அதென்னமோ தெரியல.. சுதந்திர தினம், குடியரசு தினம் வரும்போதுதான் நம்மவர்களுக்கு தேசபக்தி பொத்துக்கொண்டு வரும். எங்கு பார்த்தாலும், இந்திய தாயே என்பார்கள், தேசியக் கொடியை கண்டமேனிக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த தேசபக்தி மற்ற நாட்களில் எங்கு போய் மறைந்துக்கொள்கிறது ?
சாலையில் நடப்பவன் முதல் சாட்டிலைட் விடுபவன் வரை, சாக்கடை அள்ளுபவன் முதல் நாட்டை ஆள்பவன் வரை , இருக்கும் விதிமுறைகளை முறையாக பின்பற்றி மனிதாபிமானத்துடன் சக குடிமகனுக்கு உதவிசெய்து, ஒரு நல்ல குடிமகனாக வாழ்வதுதான் உண்மையான தேசபக்தி. இந்த தேசபக்தியை வருடத்தின் ஒவ்வொரு நாளும் மனதில் கொண்டிருங்கள். இந்த இரண்டு நாட்களில் மட்டும் தேசத்தை புகழ்வதெல்லாம் தேசபக்தியாகிவிடாது.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment