skip to main |
skip to sidebar
சிலர் பணத்தை முதலீடு செய்கின்றனர்..
சிலர் நம்பிக்கையை முதலீடு செய்கின்றனர்..
சிலர் அறிவை முதலீடு செய்கின்றனர்..
சிலர் காதலை முதலீடு செய்கின்றனர்..
சிலர் அன்பை முதலீடு செய்கின்றனர்..
சிலர் அழகை முதலீடு செய்கின்றனர்..
சிலர் திறமையை முதலீடு செய்கின்றனர்..
சிலர் பக்தியை முதலீடு செய்கின்றனர்..
சிலர் பலத்தை முதலீடு செய்கின்றனர்..
இவளோ தன் உடலை முதலீடு செய்கிறாள்..
ஆக மொத்தம், அனைவரின் கடைசி நோக்கமும் ஒன்றுதான் போல !!
* தினேஷ்மாயா *
இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்
Monday, August 25, 2014
Posted by
தினேஷ்மாயா
@
8/25/2014 09:10:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்
ஒரு காதல் வந்துச்சோ !!
Posted by
தினேஷ்மாயா
@
8/25/2014 09:06:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
செய்யாததை செய்
Sunday, August 17, 2014
Posted by
தினேஷ்மாயா
@
8/17/2014 09:43:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
ஓய்வு
Posted by
தினேஷ்மாயா
@
8/17/2014 09:39:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
அப்துல் கலாம் வார்த்தைகள்
Posted by
தினேஷ்மாயா
@
8/17/2014 09:36:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
அப்துல் கலாம்,
கலாம் பொன்மொழிகள்,
கலாம் வார்த்தைகள்
புத்தர்
Saturday, August 16, 2014
Posted by
தினேஷ்மாயா
@
8/16/2014 11:05:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
எபோலா !!
Wednesday, August 13, 2014
சமீபகாலமாக உலகையே உலுக்கிவரும் ஒரு பெரிய பிரச்சனை - எபோலா !
இந்த நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டிவிட்டது. மருத்துவதுறையில் எண்ணற்ற வளர்ச்சி கண்டுவிட்டாலும், இந்த கொடிய நோய்க்கு மருந்து இன்னமும் கண்டறியப்படவில்லை.
நம் அரசாங்கம் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வரவேற்கதக்கதாக இருந்தாலும், இன்னமும் பல முற்போக்கான நடவடிக்கை முயற்சிகளிலும் ஈடுபடலாம்.
நாம் இங்கே மக்களுக்கு தைரியம் சொல்லிக்கொண்டிருந்த வேளையில், அங்கே அமெரிக்கா விஞ்ஞானிகள் இந்த நோய்க்கான மருந்து ஒன்றை கண்டறிந்து சோதிக்க ஆப்ரிக்க நாடுகளுக்கு கொடுத்திருக்கின்றனர். நம் அரசும், நம் விஞ்ஞானிகளை இந்த நோய்க்கான மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் முடுக்கிவிடலாம். ஒருவேளை அமெரிக்கா இந்த மருந்து வெற்றிகரமானது என்பதை உறுதிசெய்துவிட்டால், இந்த நோயை ஒரு வியாபார யுக்தியாக அந்நிய சக்திகள் கையில் எடுத்துக்கொள்ளும். பின்னர் அவர்கள் வைத்ததுதான் விலை என்கிற நிலைவந்துவிடும். இது உலக பொருளாதாரத்தையும் மக்களின் உயிரையும் பெரிதும் பாதிக்கும்.
இதுவரை உலக மருத்துவ விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து இந்த நோய்க்கான மருந்தை கண்டறிய எந்த ஒரு கூட்டமும் கூட்டவில்லை என்பதுமட்டும் எனக்கு தெரிகிறது. உலகத்தின் ஒவ்வொரு மூலையில் இருக்கும் சிறந்த அறிஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தை கண்டறிய முயற்சி செய்யவேண்டும்.
இந்திய அரசாங்கம், ஆப்ரிக்க நாட்டில் இருந்து குறிப்பாக நோய்தொற்று இருக்கும் நாடுகளில் இருந்து இந்தியாவரும் ஒவ்வொரு பயணியையும் தீவிரமாக கண்காணிப்பதாக தெரிவித்துள்ளது. நம் அரசாங்கத்திற்கு இன்னொரு கோரிக்கையும் வைக்கிறேன். ஆப்ரிக்க தேசத்தில் இருந்து வரும் மக்களைமட்டும் கண்காணிக்காமல், கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன் ஆப்ரிக்க தேசத்துக்கு பயணம் மேற்கொண்டு பின்னர், வேறு நாட்டிற்கு சென்று அங்கிருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளையும் கண்காணிப்பது இந்த தருணத்தில் கொஞ்சம் அதிகம் கைகொடுக்கும் என நம்புகிறேன். இதற்கு ஏதுவாக பயணிகளே தாமாக முன்வந்து தாங்கள் அந்த நாடுகளுக்கு சமீபத்தில் பயணப்பட்டிருக்கிறார்களா என்றும் தெரியப்படுத்தலாம்.
எது எப்படியிருந்தாலும், இந்த நிலை இப்படியே இருந்துவிடப்போவதில்லை. இந்த கொடிய நோய்க்கு மருந்தும் தடுப்பு மருந்தும் அதிவிரைவில் கண்டறியப்படும். அதுவரை இந்த நோய்க்கு பலியான அந்த அப்பாவி மக்களுக்காக பிரார்த்திப்போம்.
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/13/2014 10:23:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
எபோலா
கூடு
Tuesday, August 12, 2014
கூடு கட்ட -
பறவை யாரிடமும்
அனுமதி கேட்பதில்லை.
என்னுள் நீ வர
நீயும் என்
அனுமதி கேட்பதில்லை..
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/12/2014 10:00:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
புத்தக கனவு
இன்றைய கனவு ரொம்ப சிறியது. என் வீட்டில் நான் வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை எல்லாம் எடுத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதில் சிலவற்றை என் கைகளில் எடுத்துக்கொண்டு எங்கோ ஒரு இடத்துக்கு சென்றுக்கொண்டிருக்கிறேன். அது சற்று மேடான இடம். கீழே இருந்து அந்த இடத்துக்கு நான் மூச்சிரைக்க நடந்து செல்கிறேன். அந்த இடத்தை அடைந்ததும், சென்னை புத்தக கண்காட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று எழுதியிருக்கிறது. இப்போதுதானே முடிந்தது, அதற்குள் மீண்டும் நடத்துகிறார்களே என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
கனவு அவ்வளவுதான். இத்தோடு இந்த கனவு முடிந்தது, வேறு கனவும் வரவில்லை, தூக்கமும் கலையவில்லை !
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/12/2014 08:28:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
மூன்று கனவு
Sunday, August 10, 2014
இன்று மதியம் ஒரு 12 மணிக்கு சிறிது நேரம் தூங்கலாம் என்று கண் அயர்ந்தேன். 1 மணிக்கு கண் விழித்த அடுத்த நொடி எனக்கு இந்த 1 மணி நேரத்தில் வந்த 3 கனவுகளை இங்கே பதிகிறேன். இரண்டு கனவுகள் சிறிய கனவுதான். அடுத்த கனவுதான் கொஞ்சம் பெரிய கனவு.
1. என் கல்லூரியில் எனக்கு அறிமுகமான அக்கா ஒருவருக்கு திருமண வாழ்வில் ஏதோ ஒரு பிரச்சனை. அவர் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். அதனால் நான் அவரை தொலைப்பேசியில் அழைக்கிறேன். ஆனால் மறுமுனையில் வேறொரு பெண் எடுக்கிறார். அவரின் குரல் எனக்கு பரிச்சயமானது போல இருந்தாலும் அவர் யாரென்று எனக்கு தெரியவில்லை. அவர் யாரென்று தன்னை அறிமுகம் செய்துக்கொள்ளாமலே அக்காவின் பிரச்சனை என்னவென்று சொல்லிக்கொண்டிருக்கிறார். நான் அனைத்தையும் கேட்டு முடித்துவிட்டு, அக்காவிடம் தொலைப்பேசியை கொடுங்கள் என்றேன். அவர் அக்காவே பிறகு உங்களை அழைப்பார்கள் என்று சொல்லிவிட்டு வைத்துவிடுகிறார்.
இந்த கனவு வர காரணம், சில தினங்களுக்கு முன்னர்தான் அவர் தன் முகநூலில் ஒரு கவிதை எழுதியிருந்தார். அந்த கவிதையை படித்துப் பார்த்தபோது அவர் குடும்ப வாழ்வில் ஏதோ பிரச்சனை இருப்பதுபோல உணர்ந்தேன். அது என்னை அந்தளவிற்கு பாதித்துள்ளது போல. அதான் வெகு விரைவில் கனவில் வந்திருக்கிறது.
2. என் அறையில் என்னுடன் தங்கியிருக்கும் கோகுல் மற்றும் மேல் அறையில் தங்கியிருக்கும் ஜோசப் இருவரும் எங்கோ வெளியில் கிளம்புகின்றனர். எங்கு கிளம்ப போகிறீர்கள் என்று கேட்கிறேன். ஆனால் அத்துடன் கோகுல் தன் வண்டியை விட்டுவிட்டு வேறொரு நண்பரின் வண்டியில் வேகவேகமாக கிளம்புகிறார். அத்துடன் கனவு முடிகிறது.
3. இந்த கனவுதான் என்னை இங்கே பதிவு செய்ய தூண்டியது. மிகவும் அழகான கனவு. கல்லூரியில் என் இறுதியாண்டில் என் வாழ்க்கையில் வந்த அந்த தோழி என் கனவில் வந்தால். இப்போது அவள் என் வாழ்வில் இல்லை. சரி, கனவுக்கு வருகிறேன்.
கனவு எங்கள் கல்லூரியில் ஆரம்பிக்கிறது. நானும் அவளும் கல்லூரியை முடித்துவிட்டோம். ஆனால் மீண்டும் கல்லூரிக்கு எதேச்சையாக இருவரும் வந்திருக்கிறோம். எங்கள் நண்பர்கள் யாரும் வரவில்லை. அவளை தூரத்தில் இருந்து பார்க்கிறேன். அவளுக்கு எனக்கு சிறிய கருத்துவேறுபாடு இருந்ததால் இருவரும் பேசிக்கொள்வதில்லை. இரண்டு வருடங்களாக எந்த தொடர்புமில்லை அதனால் எப்படி அவளை அணுகி பேச ஆரம்பிப்பது என்று தயங்கினேன். இதில் தயக்கம் என்ன என்று நானே அவளை அணுகி பேசினேன். எப்படி இருக்க என்று. அவளும் சகஜமாகவே பேசினாள்.பேசிக்கொண்டே இருவரும் Canteen சென்றோம். அது மதிய நேரம் என்பதால், சாப்பிடலாமா என்று கேட்டால். சரி என்று அவளுக்கும் எனக்கும் உணவு வாங்கிக்கொண்டு, அங்கே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். அக்கா எப்படி இருக்காங்க, போன வருஷம் இந்தியா வந்திருந்தாங்க போல என்றேன். அவள் ஒரு கோபம் கலந்த பார்வையில் என்னை பார்த்தால். அந்த கோபத்திற்கான அர்த்தம் எங்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். நான் சிரித்துக்கொண்டே, சரி சரி, சொல்லு என்றேன். ஆமாம் போன வருஷம் ஊருக்கு வந்திருந்தாங்க. மூனு மாசம் முன்னாடிதான் கிளம்பி போனாங்க, இப்ப அம்மாவும் அக்காகூடத்தான் இருக்காங்க என்றாள். பேசிக்கொண்டிருக்கும்போதே, இங்கே வேணாம், நாம் வெளியில் சென்று அமர்ந்துக்கொள்வோம் என்றால். நான் ஏன் என்று சுற்றிமுற்றிப் பார்த்தேன். அவள் எதுவும் சொல்லாமல் எழுந்து நடந்தாள். நானும் வெளியே வந்துவிட்டேன். பிறகு, அவளும் நானும் அருகில் இருக்கும் ஒரு கடைக்கு செல்கிறோம். அங்கே சுண்டல் மட்டுமே இருக்கிறது. வேறு எதுவுமில்லை. உணக்கும் சுண்டல் வாங்கட்டுமா என்று கேட்கிறேன். அவளும் சரி என்கிறாள். அவள் சரி என்று சொன்னதும் அந்த கடைக்கு செல்கிறேன் உடனே என் கல்லூரி மறைந்து ஒரு கிராத்தில் இருக்கிறேன். ஆனால் நான் கேட்ட அதே கடை, அதே சுண்டல், அதே கடைக்காரர்கள். ஆனால் முதலில் கேட்டபோது கல்லூரியில் இருக்கிறோம், அடுத்த நொடி ஒரு கிராமத்தில் அதே சூழ்நிலையில் இருக்கிறொம். சற்று குழம்பிப்போனவனாய், ஒரு சுண்டல் தாருங்கள் என்கிறேன். அந்த கடைக்காரர் அதற்கு ஒன்றெல்லாம் தர முடியாது இரண்டுதான் தரமுடியும் என்கிறார், அதுவும் கன்னட மொழியிலோ அல்லது தெலுங்கு மொழியிலோ. எதுவென்று சரியாக கணிக்கமுடியவில்லை. அவளிடம் சென்று, உனக்கு கன்னடம் தெரியும்தானே, அவர்கள் என்ன பாஷை பேசுகிறார்கள் என்று சொல்லேன் என்கிறேன், அதற்கு அவள் இதழோரத்தில் புன்சிரிப்புடன், ஒரு பெரிய அட்டைப்பெட்டியை திறக்கிறாள். அதில் கட்டுக்கட்டாய் பணம் இருக்கிறது. நான் விளையாட்டை கேட்கிறேன், இதெல்லாம் அரிசிக்கடையில் சம்பாதித்தது தானே என்கிறேன். அவள் கொஞ்சம் செல்லமான கோபத்துடன், உங்களிடம் பேசாமல் தவிர்ப்பதுதான் நல்லது என்கிறாள். ஏனென்றால், அவளுக்கு அரிசிக்கடை என்றொரு செல்லப்பெயர் அவள் பள்ளிப்பருவத்தில் உண்டு. அது எனக்கு மட்டுமே தெரியும்.
அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ஆர்வமாய் காத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குள் என் அறையின் கதவு தட்டப்படுகிறது. திறந்துப்பார்க்கிறேன். சார், Paper Bill என்கிறார் ஒரு நபர். மனதில் உனக்கு Bill வாங்க இந்த நேரம்தான் கிடைச்சதா, அருமையான கனவை கலைச்சுட்டியே என்று மனதில் நினைத்துக்கொண்டே அவரிடம் பணம் கொடுத்துவிட்டு, இங்கே உடனே வந்து என் பதிவை தொடங்கிவிட்டேன்.
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2014 01:44:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
ரக்ஷாபந்தன் நல்வாழ்த்துக்கள்
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2014 11:17:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
தேசபக்தி
Saturday, August 09, 2014
அதென்னமோ தெரியல.. சுதந்திர தினம், குடியரசு தினம் வரும்போதுதான் நம்மவர்களுக்கு தேசபக்தி பொத்துக்கொண்டு வரும். எங்கு பார்த்தாலும், இந்திய தாயே என்பார்கள், தேசியக் கொடியை கண்டமேனிக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த தேசபக்தி மற்ற நாட்களில் எங்கு போய் மறைந்துக்கொள்கிறது ?
சாலையில் நடப்பவன் முதல் சாட்டிலைட் விடுபவன் வரை, சாக்கடை அள்ளுபவன் முதல் நாட்டை ஆள்பவன் வரை , இருக்கும் விதிமுறைகளை முறையாக பின்பற்றி மனிதாபிமானத்துடன் சக குடிமகனுக்கு உதவிசெய்து, ஒரு நல்ல குடிமகனாக வாழ்வதுதான் உண்மையான தேசபக்தி. இந்த தேசபக்தியை வருடத்தின் ஒவ்வொரு நாளும் மனதில் கொண்டிருங்கள். இந்த இரண்டு நாட்களில் மட்டும் தேசத்தை புகழ்வதெல்லாம் தேசபக்தியாகிவிடாது.
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/09/2014 08:14:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
வேலையில்லா பட்டதாரி தனுஷ் வசனம்
எந்த வேலையும் செய்யாம
தகுதியான படிப்பும் இல்லாம உங்க அப்பா பணக்காரங்கற ஒரே காரணத்தால நோகாம நேரா முதலாளி
Seat-ல உக்காந்த உனக்கே இவ்ளோ திமிர் இருக்கே..
அப்பா, அம்மா கஷ்டப்பட்டு
School-க்கு Donation கட்டி L.K.G.-லந்து பத்தாவது வரைக்கும் Fail-லாகாம படிச்சி பத்தாவதுல Easy-யான Group-பெல்லாம் வுட்டுட்டு இந்த Group எடுத்தாதான் Engineer-ஆக முடியும்னு கஷ்டமான Group-ஆ எடுத்து, Physics-க்கு ஒரு Tuition, Chemistry-க்கு ஒரு Tuition, Maths-க்கு ஒரு
Tuition-ன்னு Road Road-ஆ அலைஞ்சு.. அதுக்கு Fees கட்ட பெத்தவங்களவேற Road Road-ஆ அலைய விட்டு Public Exam-ல pass ஆகறத்துக்கு night எல்லாம் Flask-ல Tea வச்சி, படிச்சி, காலைல Alarm வச்சி எந்திருச்சு, படிச்சு, அதுல வாங்குன Mark-லாம் பத்தாம, TNPC Examக்குன்னு வேற தனியா ரெண்டு மாசம் உக்காந்து, படிச்சி, அதுல வாங்குன Cut-off Mark Useless-ஆ போய் அம்மா நகைய அடமானம் வச்சு College-ல Seat வாங்கி First year-ல இருந்து Fourth Year வரைக்கும் வெச்ச Arrear-லாம் Fourth Year-ல மொத்தமா Clear பண்ணி, இந்த Society-குள்ள நொழைஞ்சா இந்த சொசைட்டி என்ன வேலையில்லனு செருப்பால அடிச்சி Road Road-ஆ வேலை தேடி அலஞ்சு, மூணு வருஷம் நாலு வருஷம் வீட்டுல தண்டமா உக்காந்து, அப்பா என்ன தண்டச்சோறு, தண்டச்சோறு-ன்னு திட்டி, சாப்புடுற ஒவ்வொரு வாய் சாப்பாடும் தொண்டைல சிக்கி, சிக்கி, வலிச்சு, வலிச்சு இறங்கி, எவனோ ஒரு புண்ணியவான் கடைசில ஒரு நல்ல மனுசன் எனக்கு வேல குடுத்து, அதையும் புடிங்க்க நினைக்கற உன்னமாரி ஒரு பொறம்போக்கெலாம் சமாளிச்சு, இன்னைக்கு உன் முன்னாடி நின்னு பேசிக்கிட்டிருக்கற வேலையில்லா பட்டதாரி எனக்கு எவ்ளோ திமிர்ரா இருக்கும் ? "
Tuition-ன்னு Road Road-ஆ அலைஞ்சு.. அதுக்கு Fees கட்ட பெத்தவங்களவேற Road Road-ஆ அலைய விட்டு Public Exam-ல pass ஆகறத்துக்கு night எல்லாம் Flask-ல Tea வச்சி, படிச்சி, காலைல Alarm வச்சி எந்திருச்சு, படிச்சு, அதுல வாங்குன Mark-லாம் பத்தாம, TNPC Examக்குன்னு வேற தனியா ரெண்டு மாசம் உக்காந்து, படிச்சி, அதுல வாங்குன Cut-off Mark Useless-ஆ போய் அம்மா நகைய அடமானம் வச்சு College-ல Seat வாங்கி First year-ல இருந்து Fourth Year வரைக்கும் வெச்ச Arrear-லாம் Fourth Year-ல மொத்தமா Clear பண்ணி, இந்த Society-குள்ள நொழைஞ்சா இந்த சொசைட்டி என்ன வேலையில்லனு செருப்பால அடிச்சி Road Road-ஆ வேலை தேடி அலஞ்சு, மூணு வருஷம் நாலு வருஷம் வீட்டுல தண்டமா உக்காந்து, அப்பா என்ன தண்டச்சோறு, தண்டச்சோறு-ன்னு திட்டி, சாப்புடுற ஒவ்வொரு வாய் சாப்பாடும் தொண்டைல சிக்கி, சிக்கி, வலிச்சு, வலிச்சு இறங்கி, எவனோ ஒரு புண்ணியவான் கடைசில ஒரு நல்ல மனுசன் எனக்கு வேல குடுத்து, அதையும் புடிங்க்க நினைக்கற உன்னமாரி ஒரு பொறம்போக்கெலாம் சமாளிச்சு, இன்னைக்கு உன் முன்னாடி நின்னு பேசிக்கிட்டிருக்கற வேலையில்லா பட்டதாரி எனக்கு எவ்ளோ திமிர்ரா இருக்கும் ? "
வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் வரும் இந்த வசனம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் இந்த வசனத்தை இணையதளத்தில் பதிவு செய்ய எந்த ஒரு வேலையில்லா பட்டதாரியும் முன்வரவில்லை. ஆகையால், எனக்கு பிடித்த இந்த வசனத்தை இந்த வேலையில்லா பட்டதாரி இங்கே பதிவு செய்கிறேன்.
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/09/2014 01:10:00 AM
1 Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
இந்து கோவில்கள்
Friday, August 08, 2014
இந்தோனேசியாவில் இருக்கும் “பரம்பானன்” கோவில் இது. இந்தோனேசியாவின் மிகப்பெரிய இந்து கோவில். சிவா, விஷ்ணு, பிரம்மா - மும்மூர்த்திகளுக்கும் இந்த ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது.
கம்போடியாவில் இருக்கும் அங்கார் வாட் கோவில் இது. உலகிலேயே மிகப்பெரிய கோவில் இது. தற்போது பயன்பாட்டில் இல்லாததால், உலகிலேயே மிகப்பெரிய கோவிலாக ஸ்ரீரங்கம் கோவில் திகழ்கிறது.
மேலே சொல்லப்பட்ட இந்த இரண்டு கோவில்களும் இந்தியாவை விடுத்து அயல்நாட்டில் நம் திராவிட கட்டிட கலையை பின்பற்றி அமையப்பெற்ற மிகப்பெரிய கோவில்கள்.
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/08/2014 11:51:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
புரிதல்
Posted by
தினேஷ்மாயா
@
8/08/2014 10:57:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
உடலில் உறுதி வேண்டும்
Posted by
தினேஷ்மாயா
@
8/08/2014 10:42:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
பத்து கேள்விகள்
என் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தார். அதில் பத்து கேள்விகள் இருந்தது. அந்த கேள்விகளுக்கு தவறாமல் பதில் அனுப்பவும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் நான் அவருக்கு பதில் ஏதும் அனுப்பவில்லை. அந்த கேள்விகளுக்கான பதிலை இங்கே பதிவுசெய்கிறேன்.
1. இந்த உலகத்துல உனக்கு ரொம்ப பிடிச்ச நபர் ?
பதில்: அம்மா
2. காதலிப்பது சரியா / தவறா ?
பதில்: சரி
3. ரொம்ப Miss பண்ற நபர் ?
பதில்: என்னுயிர் தோழி இந்து மற்றும் என்னுயிர் தோழன் சுரேஷ்.
4. வாழ்க்கை துணை எப்படி அமைய வேண்டும் ?
பதில்: என் வலைப்பக்கத்தை முழுதும் படித்துவிட்டு, என்னைப்பற்றி இன்னும் கேட்டறிந்து என்னை ஏற்றுக்கொள்பவளாக இருக்க வேண்டும். அவள் என் குழந்தையாகவும் இருக்க வேண்டும், நானும் அவளுக்கு ஒரு குழந்தையாய் இருக்க வேண்டும்.
5. கடவுள் உன்னிடம் ஒரு வரம் கேட்டால், என்ன கேட்பீர்கள் ?
பதில்: என் வாழ்க்கை முழுவதையும், உலகம் சுற்றுவது, புகைப்படம் எடுப்பது, திரைப்படங்கள் எடுப்பது, வலையில் கிறுக்குவது, என்றென்றும் காதலோடு வாழ்வது, உயர்ந்த மனிதனாய் அனைவர் மத்தியிலும் மதிக்கப்பட வேண்டும், உலகிற்கு என்னால் இயன்ற உதவியை மூச்சு இருக்கும்வரை செய்துக்கொண்டே இருக்க வேண்டும். எல்லாவற்றையும்விட மேலாக, நல்ல மனிதனாய் இருக்க வேண்டும்.
6. எப்பவும் பக்கத்துல இருக்கனும்னு நினைக்கிற ஒரு நபர் ?
பதில்: பிரிவு என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதை உணர்ந்தவன் நான். அதனால் இந்த கேள்வி எனக்கு பொருந்தாது.
7. வாழ்க்கையில் எது சிறப்பாக இருக்கவேண்டும் என நினைக்கிறீர்கள் ?
பதில்: என் 50 வயதுக்கு மேற்பட்ட வாழ்க்கை. அந்த வயதை நான் ஆன்மீகத்தில் கழிக்க விரும்புகிறேன்.
8. உனக்கு ரொம்ப பிடிச்ச உன் வயது ?
பதில்: நாம் 11-ஆவது மற்றும் 12-ஆவது படித்த வயது. என் வாழ்நாளின் பொற்காலம். காதல் மலர்ந்த காலம் !
9. உனக்கு ரொம்ப பிடிச்ச பரிசு ?
பதில்: மயிலிறகு
10. உனக்கு ஒரு பிரச்சனை என்றால், யாரிடம் சொல்ல விரும்புவீர்கள் ?
பதில்: கடவுளிடம்.
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/08/2014 10:25:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
دحينشميا
Wednesday, August 06, 2014
دحينشميا
தினேஷ்மாயா - அரேபிய மொழியில் !
* தினேஷ்மாயா *
தினேஷ்மாயா - அரேபிய மொழியில் !
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/06/2014 08:43:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
வைகை ஆறு
மதுரையில் பாயும் வைகை ஆற்றின் அழகு..
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/06/2014 07:07:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
பழிக்குப் பழி
சில சமயங்களில்… நான் ஆசைப்படுவதுண்டு…
என் அப்பாவைக் கொன்று
எங்கள் வீட்டைத் தரைமட்டமாக்கி
குறுகலானதொரு நிலத்துக்குள் என்னை விரட்டிய
அந்த மனிதனை ஒரு துவந்த யுத்தத்தில் நேருக்கு நேர் சந்திக்க
வேண்டுமென்று
சில நேரங்களில் நான் ஆசைப்படுவதுண்டு.
அந்தச் சண்டையில் அவன் என்னைக் கொன்றுவிடுவான் எனில்
நான் ஒருவழியாக நிரந்தர அமைதியில் ஆழ்ந்துவிடுவேன்…
இல்லையெனில், அவனைப் பழிவாங்கத் தயாராகிவிடுவேன்.
• ஆனால்,
துவந்த யுத்தத்தில் என்னுடைய எதிரியை எதிர்கொள்ளும்போது
அவனுக்காக வீட்டில் அவனுடைய அம்மா காத்துக்கொண்டிருப்பாள் என்பதோ,
குறித்த நேரத்தில் வராமல்
கால்மணி நேரம் தாமதித்தாலும்,
தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கும்
தந்தை ஒருவர் இருப்பார் என்பதோ
எனக்குப் புலப்பட்டால்
நான் நிச்சயம் அவனைக் கொல்ல மாட்டேன்,
என்னால் முடிந்தால்கூட.
• அதேபோல்… அவனுக்குத் தம்பிகளும் தங்கைகளும் இருப்பார்கள்
என்பதையோ
அவன்மேல் மிகுந்த அன்பைக் கொண்டிருக்கும் அவர்கள்
அவனுக்காக ஏங்குவார்கள் என்பதோ
எனக்குத் தெரிய வந்தாலும்
அவனை நான் கொல்ல மாட்டேன்.
அவன் வீடு திரும்பும்போது அவனை வரவேற்க மனைவியொருத்தி
இருந்தாலோ
அவனது பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத,
அவன் அளிக்கும் பரிசுகளால் குதூகலமடையும் குழந்தைகள் இருந்தாலோ
நான் அவனைக் கொல்ல மாட்டேன்.
அல்லது
அவனுக்கு நண்பர்களோ சகாக்களோ
தெரிந்த அண்டை வீட்டுக்காரர்களோ
சிறையில் மருத்துவமனையில் பரிச்சயமான கூட்டாளிகளோ
பள்ளித் தோழர்களோ இருந்தால்…
அவனைப் பற்றி விசாரிக்கக் கூடியவர்களோ,
அவனுக்கு வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பக் கூடியவர்களோ
இருப்பார்கள் என்றால்
நான் அவனைக் கொல்ல மாட்டேன்.
• ஆனால்,
அவனுக்கு யாருமே இல்லை என்றாலோ
-அதாவது மரத்திலிருந்து துண்டிக்கப்பட்ட கிளையைப் போல
அவன் இருப்பான் என்றாலோ-
அம்மா, அப்பா இல்லாமல்,
தம்பி, தங்கைகள் இல்லாமல்
மனைவி இல்லாமல், குழந்தைகள் இல்லாமல் அவன் இருந்தாலோ
உற்றார் உறவினரோ அண்டை அயலாரோ
நண்பர்களோ சகாக்களோ கூட்டாளிகளோ
இல்லாதவன் என்றாலோ
ஏற்கெனவே தனிமையில் வாடும் அவனுக்கு
மேலும் வேதனையை ஏற்படுத்த மாட்டேன்.
மரணமெனும் அவஸ்தையை,
இறந்துபோவதன் துக்கத்தைத் தர மாட்டேன்,
அதற்குப் பதிலாக,
தெருவில் அவனைக் கடந்துசெல்லும்போது
அவனைப் பொருட்படுத்தாமல் செல்வதையே விரும்புவேன்,
அவனைக் கண்டுகொள்ளாமல் விடுவதும்கூட
ஒரு வகையில் வஞ்சம் தீர்ப்பதுதான்
என்று எனக்குள் திருப்திப்பட்டுக்கொள்வேன் நான்.
-தாஹா முகம்மது அலி (1931-2011), பாலஸ்தீனக் கவிஞர்,
(நாசரேத், ஏப்ரல் 15, 2006)
தமிழில்: ஆசை
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
“தி இந்து” தமிழ் நாளிதழில் இன்று வெளியான ஒரு கவிதை. என்னை மிகவும் கவர்ந்தது. அதான் இங்கே நிச்சயம் பதிய வேண்டும் என்று விரும்பினேன்.
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/06/2014 07:05:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
Sunday, August 03, 2014
Posted by
தினேஷ்மாயா
@
8/03/2014 12:27:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Glofish
Saturday, August 02, 2014
Posted by
தினேஷ்மாயா
@
8/02/2014 11:53:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
முதலீடு
சிலர் பணத்தை முதலீடு செய்கின்றனர்..
சிலர் நம்பிக்கையை முதலீடு செய்கின்றனர்..
சிலர் அறிவை முதலீடு செய்கின்றனர்..
சிலர் காதலை முதலீடு செய்கின்றனர்..
சிலர் அன்பை முதலீடு செய்கின்றனர்..
சிலர் அழகை முதலீடு செய்கின்றனர்..
சிலர் திறமையை முதலீடு செய்கின்றனர்..
சிலர் பக்தியை முதலீடு செய்கின்றனர்..
சிலர் பலத்தை முதலீடு செய்கின்றனர்..
இவளோ தன் உடலை முதலீடு செய்கிறாள்..
ஆக மொத்தம், அனைவரின் கடைசி நோக்கமும் ஒன்றுதான் போல !!
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/02/2014 11:50:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
JUNGLE BOOK
Posted by
தினேஷ்மாயா
@
8/02/2014 05:28:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
அரசாங்கம் என்ன செய்கிறது ?
Posted by
தினேஷ்மாயா
@
8/02/2014 05:08:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
பணம்
Posted by
தினேஷ்மாயா
@
8/02/2014 05:06:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
ஓவியமல்ல
Posted by
தினேஷ்மாயா
@
8/02/2014 05:03:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Subscribe to:
Posts (Atom)
பதிவுகள்...
-
▼
2014
(473)
-
▼
August
(40)
- இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்
- ஒரு காதல் வந்துச்சோ !!
- செய்யாததை செய்
- ஓய்வு
- அப்துல் கலாம் வார்த்தைகள்
- புத்தர்
- எபோலா !!
- கூடு
- புத்தக கனவு
- மூன்று கனவு
- ரக்ஷாபந்தன் நல்வாழ்த்துக்கள்
- தேசபக்தி
- வேலையில்லா பட்டதாரி தனுஷ் வசனம்
- இந்து கோவில்கள்
- புரிதல்
- உடலில் உறுதி வேண்டும்
- பத்து கேள்விகள்
- دحينشميا
- வைகை ஆறு
- பழிக்குப் பழி
- நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
- Glofish
- முதலீடு
- JUNGLE BOOK
- அரசாங்கம் என்ன செய்கிறது ?
- பணம்
- ஓவியமல்ல
- குழந்தையின் முதல் அனுபவம்
- உலக முகங்கள்
- செவ்வாய் கிரகம்
- நாய் பாசம்
- மீண்டும் சேர்ந்த மகிழ்ச்சி
- வழிபாடு
- பூரிப்பு
- உதவி
- நன்றி
- மனிதத்தன்மை எங்கே ?
- நம்பிக்கை
- அன்பின் வெளிப்பாடு
- தீர்வு
-
▼
August
(40)
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !