இரண்டு
மிகப்பெரிய மலைகளின் நடுவே மிக நீண்ட
பாலம். அந்த பாலம் கடல்மட்டத்தில்
இருந்து பல ஆயிரம் அடி
உயரத்தில் இருக்கிறது. அதன்மீது நாம் நடந்து செல்கிறோம்.
கையில் நமக்கு மிகவும் பிடித்த
ஒரு பொருளை எடுத்து செல்கிறோம்.
பலத்த காற்று வீசுகிறது. நம்
மனதிற்கு மிகவும் பிடித்த அந்த
பொருள், நாம் உயிராய் கருதிய
அந்த பொருள் கை தவறி
கீழே விழுந்து விடுகிறது. நாம் என்ன செய்வோம்.
ஒரு நிமிடம் நின்று தவறவிட்ட
தருணத்தை எண்ணி வருந்துவோம். அந்த
பொருளை இழந்த வலியுடன் இருப்போம்.
ஆனால், அடுத்த நொடி நம்
பயணத்தை தொடர வேண்டும் என்று
அடுத்த அடியை எடுத்து வைப்போம்.
இழந்த பொருளை நினைத்து அங்கேயே
நின்றுக்கொண்டிருந்தால், கீழே விழுந்தது திரும்ப
வந்துவிடாது, நாமே அதனுடன் கீழே
விழுந்தாலும் அதை திரும்ப பெற்று
அந்த பாலத்திற்கு திரும்பிவர முடியாது. தவறவிட்டது யார் தவறு, நம்
தவறா இல்லை காற்றின் தவறா
என்று ஆராயாமல் அடுத்த செயலை நோக்கி
செல்வதுதான் வாழ்க்கை.
இதைத்தான்
நான் செய்துக்கொண்டிருக்கிறேன்.....
- அன்புடன்
****தினேஷ்மாயா****
2 Comments:
ஆராயாமல் அடுத்த செயலை நோக்கி செல்வதுதான் வாழ்க்கை.
மனதில் பதிந்த நுட்பம்.
அன்பு நண்பரே தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்
http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_7.html
நன்றி
Post a Comment