துணை

Tuesday, September 16, 2014


    இறைவன் என்றும் எனக்கு துணையிருக்கிறான் என்பதற்கு உதாரணமாக பல நிகழ்வுகள் என் வாழ்வில் நடந்தேறிக்கொண்டே இருக்கும். பார்க்க அனைத்தும் சிறிய விஷயங்களாக தோன்றினாலும் அதில் இறைவன் இருப்பதை என்னால் உணர முடிகிறது.


  இன்று உடல்நலமில்லாத காரணத்தால் அலுவலகத்திற்கு கொஞ்சம் தாமதமாகவே கிளம்ப நேர்ந்தது. அவரசம் ஏதுமில்லை என்றாலும் அலுவலகத்திற்கு தாமதமாக செல்வதில் எனக்கு விருப்பமில்லை. வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகம் கிளம்புகிறேன். வழியில் வண்டிக்கான திரவமில்லாமல் வண்டி நிற்கும் நிலை ஏற்படுகிறது. என்னடா இது என்று மனதில் நினைத்துக்கொண்டே வண்டி எவ்வளவு தூரம்வரை செல்லுமோ அதுவரை வண்டியை செலுத்துவோம் என்று நானும் வண்டியை ஓட்டுகிறேன். தன்னால் முடிந்தவரை என்னை இழுத்துக்கொண்டு வந்து தன் மூச்சை நிறுத்தியது வண்டி. வண்டி நின்ற இடம், வண்டிக்கான திரவம் நிறுப்பும் இடம் !

     மனதில், “நன்றி இறைவா” என்று சொல்லிவிட்டு வண்டிக்கு திரவம் நிரப்பிவிட்டு குறித்த நேரத்தில் அலுவலகம் வந்து சேர்ந்தேன். மனதில் இறைவனை உண்மையாக நேசித்தால் போதும். அதுவே பக்திதான். அவனை மந்திரங்கள் சொல்லித்தான் மகிழ்விக்க வேண்டியதில்லை. மனதில் மற்றவர்க்கு தீங்கு நினைக்காமல், இயன்றவரை பிறர்க்கு உதவி செய்து வாழ்ந்துவந்தாலே போதும். நம் ஒவ்வொரு செயலிலும் இறைவன் நம்முடன் துணை வருவார்..

* தினேஷ்மாயா *

0 Comments: