ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய் !!!

Wednesday, November 24, 2010



உங்கள் எல்லோருக்கும் தெரியும் நம் தமிழக அரசு, ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு நியாய விலைக்கடை மூலமாக விநியோகம் செய்து வருகிறது என்று..

நீங்கள் எப்பவாச்சும் அந்த அரிசியை பார்த்திருக்கீங்களா. ஒரு முறை நான் ஒரு நியாய விலைக்கடைப் பக்கம் செல்ல நேர்ந்தது. அப்போது அங்கே அரசு அளிக்கும் ஒரு ரூபாய் அரிசியை விநியோகம் செய்துவந்தனர் ஊழியர்கள்.

அந்த அரிசியை வக்கீல் வண்டு முருகன் வீட்டில் இருந்து எடுத்து வந்து இருப்பார்கள் போல.. அரிசியில் பார்க்கும் இடமெல்லாம் வண்டுகள் அதிகம் இருந்தது. இந்த அரிசி எல்லாம் எங்கே இருந்து சார் கொண்டு வரீங்கனு கேட்டேன். அதெல்லாம் சொல்ல முடியாது, எங்களுக்கு குடோன்ல இருந்து வருது அவ்ளோதான் என்று ரொம்ப பொருப்பாக பதில் சொன்னார்.

யோவ் என்னாயா நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க.. மனுஷனுங்கதானா நீங்கெல்லாம்.. சாப்பிடுற சாப்பாட்டில வண்டு இருந்தா நீங்க சாப்பிடுவீங்களாயா. நீங்கனு நான் இங்க கேட்பது அரசியல் வியாதிகளையும், பொறுப்பற்ற அரசு அதிகாரிகளையும்.. ஏதோ தேர்தல் நேரத்தில் ஓட்டுக்களை அள்ள நினைத்து வாய்க்கு வந்த அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் தந்துவிடுவது, தேவைப்பட்டால் அதை நிறைவேற்றுவீங்க, இல்லைனா அதை அப்படியே கிடப்பில் போட்டுடுவீங்க.

அவனுங்களை சொல்லி தப்பில்லை, அதை நம்பி ஓட்டுப்போடுறீங்களே உங்களைத்தான் திட்டனும், ரூம்போட்டு உதைக்கனும். எப்பயா நீங்களெல்லாம் திருந்துவீங்க. புத்தர் அமர்ந்த போதி மரத்தின் அடியில் போய்ட்டு உட்கார்ந்துட்டு வாங்க. அப்பவாச்சும் உங்களுக்கு ஞானம் பிறக்குதானு பார்ப்போம்..

நான் மேலே போட்டிருக்கும் புகைப்படம், அந்த நியாய விலைக்கடையில் வண்டுகள் நிறைந்த அரிசியை எடைப்போட்டு மக்களுக்கு விநியோகம் செய்கின்றனர்...

வாய் வலிக்க பேசும் அரசியல்வியாதிகளே, தயவு செய்து கொஞ்சம் மக்களையும் கவனியுங்க. வெறும் கருப்புப் பணத்தை பதுக்குவதிலேயே கவனமாய் இருக்காதீங்க...


என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: