2008 New Year

Thursday, November 01, 2012




  2008-ஆம் ஆண்டு புத்தாண்டின் முதல் தினத்தன்று அவளும் நானும் கோயிலுக்கு சென்றோம். அவள் அதிகம் மல்லிப்பூ தான் விரும்புவாள் என்று எனக்கு தெரியும். அன்று விசேஷ நாள் என்பதால் பூக்கள் சீக்கிரமே விற்பனையாகிவிட்டது. அவள் என்னிடம் கேட்டிருந்தாள், இந்த புத்தாண்டிற்கு நீ எனக்கு பூ வாங்கி தா அது போதும் என்று. அவளின் ஆசைக்காக, ஒருவழியாக மல்லிப்பூவை தேடி கண்டுபிடித்து வாங்கிவிட்டேன். அவளுக்கு ரோஜாப்பூவும் பிடிக்கும். அதையும் வாங்கிக்கொண்டேன். கோயிலுக்கு சென்று இருவரும் அம்மனை வழிப்பட்டோம். இந்த கோயிலுக்குத்தான் நானும் அவளும் பன்னிரண்டாவது படிக்கும்போது வாராவாரம் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வணங்கிவிட்டு செல்வோம். இந்த கோயிலுக்கு நான் தனியாய் வந்ததைவிட அவளுடன் வந்ததுதான் அதிகம். அம்மனை வணங்கிவிட்டு கோயிலை சுற்றி வலம்வந்துவிட்டு, நவக்கிரகத்தையும் வலம்வந்து வணங்கிவிட்டு அங்கே இருந்த ஓர் இடத்தில் அமர்ந்தோம். அவள் ஆசைப்படி அவளுக்கு நான் பூ சூட்டிவிட்டேன். மனம் நெகிழ்ந்தாள் என்னவள். பின் என்னைப்பார்த்து புன்னகைப்பூ பூத்தாள். Happy New Year என்று வாழ்த்தினாள். வாழ்த்திவிட்டு என் நெற்றியில் அவள் திருநீறை வைத்தாள். ALL THE BEST DEAR என்று வாழ்த்தினாள். சிறிது நேரம் மனம்விட்டு பேசினோம். அம்மனுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பிவந்தோம். என்னால் மறக்க முடியாத தினம் அது. நினைவில் இன்னமும் கட்டில்போட்டு உட்கார்ந்திருக்கிறது அந்த தினம். 

பி.கு.: 10% உண்மை 90% கற்பனை. என் மனதில் இருக்கும் சின்னஞ்சிறு ஆசைகளை கற்பனையால் செதுக்கி இப்படி கதையாக மாற்றிவிடுகிறேன். இப்படி நடக்காவிட்டாலும், இதை படிக்கையில் இப்படி நடந்த சந்தோஷம் ஏற்படுகிறதே ! அது போதாதா என்ன ?!

****தினேஷ்மாயா****

0 Comments: