தமிழகத்தில் 1876-78 -ல் ஏற்பட்ட பஞ்சத்தில் பாதிப்படைந்த நம் தமிழக மக்களின் நிலைதான் நீங்கள் மேலே பார்ப்பது. இன்று காலை எழுந்ததும் செய்தித்தாளை எடுத்து படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலே இந்த காட்சி என் கண்ணில் தென்பட்டது. இன்று முழுவதும் என் மனம் நிம்மதியாகவே இல்லை. உறங்க செல்லும் முன் நிச்சயம் என் மனதில் ஏற்பட்ட வலியை இங்கே பதிந்துவிட்டுத்தான் உறங்க செல்லவேண்டும் என்றிருந்தேன்.
நம் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்று பார்க்கும்போதும், அவர்களின் உடலை பார்க்கும்போதும் கண்ணில் நீரை விட இரத்தம்தான் வருகிறது. உடலுக்கு உணவு கிடைக்காமல், தன் உடலே தன் உடலை உண்ணும் நிலையை பார்க்கையில் என் மனம் செத்துவிட்டது. இன்றும் எத்தனைப்பேர் இப்படி கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பார்கள், அப்படியிருக்க நாம் எவ்வளவு உணவை வீணாக்குகிறோம், உணவை பல நேரங்களில் சுவை இல்லையென்று அலட்சியப்படுத்துகிறோம்.
இதுப்போன்று உணவுக்காக ஏங்கும் மக்கள் எத்தனையோ பேர் இருக்கையில், ஒரு சக மனிதனை காப்பாற்ற நீ என்ன செய்தாய் ?
நீ மனிதன் தானா ? என்று என்னைப்பார்த்து நானே கேள்வி கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கான பதிலை ஆழமாக சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். என் சக மனிதர்கள் பலர் சொல்லமுடியா துயரை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் துயரை துடைக்க நிச்சயம் என் இறைவனின் அருளோடு நானும் உறுதுணையாய் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
* தினேஷ்மாயா *
1 Comments:
உன் நல்ல மனதிற்க்கு கட்டாயம் கடவுள் நல் வழி காட்டுவார்.....
Post a Comment