படிச்ச மக்கா...

Saturday, November 10, 2012



       சில வாரங்களுக்கு முன்னர் ஒரு செய்தி படித்தேன். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மூன்றுபேரை கண்காணிப்பு கருவியின் உதவியுடன் காவல்துறையினர் பிடித்தனர் என்று. எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், பிடிப்பட்ட மூன்றுபேருமே படித்த பட்டதாரிகள். அதில் ஒருவர் MCA பட்டதாரி, இன்னொருவர் BSc, மற்றொருவர் கல்லூரி முதலாமாண்டு மாணவர். எனக்கு அப்போது மனசு சுருக்கென்று குத்தியது. படித்த இளைஞர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று. வெறும் வயிற்றுப்பிழைப்புக்காக ஒன்றும் இவர்கள் இதை செய்திருக்க மாட்டார்கள். திருட்டு என்பது வேறு கொள்ளை என்பது முற்றிலும் வேறு. படித்தவர்கள்தான் இன்றைய காலகட்டத்தில் அதிக குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என்கிறது காவல்துறை. இது யாருடைய தவறு என்றுதான் தெரியவில்லை. ஒரு நல்ல மாணவனை உருவாக்க தவறியது ஆசிரியரின் குற்றமா இல்லை ஒரு நல்ல மனிதனை உருவாக்காதது இந்த சமூகத்தின் குற்றமா. குற்றங்களை நாம் செய்துவிட்டு தவறு செய்த அவர்களை குறைகூறக்கூடாது. ஒருவன் திருடுகின்றான் என்றால், அவன் அதை முதலில் செய்தபோதே அவனை திருத்தாமல் விட்டுவிட்ட சமூகம் தானே அவன் செய்யும் அடுத்தடுத்த திருட்டுகளுக்கும் காரணம். படித்தவர்கள்தான் அதிக குற்றங்களை செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள், சரி. படித்தவர்கள் என்றால் எதை படித்தவர்கள் ? வெறும் புத்தகங்களை மட்டுமல்லவா இன்றைய மாணவர்கள் படிக்கிறார்கள். நல்ல பண்பை சொல்லித்தரவும் ஆளில்லை, இப்படி இருக்க கூடாது என்று சுட்டிக்காட்டவும் ஆளில்லை. மக்களுக்கும் மாணவர்களுக்கும் சின்ன குழந்தைகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய பல சமூக சாதனங்கள் எல்லாம் ஊனமாகிவிட்டதை எண்ணி வருந்தத்தான் முடிகிறதே தவிர சமூகத்தின் அடிவரை இறங்கி தூர்வார கைக்கோர்க்க யாரும் முன்வருவதில்லை.


- ரௌத்திரத்துடன்
****தினேஷ்மாயா****

0 Comments: