காதலில் சேராதவர்கள் திருமணம் செய்துக்கொள்ள கூடாது என்றால், இங்கே பெரும்பாலானவர்களுக்கு திருமணமே நடந்திருக்காது. விவரம் தெரியாத வயதில் காதல் வந்தாலும் , விவரம் தெரிந்த வயதில் காதல் வந்தாலும் சரி. அது திருமணத்தில் முடிவதும் முடியாமல் போவதும் அவர்களின் கைகளில் இல்லை. காதல் என்பது வேண்டுமானால் இருவரின் தனிப்பட்ட உணர்வாக இருக்கலாம் அதற்கு சம்பந்தப்பட்ட இருவர் மட்டுமே போதும். ஆனால், நமது வாழ்க்கை சமூகத்தை சார்ந்த ஒன்று. திருமணம் என்பதும் சமூகம் சார்ந்த ஒன்று என்பதாலேயே பெரும்பாலான காதல் திருமணத்தை நெருங்குவதில்லை.
திருமணம் என்பது இரண்டு மனம் ஒன்றற கலந்து இன்பத்திலும் துன்பத்திலும் துணையாக இருந்து தலைமுறை பலக்கண்டு வாழ்ந்து காட்டுவதே திருமண பந்தம். அப்படியானால், என்னைப்பொருத்தவரை காதல் என்பது திருமணத்தில் முடியகூடாது. திருமணத்தில் இருந்துதான் உண்மையாக காதல் ஆரம்பமாகும். அனைத்து உயிர்களுக் தங்களுக்கு ஏற்ற இணையை தேர்ந்தெடுத்து திருமண பந்தத்தில் இணைந்து, இயற்கை நியதியை கடைப்பிடித்து வாழவேண்டும்...
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment