அலை பாயுதே கண்ணா

Sunday, April 16, 2017



பல்லவி:


அலை பாயுதே கண்ணா

என் மனம் அலை பாயுதே

ஆனந்த மோஹன வேணுகானமதில்

அலை பாயுதே கண்ணா

உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்

அலை பாயுதே கண்ணா


அனுபல்லவி:


நிலை பெயராது சிலை போலவே நின்று

நிலை பெயராது சிலை போலவே நின்று

நேரமாவதறியாமலே

மிக விநோதமான முரளிதரா

என் மனம் அலை பாயுதே

கண்ணா....



சரணம்:


தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே

திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே

கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே

கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!


கதித்த மனத்தில் உறுத்திதி பதத்தை

எனக்கு அளித்து மகிழ்த்த வா !

ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு

உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!

கணைகடலலையினில் கதிரவன் ஒளியென

இணையிருக் கழலெனக் கனித்தவா!

கதறி மனமுருகி நான் அழைக்கவா

இதர மாதருடன் நீ களிக்கவோ ?

இது தகுமோ? இது முறையோ?

இது தருமம் தானோ?


குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்

குழைகள் போலவே

மனது வேதனை மிகவோடு


அலை பாயுதே கண்ணா

என் மனம் மிக அலை பாயுதே

உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்

அலை பாயுதே கண்ணா



ராகம்: கானடா

தாளம்: ஆதி

பாடல் இயற்றியவர்: ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்


மிக அருமையான பாடல். ஒரு வழியாக இந்த பாடலை நான் மனப்பாடம் செய்துவிட்டேன். கேட்கவும் சரி, பாடவும் சரி அவ்வளவு இனிமையாக இருக்கிறது இந்த பாடல். நேரம் கிடைக்கையில் கேட்டுப்பாருங்கள்.

* தினேஷ்மாயா *

0 Comments: