வேலையில்லா பட்டதாரி தனுஷ் வசனம்

Saturday, August 09, 2014



" ஏண்டா வெள்ள பன்னி,

எந்த வேலையும் செய்யாம தகுதியான படிப்பும் இல்லாம உங்க அப்பா பணக்காரங்கற ஒரே காரணத்தால நோகாம நேரா முதலாளி Seat-ல உக்காந்த உனக்கே இவ்ளோ திமிர் இருக்கே..

அப்பா, அம்மா கஷ்டப்பட்டு  School-க்கு Donation கட்டி L.K.G.-லந்து பத்தாவது வரைக்கும் Fail-லாகாம படிச்சி பத்தாவதுல Easy-யான Group-பெல்லாம் வுட்டுட்டு இந்த Group எடுத்தாதான் Engineer-ஆக முடியும்னு கஷ்டமான Group-ஆ எடுத்து, Physics-க்கு ஒரு Tuition, Chemistry-க்கு ஒரு Tuition, Maths-க்கு ஒரு
Tuition-ன்னு Road Road-ஆ அலைஞ்சு.. அதுக்கு Fees கட்ட பெத்தவங்களவேற Road Road-ஆ அலைய விட்டு Public Exam-ல pass ஆகறத்துக்கு night எல்லாம் Flask-ல Tea வச்சி, படிச்சி, காலைல Alarm வச்சி எந்திருச்சு, படிச்சு, அதுல வாங்குன Mark-லாம் பத்தாம, TNPC Examக்குன்னு வேற தனியா ரெண்டு மாசம் உக்காந்து, படிச்சி, அதுல வாங்குன Cut-off Mark Useless-ஆ  போய் அம்மா நகைய அடமானம் வச்சு College-ல Seat வாங்கி First year-ல இருந்து Fourth Year வரைக்கும் வெச்ச Arrear-லாம் Fourth Year-ல மொத்தமா Clear பண்ணி, இந்த Society-குள்ள நொழைஞ்சா இந்த சொசைட்டி என்ன வேலையில்லனு செருப்பால அடிச்சி Road Road-ஆ வேலை தேடி அலஞ்சு, மூணு வருஷம் நாலு வருஷம் வீட்டுல தண்டமா உக்காந்து, அப்பா என்ன தண்டச்சோறு, தண்டச்சோறு-ன்னு திட்டி, சாப்புடுற ஒவ்வொரு வாய் சாப்பாடும் தொண்டைல சிக்கி, சிக்கி, வலிச்சு, வலிச்சு இறங்கி, எவனோ ஒரு புண்ணியவான் கடைசில ஒரு நல்ல மனுசன் எனக்கு வேல குடுத்து, அதையும் புடிங்க்க நினைக்கற உன்னமாரி ஒரு பொறம்போக்கெலாம் சமாளிச்சு, இன்னைக்கு உன் முன்னாடி நின்னு பேசிக்கிட்டிருக்கற வேலையில்லா பட்டதாரி எனக்கு எவ்ளோ திமிர்ரா இருக்கும் ? "


வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் வரும் இந்த வசனம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் இந்த வசனத்தை இணையதளத்தில் பதிவு செய்ய எந்த ஒரு வேலையில்லா பட்டதாரியும் முன்வரவில்லை. ஆகையால், எனக்கு பிடித்த இந்த வசனத்தை இந்த வேலையில்லா பட்டதாரி இங்கே பதிவு செய்கிறேன்.

* தினேஷ்மாயா *