வெள்ளை வெளிச்சம்

Wednesday, April 19, 2017



இன்று கோவை கொடிசியா மைதானத்தில் தினமணி நாளேடு சார்பாக நடந்த "வெள்ளை வெளிச்சம்" நிகழ்ச்சி சென்றிருந்தேன். கவிஞஎ வைரமுத்து அவர்கள் வள்ளலார் பற்றி பேசினார், பின் அவரைப்பற்றி கவியும் பாடினார். 

எனக்கு வள்ளலாரையும் பிடிக்கும் வைரமுத்துவையும் பிடிக்கும். இன்றைய நிகழ்ச்சியில் கவியின் பேச்சு வழக்கம்போல மிக அருமையாக இருந்தது. வள்ளலார் ஒரு புரட்சி துறவி. சுத்த சன்மார்க்க சபை தோற்றுவித்து சமூகத்திலும் சமயத்திலும் பல புரட்சிகளை கொண்டுவந்தவர். இன்னும் வள்ளலார் பற்றி நிறைய கூறினார். 

19-ஆம் நூற்றாண்டு இந்தியாவில் கடும் பஞ்சம். அதை தன் கவி பாணியில் விவரித்தார் கவிஞர். மக்களின் கண்ணீர் துளிகளின் அளவு விண்ணின் மழைத்துளிகளைவிட அதிகமாக இருந்தது என்றார்.

மனிதன்தான் இவ்வுலகில் தோன்றிய கடைசி உயிரினம். ஆனால் அவன்தான் இவ்வுலகை அழித்து வருகிறான். இவ்வுலகம் விலங்குகளுக்கான உலகம், பறவைகளுக்கான உலகம், பூச்சிகளுக்கான உலகம்.

இலட்சியவாதிகளின் பயணம் மாலைக்குள் முடிவு தெரியும் விளையாட்டல்ல, பல போராட்டங்கள் நிறைந்தது, அதற்கான வெற்றி நிச்சயம் ஒருநாள் வரும்.

இன்னும் இப்படி மனதை கவரும்படி நிறைய சொன்னார்.

வள்ளலாரை பெரியார், பாரதியார் இவர்களுடன் சம்பந்தப்படுத்தி பேசினார். இவர்கள் இருவரும் வள்ளலாரின் கருத்துக்களையே தங்கள் பாணியில் கையாண்டு மக்களுக்கு சொன்னார்கள் என்றார். நிறைய நிறைய ஆராய்ச்சி செய்திருப்பார் போல கவிஞர். அவர் சொன்ன பல கருத்துக்கள் மனதில் உள்ளன. ஆனால் அனைத்தையும் இங்கே பதிய வார்த்தைகளை என்னால் தேட முடியவில்லை. அதனால் இத்தோடு இதை முடித்துக்கொள்கிறேன். 

அருமையான ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மன நிறைவுடன் வீடு வந்தேன்.

* தினேஷ்மாயா *

0 Comments: