இதுநாள் வரை, உயர் நீதிமன்றம் சொல்லியும், உச்ச நீதிமன்றம் சொல்லியும், காவிரி நடுவர் தீர்ப்பாயம் சொல்லியும் கேட்காத கர்நாடக மாநில அரசு, இயற்கை அன்னை சொல்பேச்சுக்கு பணிந்துவிட்டது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்று போராட்டம் நடத்தினர். மேட்டுர் அணையின் நீர்மட்டம் முற்றிலும் வரண்டு இருந்தது. மனம் நொந்துப்போன நிலையில், தென்மேற்கு பருவ மழை பெய்து மனதையும் நிலத்தையும் குளிர்வித்தது. கர்நாடகத்தில் வெள்ளப்பெருக்கு. பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன. மேட்டுர் அணை தன் முழு கொள்ளளவையும் எட்டிவிட்டது. நீர்வரத்தும் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. நம் தமிழக விவசாயிகளும் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.
ஆனால், சில மாதங்களுக்கு முன்னர், தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்று போராட்டத்தில் குதித்த கர்நாடக விவசாயிகள், இப்போது தங்கள் பயிர்கள் வெள்ளத்தில் பாதிப்படைந்ததால் தங்கள் மாநில அரசிடம் நிவாரணம் கேட்டு நிற்கின்றனர்.
எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும், வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே - என்பதுதான் எங்கள் தமிழர்களின் மரபு.
என் பயிர்களுக்கு மட்டும் தண்ணீர் வேண்டும், அண்டை மாநிலத்தவன் பயிர் கருகிப்போனால் எனக்கென்ன என்று நினைப்பவன் உண்மையான விவசாயியே இல்லை. உண்மையாக மண்ணை நேசிப்பவனே ஒரு சிறந்த விவசாயி. அது யாருடைய நிலமாக இருந்தாலும் சரி..
எல்லாவற்றிலும் சுயநலம் பார்த்துக்கொண்டிருந்தால், இயற்கையின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போய்விடும்..
எந்த சட்டத்தையும் மதிக்காமல் இருப்பவர்கள், நிச்சயம் இயற்கையின் சட்டத்தை மதித்துத்தான் ஆகவேண்டும்...
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment