பத்து கேள்விகள்

Friday, August 08, 2014



    என் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தார். அதில் பத்து கேள்விகள் இருந்தது. அந்த கேள்விகளுக்கு தவறாமல் பதில் அனுப்பவும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் நான் அவருக்கு பதில் ஏதும் அனுப்பவில்லை. அந்த கேள்விகளுக்கான பதிலை இங்கே பதிவுசெய்கிறேன்.

1. இந்த உலகத்துல உனக்கு ரொம்ப பிடிச்ச நபர் ?
 பதில்:  அம்மா

2. காதலிப்பது சரியா / தவறா ?
பதில்: சரி

3. ரொம்ப Miss பண்ற நபர் ?
பதில்: என்னுயிர் தோழி இந்து மற்றும் என்னுயிர் தோழன் சுரேஷ்.


4. வாழ்க்கை துணை எப்படி அமைய வேண்டும் ?
பதில்: என் வலைப்பக்கத்தை முழுதும் படித்துவிட்டு, என்னைப்பற்றி இன்னும் கேட்டறிந்து என்னை ஏற்றுக்கொள்பவளாக இருக்க வேண்டும். அவள் என் குழந்தையாகவும் இருக்க வேண்டும், நானும் அவளுக்கு ஒரு குழந்தையாய் இருக்க வேண்டும்.

5. கடவுள் உன்னிடம் ஒரு வரம் கேட்டால், என்ன கேட்பீர்கள் ?
பதில்: என் வாழ்க்கை முழுவதையும், உலகம் சுற்றுவது, புகைப்படம் எடுப்பது, திரைப்படங்கள் எடுப்பது, வலையில் கிறுக்குவது, என்றென்றும் காதலோடு வாழ்வது, உயர்ந்த மனிதனாய் அனைவர் மத்தியிலும் மதிக்கப்பட வேண்டும், உலகிற்கு என்னால் இயன்ற உதவியை மூச்சு இருக்கும்வரை செய்துக்கொண்டே இருக்க வேண்டும். எல்லாவற்றையும்விட மேலாக, நல்ல மனிதனாய் இருக்க வேண்டும்.

6. எப்பவும் பக்கத்துல இருக்கனும்னு நினைக்கிற ஒரு நபர் ?
பதில்: பிரிவு என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதை உணர்ந்தவன் நான். அதனால் இந்த கேள்வி எனக்கு பொருந்தாது.

7. வாழ்க்கையில் எது சிறப்பாக இருக்கவேண்டும் என நினைக்கிறீர்கள் ?
பதில்: என் 50 வயதுக்கு மேற்பட்ட வாழ்க்கை. அந்த வயதை நான் ஆன்மீகத்தில் கழிக்க விரும்புகிறேன்.

8. உனக்கு ரொம்ப பிடிச்ச உன் வயது ?
பதில்: நாம் 11-ஆவது மற்றும் 12-ஆவது படித்த வயது. என் வாழ்நாளின் பொற்காலம். காதல் மலர்ந்த காலம் !

9. உனக்கு ரொம்ப பிடிச்ச பரிசு ?
பதில்: மயிலிறகு

10. உனக்கு ஒரு பிரச்சனை என்றால், யாரிடம் சொல்ல விரும்புவீர்கள் ?
பதில்: கடவுளிடம்.


* தினேஷ்மாயா *

0 Comments: