நண்பனே !
பத்து மாதம்
என்தாய் உன்னை
சுமந்து பெறவில்லை
என்றாலும், நீயும் என்
உடன் பிறப்பே !
ஒன்பது கிரகங்களைப்
போல நமது
வாழ்க்கைப் பாதை
வெவ்வேறு திசையில்
இருந்தாலும் -
சூரியனைப்போல
நம் நட்பை சுற்றியே
நம் வாழ்க்கை இருக்கும் !
எட்டாம் வண்ணமாய்
வானவில்லின் புதிய
வண்ணம் போல
நம் நட்பு
ஜொலிக்கும் !
ஏழு பிறவி
எடுத்துவந்து, நான்
உன்னை காண
இறைவனிடம்
வரம் வேண்டுகிறேன் !
ஆறு வகை சுவைகள்
ஒன்றாக சேர்ந்தாலும்,
அது நம் நட்பை
போல இனிக்காது !
ஐந்து பொறிகளை
வெல்லும் சக்தி
இறைவனுக்கு அடுத்து
நமது நட்பிற்கு
மட்டுமே உண்டு !
நான்கு திசைகளையும்
கடந்து சென்றாலும்
புதிதாய் ஒரு
திசையில் என் நட்பு
உன்னை வந்துச்
சரணடையும் !
மூன்றாம் பிறை போன்று
தேய்வது என்பது
நமது நட்பில்
என்றுமே கிடையாது !
(+2) இரண்டில் நான் ( +2 Standard )
புத்தகத்தில் அதிகம்
கற்றதைவிட, உன்
நட்பில்தான் அதிகம்
கற்றுக் கொண்டேன் !
ஒன்று மட்டும் உன்னிடம்
சொல்ல விரும்புகிறேன்..
உன்னுடைய இந்த பிரிவு
எனக்கு பிரிவல்ல..
பிரிவு என்பது
நம் நட்பில்
என்றுமே இல்லை...
அப்படி இருந்தால்
அது நட்பே இல்லை..
நண்பா !
பிரிவு நிச்சயமானதுதான்..
ஆனால்,
உன்னுடைய நினைவுகள்
இருக்கும்வரை அந்த
பிரிவு கூட
நிரந்தரமானதல்ல.. ! ! !
நான் +2 படித்து முடிக்கும்போது, என் பள்ளிவாழ்க்கையின் கடைசி நாளில் என் வகுப்பு நண்பர்களுக்கு நான் எழுதி சமர்ப்பித்த கவிதை இது..
இது 4 வருடங்கள் முன்னர் எழுதியது, என்றாலும் இன்னும் என் நினைவில் இருக்கிறது இந்த கவிதையும் என் பள்ளி நாட்களின் பசுமையான நினைவுகளும்.....
அன்புடன் -
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment