வானமே போர்வை..

Tuesday, April 11, 2017




      ரொம்ப நாள் கழிச்சு, மொட்டை மாடியில் படுக்க வந்திருக்கேன் இன்று. கோவையில் வெயில் கொஞ்சம் கம்மிதாம் ஆனாலும் இரவு நேரத்தில் வீட்டினுள் உஷ்ணம் அதிகம். ஆனாலும் அதிகாலையில் இங்கே பனி கொஞ்சம் கொட்டும். சரி, எது எப்படியோ என்று இன்று படுக்கையை மொட்டை மாடிக்கு மாற்றிட்டேன். மேலே இருக்கும் புகைப்படம் படுத்துக்கொண்டு வானத்தை இரசித்தப்போது எடுத்தேன். வானில் நிலா மட்டும் அப்புறம் பக்கத்தில் ஒரேயொரு நட்சத்திரம் மட்டும். இன்று பௌர்ணமி வேறு. வெளிச்சம் கொஞ்சம் துக்கலாகத்தான் தருகிறான் சந்திரன். 

   பூமியே மெத்தையாய், வானமே போர்வையாய். செம சூப்பரா இருக்கு இப்படி தூங்க. ஆனா என்ன, இளையராஜா, ரஹ்மான் இவர்கள் இசையோடு கொசுவின் ரீங்கார இசையும் கேட்கவேண்டிய சூழல். 

   சமீபத்தில் காற்று வெளியிடை படத்தில் வரும் அழகியே, சாரட்டு வண்டியில பாடல்கள் கேட்டேன். அந்த படத்துல எல்லா பாட்டும் கேட்டேன் ஆனால் இந்த இரு பாடல்கள் ரொம்ப பிடிச்சுபோச்சு. அழகியே பாடல் Repeat Mode -ல ரொம்ப நேரமா ஓடிட்டே இருக்கு. படம் இன்னும் பார்க்கல. ம்.. முடிஞ்சா இந்த வாரம் இல்லனா அடுத்த வாரம் பார்க்கலாம்னு இருக்கேன். படம் பாத்துட்டு அதைப்பற்றி அப்புறம் பதிவு செய்றேன்.

"துளி காலம் கேட்டேன்
துளி காதல் கேட்டேன்
துளி காமம் கேட்டேன்
மறு உயிரே
மறுக்காதே நீ
மறக்காதே நீ
எந்தன் அழகியே!"

"Honest-ஆ நான் பேசவா
இல்லை இது போதுமா?"

"Waiting for a புன்னகை.. சிரிடி..
காணவில்லை Heartbeat.. திருடி.."

"Chorus-ஆ நான் கேட்கவா ?
Yes-ஆ Yes-ஆ No-ஆ Yes-ஆ?"

"அழகியே ! 
Marry Me
Marry Me "

இவையெல்லாம் #காற்று_வெளியிடை படத்தில் #அழகியே பாடலில் எனக்கு ரொம்ப பிடிச்ச வரிகள். வழக்கமான ARR Touch இந்த பாட்டிலும் இருக்கு. அதான் ரொம்ப பிடிச்சுருக்கு போல.

ம்.. சரி கொஞ்சம் போரடிக்குது. வானில் நட்சத்திரங்கள் ஏதுமில்லை. இருந்துச்சுனா அதை எண்ணிக்கொண்டிருப்பேன். சரி.. என்ன பண்ணலாம்?
ம்.. சரி அந்த நிலாவத்தான் என் கையில் பிடிச்சேன்னு ஒரு பாட்டு வரும். இருங்க. அதுமாதிரி நானும் முயற்சி செய்றேன்.



ஏதோ கொஞ்சம் முயன்று நிலாவை கைது செஞ்சுட்டேன். காலையில் விடுதலை செஞ்சுரலாமா இல்ல சூரியன் வந்து ஜாமீனில் எடுக்கும்வரை அப்படியே பிடிச்சு வெச்சிருக்கட்டுமா ?

இந்த நிலவுதான் உலகில் இருக்கும் எத்தனை கவிஞர்களுக்கு ஒரு பொதுவான காதலி !
நிலாவைப்பற்றி கவிதை எழுதாத கவிஞர் எவராவது உண்டா ? நானும்கூட எத்தனையோமுறை நிலாவைப்பற்றி எழுதியதுண்டு. நிலவை சந்திரன் என்று இதிகாசங்கள் சொன்னாலும் கவிஞர் மனதில் நிலா என்றுமே ஒரு அழகிய பெண்மணிதான்..

என்னங்க இது.. கொஞ்சம் கூட காத்து வீசாம இந்த மரமெல்லாம் சும்மா நின்னுட்டு இருக்கு.. சரி.. தப்பெல்லாம் நாம செஞ்சுட்டு மரத்தை குற்றம் சொல்றது என்ன நியாயம்.

ஓ.. நேரம் 2 ஆகப்போகுதா ! சரி.. கொஞ்ச நேரம் தூங்கறேன். எப்படியும் காலை 5:30 மணிக்கெல்லாம் சூரியன் வந்து எழுப்பிருவான். அதுகுள்ள கொஞ்சம் தூங்கிக்கறேன். வரப்போகும் தேவதையோடு கனவில் என்னுலகத்தை அவளுக்கு சுற்றிக்காட்டிவிட்டு வருகிறேன்..

இனிய இரவு வணக்கம்...

கடைசியாக, வரப்போகும் என்னவளுக்கு காற்று வெளியிடை படத்தில் மேலே சொன்ன பாடலில் இருந்து இரண்டு வரிகளை சமர்ப்பிக்கிறேன்..

"அழகியே ! 
Marry Me
Marry Me "


"துளி காலம் கேட்டேன்
துளி காதல் கேட்டேன்
துளி காமம் கேட்டேன்
மறு உயிரே
மறுக்காதே நீ
மறக்காதே நீ
எந்தன் அழகியே!"

"Honest-ஆ நான் பேசவா
இல்லை இது போதுமா?"

* தினேஷ்மாயா *

0 Comments: