம் போதும் எனக்கு !

* தினேஷ்மாயா *

வெட்கம் வருகிறது



நீ கோபப்படும்போது -

அந்த கோபத்திற்கே

வெட்கம் வருகிறது !!

( எனக்கும்தான் )

* தினேஷ்மாயா *

கொலைத்திட்டம்


இன்று என்னை எப்படி கொல்லலாம் என்று

திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறாயா ?

* தினேஷ்மாயா *

மெதுவாய் பிடி


மெதுவாய் பிடி..

செத்துவிடப்போகிறது அந்த தொலைப்பேசி -

உன் மென்மை தாங்காமல் !

* தினேஷ்மாயா *

கடன்



மெழுகுவர்த்திக்கு  -

ஒளியை உன்னிடமிருந்து

கடன் கொடுக்கிறாயோ ?

* தினேஷ்மாயா *

அழகே பெண்ணாய் !!



அழகான பெண்ணை பார்த்திருக்கிறேன்..

அழகே பெண்ணாய் இப்போதுதான் பார்க்கிறேன் !!

* தினேஷ்மாயா *

என்ன வேலை ?



படித்த படிப்புக்கு வேலை பார்க்கலாமா ?

இருக்கும் அறிவுக்கு வேலை பார்க்கலாமா ?

மனதுக்கு பிடித்த விஷயத்தில் வேலை பார்க்கலாமா ?

பொதுமக்களுக்காக வேலை பார்க்கலாமா ?

ஒரே குழப்பம் !!

* தினேஷ்மாயா *

அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?

Tuesday, September 16, 2014



அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா சுகமா?
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா? உன் பொய்கள் எல்லாம் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?

அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எரித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி உறைந்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி உறைந்தேன்
பழைய மாலையில் புதிய பூக்கள் தான் சேராதா
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் கூடாதா?
வாழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா?
வாழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா?

அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா?
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா? உன் பொய்கள் எல்லாம் சுகமா?

சிறுமை கண்டு தவித்தேன் என் சிறகில் ஒன்றை முறித்தேன்
ஒற்றை சிறகில் ஊர் பறவை எத்தனை தூரம் பறப்பேன்
அன்பே உன்னை அழைத்தேன் உன் ஆகிம்ஸை இம்சை பொறுத்தேன்
சீதை குளித்த நெருப்பில் என்னை குளிக்க சொன்னால் குளிப்பேன்
அழுத நீரில் கறைகள் போய் விடும் தெரியாதா?
குறைகள் உள்ளது மனித உறவுகள் புரியாதா?
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா

அழகே சுகமா? அன்பே சுகமா?
உன் கோபங்கள் சுகமா? உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா சுகமா?
கன்னம் ரெண்டு சுகமா அதில் கடைசி முத்தம் சுகமா?
உந்தன் கட்டில் சுகமா என் ஒற்றை தலையணை சுகமா?

படம்: பார்த்தாலே பரவசம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், சாதனா சர்கம்
வரிகள்: வைரமுத்து

சமீபத்தில்தான் இந்த பாடலை கேட்டேன். இன்னமும் இந்த படத்தை நான் பார்க்கவில்லை. நேரம் கிடைக்கும்போது பார்க்கனும். இப்பாடல் கேட்ட முதல்முறையே என்னை அதிகம் கவர்ந்துவிட்டது. இசையும், வரிகளும் இதற்கு காரணம் என்றும் கூட சொல்லலாம். இசையைவிட வரிகள்தான் என்னை அதிகம் கவர்ந்தது. அதுவும் கடைசியில் இருக்கும் வரிகளில் வைரமுத்து அதிகம் விளையாடியிருக்கிறார் !!


* தினேஷ்மாயா *

நல்லவன்




நல்லவன் சாபம் கொடுத்தால் நடக்கும்..

ஆனால், நல்லவன் சாபம் கொடுக்க மாட்டான்..

கெட்டவன் நல்லது சொன்னால் நடக்காது..

ஏனென்றால் அவன் மனதில் நல்ல என்னமே தோன்றாது..

அப்படியிருக்க அவன் கொடுக்கும் சாபம் மட்டும் எப்படி நடக்கும் ?

* தினேஷ்மாயா *

பால திரிபுர சுந்தரி



கடந்த சனிக்கிழமை நெமிலியில் அருள்பாலிக்கும் பால திரிபுரசுந்தரியை காண சென்றோம். சென்னையில் இருந்து வண்டியிலேயே சென்றுவிட்டோம். ஒரு மாதத்திற்கு முன்பே இங்கு செல்லவேண்டும் என்று மனதில் திட்டம் போட்டிருந்தேன். வெள்ளிக்கிழமை இரவு சீக்கிரம் தூங்க வேண்டும், சனிக்கிழமை விரைவாக எழுந்து அங்கே சென்று பாலாவை காணவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், வெள்ளிக்கிழமை எனக்கு எதிர்பாராவிதமாக அதிக காய்ச்சல். என்னடா இது சோதனை, நாளை பாலாவை சென்று காண முடியாதா என்று மிகவும் வருந்தினேன். எப்போதும் மாத்திரை எடுத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் நாளை நிச்சயம் நெமிலி சென்றாக வேண்டும் என்பதால் மருந்துகடைக்கு சென்று மாத்திரை வாங்கிவந்து மாத்திரை எடுத்துக்கொண்டேன். காலையில் காய்ச்சல் குறைந்திருந்தது ஆனால் எனக்கு உடலில் குளிர் கொஞ்சம் தெரிந்தது. அதைவிட இன்னொரு விஷயம் என்னவென்றால், அன்று அதிகாலை முதலே மழை தூரிக்கொண்டிருந்தது. இதென்ன புது சோதனை என்று சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தேன். பின்னர் கடவுளை மனதில் பிரார்த்தனை செய்துவிட்டு வண்டியை கிளப்பினேன். என்ன நடந்தாலும் சரி, பாலாவை சந்தித்தே ஆகவேண்டும் கிளம்பினேன். 

  ஒருவழியாக பால பீடம் வந்து சேர்ந்தோம். உள்ளே சென்றதும் மனதில் அப்படியொரு மகிழ்ச்சி. அப்படியொரு நிம்மதி. நான் வண்டியில் செல்லும்போதே நினைத்தேன். அடடா பூ வாங்க மறந்துவிட்டோமே என்று. Dairy Milk மிட்டாயாச்சும் வாங்கி சென்றிருக்கலாமோ ? என்றும் என் மனதில் உதித்தது. ஒரு அம்மா ஸ்தானத்தில் பார்க்கும் தெய்வத்துக்குத்தானே பூ வாங்கி செல்லவேண்டும். குழந்தையான பாலாவிற்கு மிட்டாய் வாங்கி செல்லலாமே என்று நினைத்தேன். ஆனால் வாங்கமுடியவில்லை. இருப்பினும் மனதிற்கு ஒரு பெரிய ஆறுதல் காத்திருந்தது. பீடத்தினுள் சென்றதும், அங்கே இருந்தவர் கேட்டார், எதாச்சும் வாங்கி வந்திருக்கீங்களா என்றார். இல்லை சாமி, இருங்க போய் மாலை வாங்கி வருகிறேன் என்று சொன்னதற்கு, அதெல்லாம் வேண்டாம், இங்கே மிட்டாய் (சாக்லேட் பாக்கெட்) இருக்கு அதையே வாங்கி கொடுங்கள் போதும். அதுதான் பாலாவிற்கு பிடிக்கும் என்றார். அப்போதுதான் என் மனதிற்கு பெரிய ஆறுதலாய் இருந்தது. பாலாவிற்காக நான் என்ன வாங்க வேண்டுமென்று நினைத்தேனோ அதுவே அவளுக்காக வாங்க முடிந்தது.

அப்புறம் நீங்கள் மேலே பார்ப்பது பல ஓவியர்கள் வரைந்த பாலாவின் உருவங்களில் ஒன்றே ! ஆனால் அங்கே சென்று பார்த்தால் பாலாவில் விக்ரகம் கட்டைவிரல் அளவிலேயே இருக்கிறது. பாலா உருவான கதையை அங்கே இருப்பவர் சொன்னார். பாலா விரும்பினால் மட்டுமே இங்கே வரமுடியும். நீங்கள் பாலாவை பார்க்க வரவில்லை, அவள்தான் உங்களை பார்க்கவேண்டுமென்று நினைத்து வரவைத்திருக்கிறாள் என்றார். இங்கே எப்படிவேண்டுமானாலும் வாருங்கள். ஆனால் நிம்மதியுடனே செல்வீர்கள் என்றார். 100 பேர் வர நினைத்தால் 10 பேருக்கு மட்டுமே இங்கு வர வாய்ப்பு கிடைக்கும் என்றார். அதுவும் பாலாவின் விருப்பம் இருந்தால் மட்டுமே. இங்கே வந்து உங்கள் குறைகளை சொல்லுங்கள் தவறில்லை, ஆனால், இது செய்தால் உனக்கு அது செய்கிறேன், இது செய்கிறேன் என்றெல்லாம் வியாபாரம் செய்ய வேண்டாம். பாலா ஒரு குழந்தை. அவள் நீங்கள் கேட்கும் முன்பே கொடுக்கும் குணம் கொண்டவள். மனதார அவளை நம்புங்கள். அவள் உங்கள் உள்ளேதான் இருக்கிறாள். அவள் எப்போதும் உங்களுடனே இருக்கிறாள். 

ஒருமுறை அங்கே சென்று வாருங்கள். பாலா விரும்பினால் நிச்சயம் அவள் உங்களை காண அழைப்பாள். பாலாவின் அடுத்த அழைப்பிற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

* தினேஷ்மாயா *


துணை


    இறைவன் என்றும் எனக்கு துணையிருக்கிறான் என்பதற்கு உதாரணமாக பல நிகழ்வுகள் என் வாழ்வில் நடந்தேறிக்கொண்டே இருக்கும். பார்க்க அனைத்தும் சிறிய விஷயங்களாக தோன்றினாலும் அதில் இறைவன் இருப்பதை என்னால் உணர முடிகிறது.


  இன்று உடல்நலமில்லாத காரணத்தால் அலுவலகத்திற்கு கொஞ்சம் தாமதமாகவே கிளம்ப நேர்ந்தது. அவரசம் ஏதுமில்லை என்றாலும் அலுவலகத்திற்கு தாமதமாக செல்வதில் எனக்கு விருப்பமில்லை. வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகம் கிளம்புகிறேன். வழியில் வண்டிக்கான திரவமில்லாமல் வண்டி நிற்கும் நிலை ஏற்படுகிறது. என்னடா இது என்று மனதில் நினைத்துக்கொண்டே வண்டி எவ்வளவு தூரம்வரை செல்லுமோ அதுவரை வண்டியை செலுத்துவோம் என்று நானும் வண்டியை ஓட்டுகிறேன். தன்னால் முடிந்தவரை என்னை இழுத்துக்கொண்டு வந்து தன் மூச்சை நிறுத்தியது வண்டி. வண்டி நின்ற இடம், வண்டிக்கான திரவம் நிறுப்பும் இடம் !

     மனதில், “நன்றி இறைவா” என்று சொல்லிவிட்டு வண்டிக்கு திரவம் நிரப்பிவிட்டு குறித்த நேரத்தில் அலுவலகம் வந்து சேர்ந்தேன். மனதில் இறைவனை உண்மையாக நேசித்தால் போதும். அதுவே பக்திதான். அவனை மந்திரங்கள் சொல்லித்தான் மகிழ்விக்க வேண்டியதில்லை. மனதில் மற்றவர்க்கு தீங்கு நினைக்காமல், இயன்றவரை பிறர்க்கு உதவி செய்து வாழ்ந்துவந்தாலே போதும். நம் ஒவ்வொரு செயலிலும் இறைவன் நம்முடன் துணை வருவார்..

* தினேஷ்மாயா *

பணத்துவம்

Displaying 3_2099193h.jpg

மருத்துவமா இல்லை பணத்துவமா ?

* தினேஷ்மாயா *

காற்று பறக்கும்



காற்றில் பஞ்சு பறக்கும்..

ஆனால் -

பஞ்சுப்போல் இருக்கும் உன்னை தீண்டிவிட்டால்

அந்த காற்றே பறக்குமடி...

* தினேஷ்மாயா *

சுகம்


தாங்கிப்பிடிக்க நீயிருக்கையில்

கீழே விழுவதும் சுகம்தான் எனக்கு !!

* தினேஷ்மாயா *

பெண்பாவை..

Monday, September 15, 2014


இந்த பெண்பாவையை பார்த்தால் ..

ஒரு வெண்பாவை என் கைகள் தானாக கிறுக்குகிறது !!

* தினேஷ்மாயா *

கண்கள் நீயே காற்றும் நீயே



கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும்நீ உயிரும் நீ

பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை

முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் நீர்
எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே

கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும்நீ உயிரும் நீ

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத்தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்

தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதிவேளை
பலநூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை செய்திடும்
இராவணன் ஈடில்லா என்மகன்

எனைத்தள்ளும் உன்
குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனைக்கிள்ளும் உன்
விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்

சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ
பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை
உடல் செவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும்நீ உயிரும் நீ

இசை: ஜி.வி ப்ரகாஷ்
வரிகள்: தாமரை
திரைப்படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்

பாடியவர்:சிதாரா

இந்த பாடலை நேற்றுதான் என் நண்பன் சொன்னான். பாடலை கேட்டதும் அதிகம் ரசிக்கவில்லை ஆனால் திரும்ப திரும்ப பாடலை கேட்டேன். இந்த பாடல் என்னை அதிகம் கவர்ந்துவிட்டது. சில வரிகள் மிக மிக ஆழமானவை அழகானவை. 

* தினேஷ்மாயா * 

வெற்றியோ தோல்வியோ

Friday, September 12, 2014



வெற்றியோ தோல்வியோ, முயற்சி செய்வதை விட்டுவிடாதே என்பார்கள்..

உன் காதல் வெற்றிபெறுமா என்றெல்லாம் சிந்தித்து நேரத்தை வீணாக்காதே. உடனே உன் காதலை சொல்லிவிடு...

* தினேஷ்மாயா *

புரிந்துக்கொண்டேன்


கவிதை எழுத காதலி தேவையில்லை. மனதில் காதல் இருந்தால் போதும் என்பதை மிக தாமதமாக தெரிந்துக்கொண்டேன்.

- காதலுடன் -

* தினேஷ்மாயா *

காதல் என்னுள்ளே வந்த நேரம்





காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்

நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இன்னாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்..

#நேரம்

* தினேஷ்மாயா *

என்னை தேடி காதல்



என்னை தேடி காதல்
என்ற வார்த்தை அனுப்பு 
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடும் முன் 
செய்தி அனுப்பு...

#காதலிக்க_நேரமில்லை


* தினேஷ்மாயா *

மலரே!!

Thursday, September 11, 2014


நான் எடுத்து கொஞ்சம் Photoshop-ல் மாற்றிய புகைப்படம்..

* தினேஷ்மாயா *

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

Friday, September 05, 2014



பள்ளியிலும் கல்லூரியிலும் எனக்கு பாடம் நடத்தியவர்கள் மட்டும் எனக்கு ஆசிரியர்கள் அல்ல. எனக்கு வாழ்க்கைப் பாடத்தையும் கற்று தந்த பல ஆசிரியர்கள் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து --

”ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்..”

* தினேஷ்மாயா *

கன்னக்குழி


உன் கன்னத்தில் குழி விழுகிறது பரவாயில்லை..

ஆனால் -

நீ காணும் இடமெல்லாம் குழி விழுகிறதே ?

உன் விழிகளுக்கு அவ்வளவு சக்தியா ?

* தினேஷ்மாயா *

நல்லவன்


இந்த உலகில் யாருமே நல்லவன் இல்லை என்று புலம்புவதை நிறுத்திவிட்டு,
நாம் நல்லவனாய் வாழ்ந்து காட்டி இந்த உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாய் இருப்போம்..

* தினேஷ்மாயா *

சலீம்..


பலநாட்களுக்குப் பிறகு இரவு பத்து மணிக்கு திரைப்படம் பார்க்க சென்றேன். அபிராமி மெகா மால் - சென்னை.

சலீம்..

மிக நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார்கள் படத்தை. படத்தில் சிறு சிறு குறைகள் இருந்தாலும், படத்தில் நிறைகளே அதிகம். மனம் கவர்ந்த படம். பாடல்களும் இனிமை. பிண்ணனி இசையும் படத்திற்கு பலம். சலீமாக வாழ்ந்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துக்கள். அடுத்த பாகம் வந்தாலும் அந்த பாகத்தை பார்க்க இப்போதே ரசிகர்களை ஈர்த்துவிட்டார் விஜய் ஆண்டனியும் இயக்குனர் நிர்மல் குமாரும். 

படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்..

* தினேஷ்மாயா *

வெள்ளிக்கிழமை

Wednesday, September 03, 2014


வெள்ளிக்கிழமை மட்டும்தான்

நீ

மஞ்சள் தேய்த்து குளிக்கிறாயாம்.

வாரத்தின் மற்ற ஆறு நாட்கள்மீது

ஏன் இந்த பாரபட்சம் என்று -

மற்ற நாட்களெல்லாம்

என்னிடம் வந்து

சண்டைப் போடுகிறது !!

* தினேஷ்மாயா *

காவியத்தலைவி



























காவியத்தலைவன் திரைப்படத்தின் பாடல்களை கேட்டன். பல நாட்களுக்குப் பிறகு, ஏ.ஆர். மனதை வருடும் இசையை தந்திருக்கிறார். வாங்க மக்கா, யாருமில்லா, திருப்புகழ் பாடல்கள் அதிகம் ரசித்தேன். வாணி ஜெயராம் குரலில் திருப்புகழ் மிகவும் அழகாக வந்திருக்கிறது. 

இவை எல்லாவற்றையும்விட, காவியத்தலைவன் திரைப்படத்தின் கதாநாயகி  வேதிகா மிகவும் அழகாக இந்த கதாப்பாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார் இவருக்கு காவியத்தலைவி என்னும் பட்டம்கூட தரலாம் போல. படத்தின் வரவுக்காக காத்திருக்கிறேன். படம் பார்த்துவிட்டு அந்த அனுபவத்தை பதிவு செய்கிறேன்.

* தினேஷ்மாயா *

விண்மீன் விதையில்


விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன்
விழியில் எனையே தொலைத்தேன்
மழையின்
இசை கேட்டு மலரே தலை ஆட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன்
விழியில் எனையே தொலைத்தேன்
மழையின்
இசை கேட்டு மலரே தலை ஆட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன்
விழியில் எனையே தொலைத்தேன்
மழையின்
இசை கேட்டு மலரே தலை ஆட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து

நான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும்
உனை
காணாத நேரம் என்னை கடிகாரம் கேட்கும்
மணல்
மீது தூறும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடி
முதல்
பெண் தானே  நீதானே
எனக்குள் நானே என்பேனே 
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து
ஒரு பெண்ணாக உன்மேல் நானே பேராசை கொண்டேன்

உனை முன்னாலே பார்க்கும் போது பேசாமல் நின்றேன்
எதற்காக உன்னை எதிர் பார்க்கிறேன்
எனக்குள்ளே  நானும் தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே நீயானேன், இவன் பின்னாலே போவேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து                                                                                                                
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன்
விழியில் எனையே தொலைத்தேன்
மழையின்
இசை கேட்டு மலரே தலை ஆட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன்
விழியில் எனையே தொலைத்தேன்
மழையின்
இசை கேட்டு மலரே தலை ஆட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து


படம்: தெகிடி
இசை: நிவாஸ் கிருஷ்ணா
குரல்: அபய், சைந்தவி
வரிகள்: கபிலன்

என்னவோ தெரியவில்லை இந்த பாடல் சமீபகாலமாக என்னை அதிகம் ஈர்க்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த பாடலை பலமுறை கேட்கிறேன். குறிப்பாக சைந்தவி குரல் அதிகம் ஈர்க்கிறது. 

* தினேஷ்மாயா *

ஒரு நாள் போதுமா ?

Tuesday, September 02, 2014

A weaver bird approaches its nest hanging from a tree in Kathmandu. – AFP


மனிதன் ஒரு வீட்டில் வசிக்கிறான் என்றால், அவனை அந்த வீட்டை விட்டு காலிசெய்ய குறைந்த பட்சம் ஒரு மாதம் அல்லது ஒரு வாரமாவது அவகாசம் கொடுப்பார் அந்த வீட்டின் உரிமையாளர். அதற்குள் அந்த மனிதன் தனக்கான வேறொரு வீட்டைப் பார்த்துக்கொண்டு குடிபெயர்ந்து விடுவார்.

இன்றொரு காட்சியை கண்டேன். சென்னையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்காக கட்டுமான பணிகள் நடைப்பெற்று வருகிறது. என் அலுவலகத்தின் அருகே இருக்கும் ஒரு பெரிய மரத்தை பெயர்த்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்கோ வருத்தம். அந்த மரத்தில் இருக்கும் பறவை என்ன செய்யும் என்று. தன் கூட்டை ஓரிரு மணிநேரத்தில் எப்படி அது மாற்றிக்கொள்ளும். அதன் குஞ்சுகளை எப்படி இடமாற்றம் செய்யும்? மனிதன் தனக்கு தேவையானதை மட்டும் சாதித்துக்கொள்ள நினைக்கிறானே தவிர அதனால் பாதிப்படையும் மற்ற உயிர்களைப் பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை..

* தினேஷ்மாயா *