சிறிய இடைவேளைக்கு பிறகு

Sunday, June 04, 2017

 ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு, வீட்டில் பெண் பார்க்கும் படலத்தை தொடர்கிறார்கள். இப்போதுதான் புரிகிறது, பெண் பார்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல என்று. பெரியவர்கள் என்னென்னவெல்லாமோ சிந்திக்கிறார்கள். அது சரி, இது நம் வாழ்க்கையாச்சே, பல கோணங்களில் சிந்தித்துதாந் ஒரு முடிவுக்கு வருவார்கள். இதுவரை ஓரிரு முறை பெண் பார்க்க சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் நல்லா சொதப்பினேன். பெண்ணை பார்க்க தயங்கி பார்க்காமலே திரும்பி வந்து.. இப்படி நல்லாவே சொதப்பினேன். இனிமேலாச்சும், ஒழுங்கா பெண்ணை பார்த்து முடிந்தால் ஓரிரு வார்த்தை பேசவேண்டும். அப்படி வாய்ப்பு கிடைத்தால் பேச நிறைய சிந்தித்து வைத்திருக்கிறேன். பேசி முடித்தபின் அதை இங்கே பகிர்கிறேன். பார்ப்போம் அடுத்து என்னதான் நடக்கப்போகிறதென்று..

* தினேஷ்மாயா *

0 Comments: