மனிதன் ஒரு வீட்டில் வசிக்கிறான் என்றால், அவனை அந்த வீட்டை விட்டு காலிசெய்ய குறைந்த பட்சம் ஒரு மாதம் அல்லது ஒரு வாரமாவது அவகாசம் கொடுப்பார் அந்த வீட்டின் உரிமையாளர். அதற்குள் அந்த மனிதன் தனக்கான வேறொரு வீட்டைப் பார்த்துக்கொண்டு குடிபெயர்ந்து விடுவார்.
இன்றொரு காட்சியை கண்டேன். சென்னையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்காக கட்டுமான பணிகள் நடைப்பெற்று வருகிறது. என் அலுவலகத்தின் அருகே இருக்கும் ஒரு பெரிய மரத்தை பெயர்த்துக்கொண்டிருக்கிறார்கள் . எனக்கோ வருத்தம். அந்த மரத்தில் இருக்கும் பறவை என்ன செய்யும் என்று. தன் கூட்டை ஓரிரு மணிநேரத்தில் எப்படி அது மாற்றிக்கொள்ளும். அதன் குஞ்சுகளை எப்படி இடமாற்றம் செய்யும்? மனிதன் தனக்கு தேவையானதை மட்டும் சாதித்துக்கொள்ள நினைக்கிறானே தவிர அதனால் பாதிப்படையும் மற்ற உயிர்களைப் பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை..
* தினேஷ்மாயா *
1 Comments:
ellorum aptidhana irukanga,manushangalaye madhikadha ulagam paravaikala paththiya yosika poranga?
Post a Comment