தன்மானத்தின் சுவை அறிந்தவன்
ஒருபோதும் பட்டினியால் வாடுவதில்லை..
* தினேஷ்மாயா *
தன்மானத்தின் சுவை அறிந்தவன்
ஒருபோதும் பட்டினியால் வாடுவதில்லை..
* தினேஷ்மாயா *
இப்போதெல்லாம் பெருந்தன்மை என்கிற உயர்குணம் இங்கே மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுவதில்லை. நவநாகரிகம் என்கிற பெயரில் நம்மிடையே ஊடுருவிவிட்ட கலாச்சாரத்தின் பின்விளைவினாலேயே பெருந்தன்மை என்கிற உயர்குணம் கொஞ்சம் கொஞ்சமாக நம் சமூகத்திலிருந்து மறைந்து வருகிறது.
இக்குணம், பெரும்பாலும் வயது மற்றும்/அல்லது அறிவு (அ) அனுபவம் முதிர்ச்சியால் ஒருவருக்குள் இருக்கும். ஆனால் வயது/அறிவு/அனுபவத்தில் முதிர்ந்த அனைவருக்கும் பெருந்தன்மை இருப்பதில்லை என்பது வேறு கதை. பொதுவாக, இவற்றில் முதிர்ச்சி அடைந்த மக்கள் பெருந்தன்மை குணத்தோடு விளங்குவர்.
இந்த உலக வாழ்க்கையையே வெறுமனே போட்டிகள் மற்றும் நிறைந்த ஒன்றாக, வெற்றி/தோல்வி என்கிற இலக்கை மட்டுமே வைத்து ஓடக்கூடிய ஒன்றாக இச்சமூகம் மாற்றிவிட்டது. இச்சூழலில், இந்த உலகில் பெருந்தன்மையாக வாழ்வதென்பது முட்டாள்கள் மட்டுமே செய்யக்கூடிய ஒன்று என்று வாதிடும் மக்களையும் நான் கடந்து வந்திருக்கிறேன்.
அவர்களின் கூற்றுக்களை ஏற்கவியலாது. நாம் இங்கே வந்திருப்பது வாழ்வதற்காக. அந்த வாழ்க்கையில் நீங்களும் கொஞ்சம் பெருந்தன்மையோடு வாழ்ந்துப் பாருங்களேன். உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டானதாய் உணர்வீர், நீங்களும் மனநிம்மதியை உணர்வீர்.
இங்கே ஒரு முதுமொழியை குறிப்பிட விளைகிறேன்.
“ விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.”
*தினேஷ்மாயா*
Rules the Break !
- DM
Do anything -
That doesn't hurt others
And also
Makes you Happy !!
Yes..
It's true.
Pain is obvious
But
Suffering is optional.
-DM
If you think youre perfect...
WTF !!
Well... That's Fine !!
If you think only you're perfect and no one else is..
WTF
What The F !!
* DM*
Loneliness is my favourite Drug
* DhineshMaya *
உலக அழகி சரி.
அதென்ன பிரபஞ்ச அழகி ?
ஏன் பிரபஞ்ச அழகிப்போட்டியில் கலந்துக்கொள்ளும் அனைத்து அழகிகளும் இந்த உலகத்தில் இருந்து மட்டுமே வருகின்றனர் ? பிரபஞ்சத்தில் எத்தனையோ அழகிகள் இருக்கலாம்..
இந்த குறுகிய மனப்பான்மையை மனிதன் மாற்றிக்கொள்வானா ?
* தினேஷ்மாயா *
ஒரு பறவை
வானிற்கும் இந்த மண்ணிற்கும் இடையே
பறந்துக்கொண்டே இருக்க -
அது நம் நினைவுகள்தாம்
என மனம் அறியாதோ !
மேலே வானமாய் நீ
கீழே மண்ணாய் நான்..
* தினேஷ்மாயா *
கையில்லா ரவிக்கை !!
கட்டுப்பாடில்லா என் மனம் !!!
முடிவில்லா காவியமாய் நம்
ஊடலும் கூடலும் !
* தினேஷ்மாயா *
மண்புழுக்கள்கூட தன்
உடலை இழுத்து
இழுத்துக்கொண்டு ஓர்
இடம்விட்டு மற்றோர் இடம்
ஊர்ந்துகொண்டுதான்
இருக்கின்றன.
மனிதர்கள் மட்டும்தான்,
தன் இருப்பிடத்துக்கு வெளியே
உலகம் இல்லை என்று
நினைக்கிறார்கள்..
- மறைக்கப்பட்ட இந்தியா நாவலில் எஸ்.ராமகிருஷ்ணன்
* தினேஷ்மாயா *
ஆன்மிகத்தில் ஓடி கடவுளைத் தேடினேன்..
கிடைக்கவில்லை..
அறிவியலை நாடி கடவுளைத் தேடினேன்..
கண்டுகொண்டேன்....
In Science We Trust !!
* தினேஷ்மாயா *
அனைவரும் இங்கே சமம். நீ வேறா நான் வேறா இருக்கக் கூடாது என்று நினைத்தவரே எங்கள் ஈ.வே.ரா..
- படித்ததில் பிடித்தது -
* தினேஷ்மாயா *
தலைகோதும் இளங்காத்து
சேதி கொண்டுவரும்
மரமாகும் வெதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
தலைகோதும் இளங்காத்து
சேதி கொண்டுவரும்
மரமாகும் வெதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையிலே
பாத உண்டாகும்
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கை சேறு
நீல வண்ண கூர இல்லாத
நிலமிங்கு ஏது
காலம் எனும் தோழன் உன்னோடு
தடைகள் மீறு
மாறுமோ தானா நிலை
எல்லாமே தன்னாலே
போராடு நீயே
ஆறம் உண்டாகும் மண்மேலே
மீதி இருள் நீ கடந்தால்
காலை ஒளி வாசல் வரும்
தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்
நமக்கான நாள் வரும்
தலைகோதும் இளங்காத்து
சேதி கொண்டுவரும்
மரமாகும் வெதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையிலே
பாத உண்டாகும்
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கை சேறு
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கை சேறு
படம்: ஜெய்பீம்
வரிகள் : ராஜூமுருகன்
குரல்: பிரதீப் குமார்
இசை: ஷான் ரோல்டன்
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தன்னம்பிக்கையூட்டும் பாடல் என் மனதை தொட்டிருக்கிறது. இசை, வரிகள், குரல் எல்லாம் கச்சிதமாக பொருந்தி என் மனதில் தென்றலாய் வருடிச்செல்கிறது. Loop-ல் அதிகம் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் இந்தப்பாடலை.
* தினேஷ்மாயா *
Dear Mother Nature,
Homo sapiens is a failure model..
- DhineshMaya
இதுவும்... கடந்து போகும்....
சுடரி இருளில் ஏங்காதே
வெளிதான் கதவை மூடாதே.. அட
ஆறு காலங்களும் மாறி மாறி வரும்
இயற்கையின் விதி இதுவே..
அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை
அனுபவம் கொடுத்திடுமே..
மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன ?
அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன ?
சுடரி சுடரி உடைந்து போகாதே...
உடனே வலிகள் மறைந்து போகாதே...
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே...
அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே...
இதுவும்... கடந்து போகும்...
இதுவும்... கடந்து போகும்...
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
ஏதுவும் கடந்து போகும்
அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்
மனம் தான் ஒரு குழந்தையே...
அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்
அது போல் இந்த கவலையே...
நாள்தோரும் ஏதோ மாறுதல்
வானும் மண்ணும் வாழும் ஆறுதல்
பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்...
மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன ?
அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன ?
சுடரி சுடரி உடைந்து போகாதே...
உடனே வலிகள் மறைந்து போகாதே...
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே...
அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே...
இதுவும்... கடந்து போகும்...
இதுவும்... கடந்து போகும்...
அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே
குழந்தை நடை பழகுதே...
மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே
பறவை திசை அமைக்குதே...
வசம் தான் பூவின் பார்வைகள்
காற்றில் ஏறி காணும் காட்சிகள்
காணாமல் வெளியாக பார்த்திடுமே...
சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே...
பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே...
சுடரி சுடரி... வெளிச்சம் தீராதே....
அதை நீ உணர்ந்தாள் பயணம் தீராதே...
அழகே சுடரி அட ஏங்காதே...
மலரின் நினைவில் மனம் வாடாதே....
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
கடந்து போகும் கடந்து போகும் .
படம்: நெற்றிக்கண்
வரிகள்: கார்த்திக் நேத்தா
குரல்: சிட் ஸ்ரீராம்
இசை: கிரீஷ்
ரொம்ப நாள் கழிச்சு மீண்டும் மீண்டும் கேட்கும்படியான ஒரு மெலடி. வரிகளும் power packed. கதையின் சூழ்நிலைக்கேற்ப அருமையான வரிகள். நாமும் நம் வாழ்வின் சில தருணங்களில் மனசு உடைந்து நொறுங்கிக்கிடக்கும் சமயம் இந்த பாடலும் வரிகளும் கேட்கும்போது மழைக்கால ஈரத்தென்றல் வந்து நம் மனதை வருடிவிட்டு அந்த வலியையும் கொஞ்சம் சுமந்து செல்வதாய் உணரலாம்.
* தினேஷ்மாயா *
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வின் உணர்வு சேர்க்க - எம்
வாழ்வின் உணர்வு சேர்க்க - நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?
அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே
அறிகிலாத போது - யாம்
அறிகிலாத போது - தமிழ்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா?
புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் - தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் - நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச்
செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச்
செல்வம் ஆக மாட்டாயா?
- பாரதிதாசன் -
இந்த வரிகளை பாடல்களாக கேட்டுப்பாருங்கள். அற்புதமாக இருக்கும். Youtube-ல் நிறைய பேர் பாடியுள்ளனர். ஓர் இரவு என்னும் பழைய தமிழ் திரைப்படத்திலும் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.
* தினேஷ்மாயா *
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னை கலி தீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்
என்னை கலி தீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
பிள்ளை கனி அமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமேஏ
பிள்ளை கனி அமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமேஏ
அள்ளி அணைத்திடவே என் முன்னே
ஆடி வரும் தேரேஏ
அள்ளி அணைத்திடவே என் முன்னே
ஆடி வரும் தேரேஏ
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
ஓடி வருகையிலே கண்ணம்மா
உள்ளம் குளிருதடீ
ஓடி வருகையிலே கண்ணம்மா
உள்ளம் குளிருதடீ
ஆடி திரிதல் கண்டால் உனை போய்
ஆவி தழுவுதடீ
ஆடி திரிதல் கண்டால் உனை போய்
ஆவி தழுவுதடீ
உச்சி தன்னை முகர்ந்தால்
கர்வம் ஓங்கி வளருதடீ
உச்சி தன்னை முகர்ந்தால்
கர்வம் ஓங்கி வளருதடீ
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ
கன்னத்தில் முத்தமிட்டாள்
உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி
கன்னத்தில் முத்தமிட்டாள்
உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி
கன்னத்தில் முத்தமிட்டாள்
உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடிஏ
உன்னை தழுவிடலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடிஏ
உன் கண்ணில் நீர் வடிந்தால்
என் நெஞ்சில் உதிரம்
உன் கண்ணில் நீர் வடிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா
என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ
- பாரதியாரின் கண்ணன் பாட்டிலிருந்து -
அருமையான வரிகள். தமிழ் கர்நாடிக் இசைக்கச்சேரிகளில் நிச்சயம் இந்த பாடல் இடம்பிடித்திடும். இப்பாடல் நிறைய versions-ல் இருக்கிறது. எதாவது ஒரு version-ஐ கேட்டுப்பாருங்களேன். மனம் அவ்வளவு லேசாக மாறிவிடுகிறது.
* தினேஷ்மாயா *
துன்பத்தில் இருக்கும்போது வராத தேவதைகள்,
மீளாத்துயிலில் சென்றப்பிறகு,
உயிரை ஏந்திச்செல்ல வருவது -
எதற்காக ?
* தினேஷ்மாயா *
எதுவும் செய்ய முடியாத கையறுநிலையில்
மனிதனும் மனிதமும் தோற்றுப்போவதை உணரமுடிகிறது..
* தினேஷ்மாயா *
வாழ்க்கை வெறுமைகளால் நிரம்பியிருக்க,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் மகிழ்ச்சியானத் தருணங்கள் எப்போதாவது தென்படுகின்றன..
* தினேஷ்மாயா *
ஒரு நாவலை எடுத்தால் அதை படித்து முடிக்கும்வரை உணவோ உறக்கமோ வராது. புத்தக வாசிப்பிலேயே புதியதோர் உலகிற்கு பயணித்து புதியதோர் வாழ்க்கை அனுபவத்தைப் பெறும் அந்த அதிஅற்புதமான உணர்வை..
Netflix, Amazon Prime என இணையத்தில், தூக்கம் கெட்டு தொடர்ச்சியாக படங்கள் பார்க்கும் இக்கால தலைமுறையினர் உணர வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்..
* தினேஷ்மாயா *
பெரியாருக்கு முன்னர் உலகில் பல்வேறு பகுத்தறிவுவாதிகள் தோன்றி, பெரியாரைவிடவும் சிறந்த கருத்துகளை மக்களுக்கு தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர்கள் அத்துனைப்பேரும் சிந்தனைவாதிகளாகவே நினைவுக்கூறப்படும் வேளையில், பெரியார் மட்டுமே ஒரு இனத்தின் தலைவராக போற்றப்படுகிறார். அவர், வெறும் சொல்லோடு நிற்காமல் செயலிலும் தன் சித்தாந்தத்தை இறுதிவரை கடைப்பிடித்து பகுத்தறிவின் அகராதியாக திகழ்வதே அதற்கான காரணம்..
🤍
* தினேஷ்மாயா *
இலங்கையில் புத்தரின் பல், புத்தரின் எலும்பு என்று அவர் நினைவாக பல பொருட்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். அந்த பொருட்கள் உண்மையாகவே புத்தருடையதுதானா என்கிற விவாதம் இருக்கட்டும்.
ஆனால், புத்தரின் நினைவாக என்னவெல்லாமோ வைத்துக்கொண்டு, அவர் போதித்த அன்பையும் மனிதநேயத்தையும் மறந்து தன் மக்களையே வஞ்சிக்கும் கொடிய தேசமாய் இலங்கை விளங்குவது வேதனையே..
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது. இலங்கையில் சுமார் 70% மக்கள் புத்த மதத்தை பின்பற்றுகின்றனர். ஒரு புத்த நாடாக இருக்கும் இலங்கையில் ஏன் இத்தனை போர், கலவரம், அமைதியின்மை என்று சிந்தித்தால், பெரியார் சொன்ன ஒரு வாசகமே மனதில் தோன்றுகிறது.
”மதம் மனிதனை மிருகமாக்கும்”
என்னது ? புத்த மதம் கூடவா? சமண மதம் கூடவா ? என்று பலர் உங்கள் புருவத்தை உயர்த்துவது எனக்குத் தெரிகிறது. ஆம். அனைத்து மதங்களுமே மனிதனை மிருகமாக்கும்.
புத்தர் போதித்த கருத்துகளை வாழ்வியலுக்குப் பொருத்திப்பார்த்து வாழ்வதை விடுத்து, அவற்றையும் இன்னபிற கதைகளையும் தொகுத்து புத்தத்தை மதமாக உருவாக்கியதன் விளைவே இது. மதம் என்று எப்போது ஒன்று உருவெடுக்கிறதோ அங்கே மனிதநேயம் மறைந்தேப்போகிறது.
சமணமும்கூட, தீர்த்தங்கரர்கள் மக்களை நல்வழிப்படுத்த போதித்த கருத்துகளை மறந்து அந்த தீர்த்தங்கரர்களையே தெய்வமாக வழிப்படத்தொடங்கி இன்று ஒரு மதமாக வளர்ந்து நிற்கிறது.
இதனால்தான் பெரியார் சொல்லியிருக்கிறார். மதம் மனிதனை மிருகமாக்கும் என்று. சிந்தித்துப்பார்த்தால், அது எவ்வளவு உண்மை என்று புரிகிறது.
* தினேஷ்மாயா *
நான் என்னுடைய இந்த பிறவி எடுப்பதற்குக் காரணம் கர்மா (முற்பிறவியின் பாவ புண்ணியங்கள்) என்று அனைத்தையும் கர்மா மீது பழிபோடும் மதவாதிகளே.. கர்மாதான் என்னுடைய இந்த பிறவிக்குக் காரணமென்றால், உங்கள் கூற்றின்படியே, நான் எடுத்த முதல் பிறவிக்கு எந்த கர்மா காரணம் ?
அனைத்தையும் கர்மா மீது திணிப்பதை நிறுத்துங்கள். மனிதனாய் மாறுங்கள். மனிதநேயத்தோடு வாழுவோம்..
🤍
* தினேஷ்மாயா *
ஒருமுறை நாம செத்துப் போயிட்டோம்னா
நாம உயிரோட இருந்ததையே மறந்துடுவோம்...
அதனால, உயிரோட இருக்கும்போதே நல்லா நிம்மதியா சந்தோஷமா வாழ்ந்துக்கோங்க..
* தினேஷ்மாயா *
ஆமாம். நான் தெரியாம தப்புப்பண்ணிட்டேன் என்று தன் தவறை ஒப்புக்கொள்பவரை நம்பலாம்.
இல்லை, அது என் தவறில்லை, பிறரால்தான் அப்படி நடந்தது என்று தெரிந்தே பொய்யுரைக்கும் நபர்களிடமிருந்து சற்று விலகியே இருங்கள்..
* தினேஷ்மாயா *
பாடல்: பொம்ம பொம்மதா
தைய தையனக்கு
தின்னாக்கு நக்குதின் பஜங்கரே !!
அர்த்தம்: தினமும் எனக்கு தைய தையனு பஜனை செய்றீங்களே, நான் வெறும் பொம்மை பொம்மைதான்..
- இப்படிக்கு அருள்மிகு ஆனைமுகத்தான்.. 🐘
* தினேஷ்மாயா *
சங்க காலத்தில் பெண் புலவர்கள் பலர் இருந்தனர். ஆனால், ஆரிய பண்பாடு திராவிட நாகரிகத்தோடு கலந்த பிற்பாடு பெண்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். பக்தி இலக்கிய காலத்தில் பெண் புலவர்களின் பங்களிப்பு வெகு குறைவு. அதற்குப்பின் பெண் புலவர்களின் எண்ணிக்கை கைவிட்டு எண்ணும் அளவிலேயே இருந்தது. கடந்த நூற்றாண்டில்தான் திராவிடத்தின் எழுச்சி மற்றும் மீட்சியால் பெண்கள் இலக்கியத்திலும் பல்வேறு துறைகளிலும் சாதிக்க துவங்கினர்.
#திராவிடம் vs ஆரியம் - ஒரு பார்வை..
* தினேஷ்மாயா *
தெரிந்ததெல்லாம் சொல்லிவிட்டால்
ஞானத்தின் பிறப்பிடம் எது ?
சட்டம்..
விழுங்கக் காத்திருக்கும் காலடி மண்ணை மறந்துவிட்டு நாலு கால் பாய்ச்சலில் நீ தேடியலைவது எதை ?
என் பயணத்தில், எனக்கு அருகில் அமர்ந்திருப்பவர் சப்தமாக எதையோ தன் கைப்பேசியில் பார்த்துக்கொண்டு வருகிறார்.
நமக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், அவரிடம் கூட மனசு விட்டு சொல்ல முடியாத சில விடயங்கள் நம் அனைவரின் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வெளியில் பகிர்ந்துக்கொள்ள முடியாத துயரங்களை சுமந்துக்கொண்டுதான் மனிதன் வாழ்கிறான். அந்த சுமையோடே சாகிறான்.
* தினேஷ்மாயா *
அது என்னவோ தெரியல
எல்லாத்துலயும் மெரிட்ட (MERIT) எதிர்பார்க்குற அவா,
கோயில்களில் ஆகமம் வேதம் படிச்சு மெரிட்ல குருக்களா வர்ரவாள மட்டும் ஏத்துக்க மாட்டேனுறா !
காலம் கலி காலம் ஆயிடுத்துறா அம்பி
* தினேஷ்மாயா *
பகலில் கண் தெரியாமல் இருட்டில் மட்டுமே கண் தெரியும் கூகையின் வாழ்க்கையை ஒத்தது ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை என்பதை அழகாக நமக்கு உணர்த்தியிருக்கிறார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை வலி நிறைந்தது என்பதை அனைவரும் அறிந்திருந்தாலும், அந்த வலியை நமக்கும் கடத்தியிருக்கிறார்.
தன் பலம் என்னவென்றே தெரியாமல் பிற சிறிய பறவைகளுக்கும்கூட பயந்து வாழும் கூகையின் வாழ்க்கையை தலித் மக்களின் வாழ்க்கையோடு பொறுத்தி புனைவு தந்திருக்கிறார்.
இந்த நாவலில் வரும் சீனி, முத்துப்பேச்சி, அப்புச்சுப்பன் ஆகிய மூவரும் என் மனம் கவர்ந்த நபர்கள். இடையிடையே பல கதாப்பாத்திரங்கள் வந்து மனம் கவர்ந்து சென்றாலும், கதை முடிந்தாலும் இந்த மூன்று பேர் மனதில் கூடாரம் அமைத்துத் தங்கிவிடுகிறார்கள். தன் இன மக்களின் நலனையே கருத்தில் கொண்டிருக்கும் சீனியின் ஒவ்வொரு செயலும் ஆச்சரியமூட்டுகிறது. மேகலக்குடி மக்களுக்கும் தன் இன மக்களுக்கும் ஒரு பாலமாய் செயல்பட்டு முடிந்தவரை சண்டை சச்சரவின்றி வாழ உறுதுணையாக நிற்கிறான். ஐயர் எழுதி வைத்த வயலில் உழுது தன் இன மக்களின் வாழ்வில் ஒளியேற்ற பெரிதும் காரணாய் விளங்குகிறான்.
அப்புச்சுப்பன் கோபக்காரன். ஆனால் மூளை கம்மி. அதிகம் சிந்திக்க மாட்டான். எடுத்தோம் கவுத்தோம் என்று தடாலடியாக சண்டியர்தனம் செய்வான். ஆனால் அவன் செய்வது அனைத்தும் தன் மக்களுக்காகவே.
பேச்சி..
அப்புசுப்பனுக்கு அடைக்கலம் மட்டுமல்ல மறுவாழ்வும் கொடுத்தவள். அனைத்து குடி மக்களுக்கும் நீதி கிடைக்கவும் வாழ்வு கிடைக்கவும் பாடு பட்டவள். இரக்க குணம், வைராக்கியம் இவற்றின் மறுபெயர் பேச்சி.
அனைத்து கதாபாத்திரங்களிலும் என்னை அதிகம் கவர்ந்தது பேச்சியின் கதாப்பாத்திரமே. சீனியும் கூட தன் இன மக்கள் என்கிற ஒரு ஒட்டும் உறவும் இருந்ததால் அவர்களுக்காக நின்றான் எனலாம். ஆனால், முன்பின் பார்த்திராத அப்புச்சுப்பனுக்கு உதவி செய்து அவனுக்கு வாழ்வை மீட்டு கொடுத்தது இவளின் பெருந்தன்மை குணத்தை காட்டுகிறது. இவளின் பொறுமையும் அனுபவமும் எனக்கு வியப்பை கொடுக்கிறது.
இரண்டாம் பாகத்தில் வரும் கற்பனை நாடும், சீனியின் மரணமும் ஏனோ கதையுடன் ஒட்டவே இல்லை என்பதுபோல நான் உணர்கிறேன்.
எழுத்தாளர் சில இடங்களில் விரசமான விடயங்களையும்கூட நாசூக்காக சொல்லி இருப்பார். இரட்டை அர்த்தமுண்டு என்று போகிறப்போக்கில் படிப்பவர்களுக்கு புரியாது. மூன்று நான்கு முறைப் படித்தால் மட்டுமே அதன் உள் அர்த்தம் விளங்கும். அவரின் கற்பனைத்திறம் என்னை கவர்ந்தது.
பள்ளக்குடி, பறக்குடி, சக்கிலியக்குடி மக்கள் என்றைக்குமே பிறருக்கு மாடாய் உழைத்து ஏடாய் போகும் நிலை என்று மாறும் என்பதோடு கதை முடிகிறது. அவர்களுக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும். நல்லொழுக்கத்தோடு உழைப்பும் வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக கல்வியும் இருந்தால் மட்டுமே இவர்கள் வாழ்வில் ஆயிரம் சூரியனை கண்களாக கொண்ட கூகையின் கண் போல் ஒளி ஏற்படும் என்பதை உணர்த்தியிருக்கிறார்.
நாவலை படித்து முடித்தபோது மனம் கனக்கவுமில்லை, லேசாகவுமில்லை. இரண்டும் கலந்த ஓர் உணர்வு. ஒரு பத்து நாட்களாக கிடைக்கும் நேரங்களில் எல்லாம் இந்த புத்தகத்தை படித்து வந்தேன். இந்த பத்து நாட்களாக நான் வாழ்ந்துக்கொண்டிருக்கும் வாழ்க்கையோடு இன்னொரு வாழ்க்கையும் அதாவது கூகை நாவலில் வரும் நபர்களோடு சேர்ந்து பயணித்து அவர்களின் வாழ்க்கையையும் வாழ்ந்துவிட்டு வந்த ஓர் திருப்தி கிடைக்கிறது.
இந்த நாவலை நிச்சயம் நான் உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன். படித்து முடித்து உங்கள் கருத்துக்களை இங்கே என்னுடன் பகிரலாம்.
நன்றி.
* தினேஷ்மாயா *
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..