நினைத்து பார்

Monday, June 17, 2013


* தினேஷ்மாயா *

திருமணம் என்பது

Tuesday, June 04, 2013


  காதலில் சேராதவர்கள் திருமணம் செய்துக்கொள்ள கூடாது என்றால், இங்கே பெரும்பாலானவர்களுக்கு திருமணமே நடந்திருக்காது. விவரம் தெரியாத வயதில் காதல் வந்தாலும் , விவரம் தெரிந்த வயதில் காதல் வந்தாலும் சரி. அது திருமணத்தில் முடிவதும் முடியாமல் போவதும் அவர்களின் கைகளில் இல்லை. காதல் என்பது வேண்டுமானால் இருவரின் தனிப்பட்ட உணர்வாக இருக்கலாம் அதற்கு சம்பந்தப்பட்ட இருவர் மட்டுமே போதும். ஆனால், நமது வாழ்க்கை சமூகத்தை சார்ந்த ஒன்று. திருமணம் என்பதும் சமூகம் சார்ந்த ஒன்று என்பதாலேயே பெரும்பாலான காதல் திருமணத்தை நெருங்குவதில்லை.

   திருமணம் என்பது இரண்டு மனம் ஒன்றற கலந்து இன்பத்திலும் துன்பத்திலும் துணையாக இருந்து தலைமுறை பலக்கண்டு வாழ்ந்து காட்டுவதே திருமண பந்தம். அப்படியானால், என்னைப்பொருத்தவரை காதல் என்பது திருமணத்தில் முடியகூடாது. திருமணத்தில் இருந்துதான் உண்மையாக காதல் ஆரம்பமாகும். அனைத்து உயிர்களுக் தங்களுக்கு ஏற்ற இணையை தேர்ந்தெடுத்து திருமண பந்தத்தில் இணைந்து, இயற்கை நியதியை கடைப்பிடித்து வாழவேண்டும்...

* தினேஷ்மாயா *

இரண்டு குழந்தைகள்


      நாமிருவர் நமக்கொருவர் என்கின்றனர் சமீபகாலமாக. இருப்பினும்
பின்னாளில், அவள் விருப்பத்தோடு எங்களுக்கு இரண்டு குழந்தைகள் போதும் !!

* தினேஷ்மாயா *

மாயா அருங்காட்சியகம்




   பல மாதங்களுக்குப் பிறகு என் அறையை அலசிப் பார்த்தேன். என் மாயா நினைவாக பல பொருட்களை என்னுடைய மாயா அருங்காட்சியகத்தில் சேமித்து வைத்திருக்கிறேன் பல வருடங்களாக.

* அவளின் கூந்தல்முடி

* அவளின் எழுதிக்கொடுத்த வாழ்த்து கவிதை

* அவள் கொடுத்த மோதிரம்

* அவள் 5th Semester Observation note

* அவள் வாங்கிக்கொடுத்த ஹீரோ பேனா

* அவளின் உடைந்த வளையல்

* அவளை உரசி சென்ற மரத்தின் இலை

* அவளும் நானும் சென்று உணவருந்திய உணவு விடுதியில் அவள் பயன்படுத்திய Tissue Paper

* அவள் உபயோகித்த நெற்றிப்பொட்டு

* அவள் வீட்டு குடும்ப அட்டையின் நகல் - அவளுக்கே தெரியாமல் சுட்டது

* அவள் எனக்கு கொடுத்த 10 ரூபாய்,50 ரூபாய், 100 ரூபாய் நோட்டுக்கள். அவள் எதேச்சையாக கொடுத்ததை நான் பத்திரப்படுத்திக்கொண்டேன்

* அவள் சாப்பிட்டுவிட்டு எனக்கு கொஞ்சம் கொடுத்த முந்திரி திராட்சை

* அவள் அணிந்த மோதிரம்

* அவளும் நானும் நண்பர்களோடு சேர்ந்து விளையாடியபோது அவள் எழுதிய/ கிறுக்கிய நோட்டு

* அவள் கைரேகை

இன்னும் ஏராளம் ஏராளம் இருக்கிறது என் மாயா அருங்காட்சியகத்தில். எல்லாவற்றையும் பட்டியலிட்டால் இடம் பத்தாது இங்கே. என்றாவது ஒரு நாள் படிக்கும்போது இவையெல்லாம் என் நினைவில் வந்துபோகும் என்றே சிலவற்றை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

- அன்புடன் -

*  தினேஷ்மாயா *

கற்பனை கதாபாத்திரம்



  நாம் செய்த தவறுகளுக்காக பிறரை கைக்காட்டுவதுதான் மனிதனின் இயல்பு. ஒட்டுமொத்த மனிதனும் ஒன்று சேர்ந்து தன் தவறுகளை மறைக்க உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதாபாத்திரம்தான் கடவுள் !!

* தினேஷ்மாயா *

காகிதப் பூக்கள்

Sunday, June 02, 2013




உண்மையான அன்பும்
காகிதப்பூவும் ஒன்றுதான்
என்றுமே வாடாது !!

* தினேஷ்மாயா *

என்ன வாழ்க்கடா இது !!



    இப்போது என் பெற்றோர்கள், நான் யாரை காதலித்தாலும் சம்மதம் தெரிவிக்க தயார். இந்த நிலைக்கு நான் வரும்போது என் காதல் என்னிடம் இல்லை.

என் காதல் என்னிடம் இருந்தபோது என் பெற்றோர்கள் என் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. என்ன வாழ்க்கடா இது !!

* தினேஷ்மாயா *

நீ இல்லனா



“ நீ இல்லனா நான் செத்துருவேன்”
- பெரும்பாலும் இப்படி வசனம் பேசிய காதலர்கள்தான் பிரிந்து சென்றிருக்கிறார்கள்..

* தினேஷ்மாயா *

ஒரு கேள்வி



ஒரு கேள்வி :  கோடிக்கணக்கில் நம் இந்தியாவில் வழக்குகள் தேங்கி இருக்கிறது என்று செய்திகள் வருகிறது.

அப்படி இருக்கையில், நீதித்துறைக்கு கோடை விடுமுறை விடுகிறார்களே. இது எதற்கு ??


* தினேஷ்மாயா *

மாணவ மணிகள் !!



     ஒவ்வொரு வருஷமும் +2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதலிடம் பிடித்தவர்கள் எல்லோரும், மருத்துவம் பயின்று இலவசமாக ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்தவர்கள்தான்.
      ஆனால் இதுநாள்வரை பேட்டிக்கொடுத்தது போல, எந்த மாணவ மணிகளும் இலவச மருத்துவம் செய்ததாக சரித்திரம் இல்லையே !!

* தினேஷ்மாயா *

ஔவை-யார்?

Sunday, May 26, 2013



* தினேஷ்மாயா *

கண்ணழகி


* தினேஷ்மாயா *

பாசம்



    சமீபத்தில் நான் பார்த்த இரண்டு படங்கள் என்னை கொஞ்சம் அதிகம் பாதித்தது. கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படமும், தென்மேற்கு பருவக்காற்று திரைப்படமும் சில தினங்களுக்கு முன்னர் பார்த்தேன்.

  கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் ஆரம்பம் முதல் நகைச்சுவையாக ரசிக்கும்படி இருந்தது. படம் முடியும் தருவாயில் தந்தையின் அன்பை எடுத்துரைக்கும் ஓர் பாடல் வந்து என் கண்களை குளமாக்கியது. இன்னமும் அந்த பாடல் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. 

  தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தை பார்க்கும்போதும் இதே உணர்வுதான். படம் ஆரம்பத்தில் வரும் பாடல்தான் கடைசியிலும் வந்தது. ஆனால், கடைசியில் அந்த பாடலை கேட்கும்போதும் மேலே சொன்ன அதே நிலைதான் ஏற்பட்டது. தாயின் அன்பை அற்புதமாக வெளிக்காட்டியிருக்கிறார் இயக்குனர்.


எத்தனையோ தமிழ் படங்கள் பார்த்திருக்கிறேன், இந்த இரண்டு படங்கள் காட்டும் தந்தையின் அன்பையும், தாயின் பாசத்தையும் மற்ற படங்களில் என்னால் உணரமுடியவில்லை..

* தினேஷ்மாயா *

உழைப்பு

Saturday, May 25, 2013


வியர்வையால்

இதுவரை

யாரும்

மூழ்கடிக்கப்படவில்லை !

- லோ. ஹாய்லர்



* தினேஷ்மாயா *

சிறந்த நண்பன்


புத்தகங்களும், நண்பர்களும்

குறைவாக இருந்தாலும்

சிறந்ததாக இருக்க வேண்டும்..

நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

வெற்றிக்கு அருகில்


* தினேஷ்மாயா *

சீர்திருத்தம்


* தினேஷ்மாயா *

அடிமையில்லை



* தினேஷ்மாயா *

நம்பிக்கை போதும்


* தினேஷ்மாயா *

அவமானம்


* தினேஷ்மாயா *

கைரேகை ?


* தினேஷ்மாயா *

அன்பு - பிரபஞ்சத்தின் ஒரே பொதுமொழி..

Tuesday, May 21, 2013



அன்பு - பிரபஞ்சத்தின் ஒரே பொதுமொழி..


* தினேஷ்மாயா *

விவசாயி

Monday, May 20, 2013


விவசாயியும் விவசாயமும் இல்லையென்றால், இந்த உலகம் என்றைக்கோ அழிந்துப்போயிருக்கும்...

* தினேஷ்மாயா *

பாதுகாப்பானதா?


நாம் உட்கொள்ளும் உணவு தானியங்களுக்கு பயன்படுத்தும் ரசாயன உரங்களை சுவாசிப்பதும் ஆபத்தென்றால், அந்த உணவை நாம் உட்கொள்வது எப்படி பாதுகாப்பானதாக இருக்க முடியும் ?

இதுப்போன்ற பொருட்களை கண்டறிவது கடினம்தான். அரசாங்கமும் விவசாய மக்களுமே இதற்கு ஓர் நல்ல தீர்வை கொண்டுவர முடியும்..

* தினேஷ்மாயா *

வழி


எல்லா பிரச்சனைகளுக்கும் வெளியேவர ஒரு வழி நிச்சயம் இருக்கும்..

* தினேஷ்மாயா *

இசை



* தினேஷ்மாயா *

என் வாழ்க்கை

Sunday, May 19, 2013


இது என் வாழ்க்கை ..

என் விதிகளின்படி

வாழ்கிறேன் ..

வெற்றியும் தோல்வியும் என்னையே சாரும் ..

அறிவுரை என்கிற பெயரில்

எவரும் பக்கத்தில் வந்துவிடாதீர்கள் ..

* தினேஷ்மாயா *

ஆரம்பம்


வெற்றி வேண்டுமானால், முதலில் நமது முயற்சியை ஆரம்பிக்க வேண்டும்..

* தினேஷ்மாயா *

கண்ணதாசன் பொன்மொழி


* தினேஷ்மாயா *

பொறுமை


* தினேஷ்மாயா *

கடந்த காலம்


* தினேஷ்மாயா *

வெளியேறு

நீ தடைகள் என்று  நினைக்கும் எதையும் தடைகளாக கருதாதே. அது நிச்சயம் பெரிய தடைகளாக இருக்காது. அதை உடைத்தெரிந்து வெளியேறு.. ஜெயிக்கலாம்..

* தினேஷ்மாயா *

நானிருப்பேன்


* தினேஷ்மாயா *

வராதே


* தினேஷ்மாயா *

யார் கொடுத்தது ?




போலீசாருக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது ?

 “உத்தர பிரதேச மாநிலத்தில் கொலை வழக்கில் பிடிபட்டவர், போலீஸ் சித்ரவதையால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.உத்தர பிரதேச மாநிலம் இடா மாவட்டத்தை சேர்ந்தவர் பல்பீர். கடந்த மாதம் நடந்த ஒரு கொலை தொடர்பாக பல்பீரையும் பேனி கான் என்பவரையும் சந்தேகத்தின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவகார் போலீசார் பிடித்து சென்றனர். குற்றத்தை ஒப்புக் கொள்ள வைப்பதற்காக, போலீசாரால் பல்பீர் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். சூடான தட்டில் அவரை உட்கார வைத்துள்ளனர். 

அடித்து உதைத்ததோடு பெட்ரோல், ஆசிட்டை ஊசி மூலம் உடலில் ஏற்றி டார்ச்சர் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சித்ரவதை தாங்காமல் மயங்கி விழுந்த பல்பீர், இடாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவரது நிலைமை மோசமானதை தொடர்ந்து லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, போலீசாரால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவர் வாக்குமூலமாக கொடுத்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பல்பீர் இறந்தார். பிரேத பரிசோதனையில் பல்பீர் உடல் முழுவதும் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பாக அவகார் போலீஸ் நிலைய சப்இன்ஸ்பெக்டர் சைலேந்திர சிங்  உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.”

- இதை ஒரு மனித உரிமை மீறல் பிரச்சனையாக பார்க்க வேண்டும். உயிரை கொல்லும் அதிகாரத்தை போலீசாரின் கைகளில் இந்த அரசாங்கமே கொடுத்திருக்கிறது. இது தீயவர்களை தண்டிக்கும் ஒரு கருவி என்று நீங்கள் கருதினால், அது நல்லவர்களையும் பதம்பார்க்கிறதே என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. தங்களை கேட்க யாருமில்லை என்கிற தைரியத்தில்தான் போலீசார் தங்கள் இஷ்டம்போல நடந்துக்கொள்கின்றனர். இந்த நிலையை மாற்ற நிச்சயம் ஒரு புரட்சி ஏற்பட்டால் மட்டுமே முடியும் என்று நினைக்கிறேன்.

* தினேஷ்மாயா *

தீர்ப்பு நாள்

Saturday, May 18, 2013


* தினேஷ்மாயா *

என்ன சொல்ல வற




ஒரு மணிநேர Advise-கு அப்புறம் என் மனசு கேக்குற ஒரே கேள்வி.
“நீ இப்ப என்ன சொல்ல வற”

* தினேஷ்மாயா *

மாத்தியோசி




 “ மாத்தியோசி” - இது எல்லா நேரங்களிலும் ஒத்து வராது !! ”

# எதையாச்சும் மாத்தியோசிக்கலாம்னு யோசிச்சப்ப உதிர்ந்தது இது...

* தினேஷ்மாயா *

SELFISH



ஏன் இப்படி Selfish-ஆ இருக்கனு கேட்குறாங்க. அதுக்காக எனக்கும் சேர்த்து உன்னை சாப்பிட சொல்லவா முடியும் !? 
என் வேலைகளையாச்சும் எனக்காக என்னை செய்ய விடுங்களேன்..

* தினேஷ்மாயா *

வேத வாக்கு


வேதங்களை ஒரு சில இனத்தவர்தான் படிக்க வேண்டும் என்று வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்ன ?

* தினேஷ்மாயா *