காதலியாய் வந்து..

Monday, February 16, 2015



மனதில் -

என் காதலை

கோலம் போட்டு வைக்கிறேன்,

குழந்தைபோல் வந்து அழித்துவிட்டு செல்கிறாய்..

மனதில் -

என் காதலை

கோட்டை கட்டி வைக்கிறேன்,

எதிரிபோல் வந்து தகர்த்துவிட்டு செல்கிறாய்..

மனதில் -

என் காதலை

கோவில்  கட்டி வைக்கிறேன்,

படையெடுத்துவந்து இடித்துவிட்டு செல்கிறாய்..

மனதில் - 

என் காதலுக்கு

உயிர்கொடுத்து வைக்கிறேன்..

காதலியாய் வந்து கொன்றுவிட்டு செல்கிறாய்..

* தினேஷ்மாயா *

0 Comments: