ஆரம்பத்தில் ரிக் வேதம் மற்றும் பிற வேத, ஆரன்யக, உபநிடத நூல்களில் எல்லாம் கடவுளைப்பற்றிய பிம்பம் ஒருவாறாக கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆனால், பிற்காலத்தில் இதை கேள்வி கேட்கும் முற்போக்கு சிந்தனையாளர்கள் வரலாம் என்று எவனோ ஒருவன் நினைத்திருக்கிறான். அவன் உருவாக்கிய பொய்யான சித்தாந்தமே இந்த “பரப்பிரம்மம்” என்பது.
கடவுள் எங்கே இருக்கிறார் அவரைக் காட்டுங்கள் என்று கேட்போருக்கு, அவர் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று பதில் கூறவே இந்த பரப்பிரம்மம் சித்தாந்தம் உருவாக்கப்பட்டது. காற்றைப்போல எங்கும் இருப்பவரை நீதான் உணர வேண்டும், உன் கண்களுக்கெல்லாம் தெரியாது, நீயே உணர்ந்து புரிந்துக்கொள் என்று கிளப்பிவிட்டான்.
அவன் சொல்லிவிட்டுச் சென்றதை, ஏன் என்று எவரும் கேள்விகேட்காமல், அவன் சொன்னது உண்மைதானா என்றும் ஆராயாமல் அப்படியே அதை ஏற்றுக்கொண்டு பின்பற்றத் தொடங்கினர்.
இந்த உண்மையை அறிந்து, பரப்பிரம்மம் என்று ஏதுமில்லை என்பதை உணர்வோமாக.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment