போர் கைதி..

Friday, August 30, 2013


    உணவிற்காக எவனும் ஒரு ரூபாய்க்கூட கொடுக்க தயார் இல்லை. ஆனால், போர் என்றால் கோடி கோடியாய் கொட்டிக்கொடுக்க தயாராக இருக்கிறான். இவன்தான் உண்மையான போர் கைதி. உண்மையான உலகை நேசிக்கத்தெரியாமல் இவனாய் போரில் வென்று யாருமில்லாத ஒரு உலகை ஆண்டு என்ன செய்யப்போகிறான் ??

* தினேஷ்மாயா *

நானும் அவளும்


எனக்கு பிடித்த பச்சை நிறமும்

அவளுக்கு பிடித்த மஞ்சள் நிறமும் !!

* தினேஷ்மாயா *

காரணமில்லா கண்ணீர்


காரணம் ஏதுமின்றி

மனதுக்கு பிடித்த ஒரு பாடலை

கேட்கும்போது வரும் கண்ணீர்

இனிக்கிறது எனக்கு !!

( உன் நினைவுகளுக்கு நன்றி )

* தினேஷ்மாயா *

உயர்வு


எந்த நிலையில் இருந்தாலும்,

தலைகணம் இன்றி கணிவுடன்

தன்னை தாழ்த்திக்கொள்பவன் 

எப்போதும்

காலத்தால் உயர்த்தப்படுவான்..

* தினேஷ்மாயா *

ஒரு சிறிய உலகம்


எனக்கு இதுப்போன்ற ஒரு சிறிய உலகம் போதும். தன்னந்தனியாய் வாழ்வது எனக்கொன்றும் புதிதல்ல. பழகிப்போன ஒரு விஷயம். என் நினைவுகளுடன் இதுப்போன்ற ஒரு சின்னஞ்சிறிய அழகிய உலகில் வாழ்ந்துவிடலாம் அதிலேயே இறந்தும்விடலாம் என்றும் தோன்றுகிறது. சுயநலமான சமூகத்தில் இருந்து என்னை தனிமைப்படுத்திக்கொள்ளவே நான் அதிகம் விரும்புகிறேன். என்ன செய்ய !!??

இதுதான் உலகம்.. இதுதான் வாழ்க்கை !!

* தினேஷ்மாயா *

ஆனந்த யாழை மீட்டுகிறாய்




மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்
முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று..

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புள்ளில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேக்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பாக்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேக்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

படம்: தங்க மீன்கள்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: ஶ்ரீராம் பார்த்தசாரதி


பல நாட்களுக்குப்பிறகு கண்களையும் மனதையும் குளமாக்கிய பாடல். இன்னும் படம் பார்க்கவில்லை. அதற்குமுன்னரே இப்பாடல் என்னை அதிகம் ஈர்த்துவிட்டது. கண்கள் மூடி வரிகளையும் இசையையும் உணர்ந்து ரசித்துப்பாருங்கள். கண்கள் குளமாவதை உணர்வீர்கள்..

* தினேஷ்மாயா *

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்..

Thursday, August 29, 2013


இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா..
அவங்க கண்ணு நம்ம கல்லறண்ணு தெரிஞ்சு போச்சுடா..

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா..
அவங்க கண்ணு நம்ம கல்லறண்ணு தெரிஞ்சு போச்சுடா..

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா..
அவங்க கண்ணு நம்ம கலர்ருண்ணு தெரிஞ்சு போச்சுடா..
பின்னால சுத்த வச்சு பித்துக்குளியாக வச்சு
இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்கடா

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா..
அவங்க கண்ணு நம்ம கல்லறண்ணு தெரிஞ்சு போச்சுடா..

கார்டு வாங்கி கொடுக்கிறோம், கவிதை எழுதி கொடுக்கிறோம்
செல்லு வாங்கி கொடுக்கிறோம், ரீசார்ஜும் பண்ணி கொடுக்கிறோம்
அன்பை கூட வாரி வாரி கொடுக்கிறோம்
அவங்க வீட்டுக்கும்தான் ரேஷன் வாங்கி கொடுக்கிறோம்
நாம கொடுத்ததெல்லாம் வாங்கிகிட்ட அவங்கதான்
நமக்கு வேதனையை கொடுக்கிறாங்க என்னடா
இதுலை நீதி நேர்மை இருக்குதான்னு சொல்லுடா சொல்லுடா
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா..
அவங்க கண்ணு நம்ம கல்லறண்ணு  தெரிஞ்சு போச்சுடா..

வீடு வாசல் மறக்கிறோம், வெட்கம் ரோசம் மறக்கிறோம்
நல்லா தூங்க மறக்கிறோம், நண்பனையும் மறக்கிறோம்
நாளுகிழமை கூட நாம மறக்கிறோம்
அவங்க நெனைப்பில தான் எல்லாத்தையும் மறக்கிறோம்
நாம் மறப்பெதெல்லாம் தெரிஞ்சுகிட்ட அவங்கதான்
நம்மளை போறபோக்கில் மறக்கிறாங்க என்னடா
இந்த சோகம் மறக்க குடிக்கிறேன்னு சொல்லுடா..சொல்லுடா
பொண்ணுங்களே இந்த பொண்ணுங்களே 
டேய் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா..
அவங்க கண்ணு நம்ம கல்லறண்ணு தெரிஞ்சு போச்சுடா..

பின்னாலே சுத்த வச்சு பித்துக்குளியாக வைச்சு
இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்கடா
இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்கடா


திரைப்படம் : வருத்தப்படாத வாலிபர் சங்கம்
பாடியவர்: ஜெயமூர்த்தி
இசை: டி.இமான்

* தினேஷ்மாயா *

சந்தோஷமான மரணம்

Sunday, August 25, 2013


சந்தோஷமாக வாழ்வதுகூட 

சுலபம்..

ஆனால்,

சந்தோஷமாக இறப்பது

சுலபமல்ல !!


* தினேஷ்மாயா *

நீ மனிதன் தானா ?

Friday, August 23, 2013

The Madras famine of 1876-78, which covered most of the southern part of the country, occurred at a time when expenditure on wars was soaring

The Madras famine of 1876-78, which covered most of the southern part of the country, occurred at a time when expenditure on wars was soaring


          தமிழகத்தில் 1876-78 -ல் ஏற்பட்ட பஞ்சத்தில் பாதிப்படைந்த நம் தமிழக மக்களின் நிலைதான் நீங்கள் மேலே பார்ப்பது. இன்று காலை எழுந்ததும் செய்தித்தாளை எடுத்து படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலே இந்த காட்சி என் கண்ணில் தென்பட்டது. இன்று முழுவதும் என் மனம் நிம்மதியாகவே இல்லை. உறங்க செல்லும் முன் நிச்சயம் என் மனதில் ஏற்பட்ட வலியை இங்கே பதிந்துவிட்டுத்தான் உறங்க செல்லவேண்டும் என்றிருந்தேன். 

           நம் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்று பார்க்கும்போதும், அவர்களின் உடலை பார்க்கும்போதும் கண்ணில் நீரை விட இரத்தம்தான் வருகிறது. உடலுக்கு உணவு கிடைக்காமல், தன் உடலே தன் உடலை உண்ணும் நிலையை பார்க்கையில் என் மனம் செத்துவிட்டது. இன்றும் எத்தனைப்பேர் இப்படி கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பார்கள், அப்படியிருக்க நாம் எவ்வளவு உணவை வீணாக்குகிறோம், உணவை பல நேரங்களில் சுவை இல்லையென்று அலட்சியப்படுத்துகிறோம்.

       இதுப்போன்று உணவுக்காக ஏங்கும் மக்கள் எத்தனையோ பேர் இருக்கையில், ஒரு சக மனிதனை காப்பாற்ற நீ என்ன செய்தாய் ?

நீ மனிதன் தானா ? என்று என்னைப்பார்த்து நானே கேள்வி கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கான பதிலை ஆழமாக சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். என் சக மனிதர்கள் பலர் சொல்லமுடியா துயரை  அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் துயரை துடைக்க நிச்சயம் என் இறைவனின் அருளோடு நானும் உறுதுணையாய் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

* தினேஷ்மாயா *

மனமிருந்தால் மார்க்கமுண்டு

Monday, August 19, 2013



மனமிருந்தால் மார்க்கமுண்டு.. மனதில் உறுதியுடன் இருந்தால், எந்த நிலையில் இருந்தாலும், எவ்வளவு துவண்டு போயிருந்தாலும் நிச்சயம் மீண்டும் தழைத்து எழ முடியும்..

* தினேஷ்மாயா *

நல்ல நேரம்


நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

யார் கண் பட்டதோ?



நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *


உரிமையோடு சொல்


* தினேஷ்மாயா *

தீண்டல்

Friday, August 16, 2013



தீண்டலில் அருமை நீ என்னை விட்டு பிரிந்து சென்றப்பின் தான் அதிகம் உணர்ந்தேனடி...

* தினேஷ்மாயா *

ஊடல்


* தினேஷ்மாயா *

தாகம்



மீனுக்கும் தாகம் எடுக்கும் போல !!

* தினேஷ்மாயா *

மெல்லிடை


உன் இடைக்கு ஏற்ப

இந்த குடம் செய்யப்பட்டதா ??

இல்லை,

குடத்திற்கு ஏற்ப

உன் இடை வளைந்து கொடுக்கிறதா ??

* தினேஷ்மாயா *

கலைஞன்


நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

என் தங்கை


நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

முதல் மரியாதை

Thursday, August 15, 2013



இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு என் அரசாங்க உடையில் அலுவலகத்திற்கு சென்று தேசிய கொடியை ஏற்றி அனைவரும் சுதந்திர தினத்தை கொண்டாடினோம். 

வண்டியில் நான் என் வீட்டுக்கு வந்துக்கொண்டிருந்தேன். வீட்டின் அருகே வருகையில், சில மாணவர்கள் பள்ளியில் விழா முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். வண்டியில் உடையுடன் என்னைப்பார்த்த அவர்கள், Good Morning Sir என்று சொல்லி எனக்கு Salute அடித்தார்கள். நானும் அவர்களைப் பார்த்து புன்னகைத்துவிட்டு வணக்கம் தெரிவித்துவிட்டு வண்டியை நகர்தினேன். எனக்கு கிடைத்த முதல் மரியாதையை இங்கே தவறாமல் பதிய விரும்பினேன். காக்கி உடையில் இருப்பது எனக்கும் ஒரு சுயமரியாதையையும் கௌரவத்தையும் கொடுக்கிறது. என் நாட்டு மக்களுக்கு சேவை புரிய எனக்கு வாய்ப்பளித்த இந்த தேசத்திற்கு என் மனமார்ந்த நன்றி.

வந்தே மாதரம் !!

* தினேஷ்மாயா *

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


* தினேஷ்மாயா *

ஓர் வேலி

Wednesday, August 14, 2013



கடக்க முடியாத ஓர் வே(வ)லியை

என்னவள் இந்த காலத்தின் உதவியோடு

என் மனதில் போட்டுவிட்டு

சென்றுவிட்டாள் !!

* தினேஷ்மாயா *

வலி



நன்றி : இணையம்

* தினேஷ்மாயா *

உன் முகமே !!


காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்

தேடி பிடிப்பது உந்தன் முகமே..

தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி

காட்சிக்குள் நிற்பது உன் முகமே..

- வேட்டையாடி விளையாடு - திரைப்பட பாடல் வரிகள்

* தினேஷ்மாயா *


தமிழக மீனவர்களின் அவலநிலை


இதை பார்க்கும்போது உங்களுக்கே புரியும் என்று நினைக்கிறேன், நம் தமிழக மீனவர்களின் அவலநிலை...

நன்றி: விகடன்

* தினேஷ்மாயா *

கனவு நனவாகும்


* தினேஷ்மாயா *

உன் மடியில்

Monday, August 12, 2013


என் கடைசி மூச்சை 

உன் மடியில் சுவாசிக்க

எனக்கு வரம் வேண்டும்..

தருவாயா ?

அம்மா !!

* தினேஷ்மாயா *

மழைக்காதலன்


உலக நண்மைக்காக,

மழை வேண்டுவோர் பலர் இருக்க..

உன்னுடன் சேர்ந்து நடக்கவே

மழையை அதிகம் வேண்டுகிறேன் நான்..

* தினேஷ்மாயா *

உழைப்புக்கு கிடைத்த வெற்றி




என் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.. மத்திய ஆயத்தீர்வை ஆய்வாளர்...

இறைவனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு,

என் அடுத்த வெற்றியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறேன்..

* தினேஷ்மாயா *

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

Saturday, August 10, 2013


உண்ணாமலும் பருகாமலும் நோன்பிருந்து உலக நண்மைக்காக பிரார்த்திக்கும் எம் இசுலாமிய நண்பர்களுக்கு என் இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

* தினேஷ்மாயா *

சைக்கிள் ஓட்டிய நினைவுகள்



இன்று குழந்தைகள் மாலையில் என் வீட்டருகே சைக்கிளை ஓட்டும்போது, நான் சிறுவயதில் சைக்கிள் ஓட்டிய அனுபவம் என்னை வட்டமிட்டு செல்கிறது..

* தினேஷ்மாயா *

நான் வாங்கிய முதல் கவிதை புத்தகம்



நான் வாங்கிய முதல் கவிடை புத்தகம் இது. இன்று எத்தனையோ ஆயிரம் கவிதை புத்தகங்கள் வாங்கிவிட்டாலும், முதலில் வாங்கிய நட்புக்காலம் புத்தகத்தில் படித்த அனைத்து கவிதைகளும் நினைவில் இருக்கிறது இன்றளவும்.. நான் பத்தாவது படிக்கும்போது வாங்கினேன். அப்போது ஆரம்பித்தது என் கவிதைக்கான தேடல்.. நிற்காமல் பயணித்துக்கொண்டிருக்கிறேன்..

* தினேஷ்மாயா *

எதார்த்தமான வசனம்

Friday, August 09, 2013


* தினேஷ்மாயா *

மாய உலகம்



அனைவரும் சொல்லும் இந்த நிஜ உலகம், என்னுடன் நீ இல்லாத காரணத்தால் மாய உலகம் போலவே தோன்றுகிறது..

நீ இருக்கும் என் நினைவுகள் நிறைந்த அந்த உலகம் மட்டுமே உண்மையான உலகம் போல தோன்றுகிறதடி..

* தினேஷ்மாயா *

அங்கேயே இரு


என்னவளை என் மனதினுள் பூட்டி வைத்துவிட்டேன்..

நீ அங்கேயே இரு..

எனக்கு மனதில் வலி எடுக்கும்போதெல்லாம் என மனதில் இருக்கும் உன்னுடம் வந்து பேசிவிட்டு இந்த உலகிற்கு வருகிறேன்..

* தினேஷ்மாயா *

உன் தவறு


நீ ஏழையாய் பிறந்தால்,

அது உன் தவறு இல்லை..

உன் குழந்தை ஏழையாய் பிறந்தால்

நிச்சயம் அது உன் தவறு..

* தினேஷ்மாயா *

நிதர்சனமான உண்மை


* தினேஷ்மாயா *

வாழ்க ஊடக தமிழ் !!


தமிழை வாழவைக்காவிட்டாலும் பரவாயில்லை.. 

இப்படி கொச்சையாய் பேசி கற்பழிக்காதீர்கள் ஊடகங்களே !!

* தினேஷ்மாயா *

அழகு அழகு...


* தினேஷ்மாயா *

மரத்திற்கும் மனம் உண்டு..


மரத்திற்கும் உயிர் உண்டு.. மனம் உண்டு ...

* தினேஷ்மாயா *

சரிசமமான நீதி


எல்லோரும் சரிசமம் என்று சொல்வதற்கு உண்மையான அர்த்தத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். மேலே இருப்பவன் இன்னும் மேலே செல்கிறான், கீழே இருப்பவன் கீழேதான் இருக்கிறான்.

அனைவருக்கும் சரிசமமான நீதி கிடைக்கும்போதுதான் சமூகத்தில் இருக்கும் பெரும்பாலான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்..

* தினேஷ்மாயா *

இன்று நீ !!

Tuesday, August 06, 2013



இன்று நீ உன் பெற்றோரை எப்படி நடத்துகிறாயோ, அப்படித்தான் நாளை உன் பிள்ளையும் உன்னை நடத்தும்...

* தினேஷ்மாயா *

யாருமில்லை



காதலிக்க நேரமில்லை !!

காதலிக்கவும் யாருமில்லை !!

* தினேஷ்மாயா *

பொறுமை காப்போம்..

Monday, August 05, 2013


உனக்கு தேவையான் அனைத்தும்

உன்னை வந்து சேரும்..

அதுவரை 

பொறுமையாய் இருப்போம்..

* தினேஷ்மாயா *

நேரம் ஒதுக்குவோம்


வாழ்க்கையில், 

சிறிய விஷயங்களை

ரசிக்கவும்

கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம்..

* தினேஷ்மாயா *