நாம் நிம்மதியாய் வாழ எதுவும் தேவையில்லை. நம் வாழ்க்கையையும், நிம்மதியையும் கெடுக்கவே இங்கே பல விடயங்கள் இருக்கின்றன. மனிதனை மகிழ்விக்க கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்கள் இன்று மனிதனையும் மனிதத்தையும், பல நாள் பசியா இருந்த மலைப்பாம்பு தனக்கு கிடைத்த சிறு ஆட்டுக்குட்டியை விழுங்குவதைப்போல விழுங்கிக்கொண்டிருக்கிறது.
இதனாலேயே, மனித உறவுகளில் அதிகம் பிளவு ஏற்படுகிறது. ஒரே இடத்தில் இருந்து மட்டுமே தொலைப்பேசியை பேச முடியும் என்கிற வசதியே முன்னர் இருந்தது. நாம் எங்கு இருக்கிறோமோ அங்கும் நம் தொலைப்பேசியை எடுத்துக்கொண்டு செல்லலாம் என்கிற நிலை வந்தது. தொலைக்காட்சியில் பார்க்கும் அனைத்தையும் நம் தொடுதிரை தொலைப்பேசியில் காணும்படி செய்துவிட்டனர். பிறகென்ன, நிற்கும்போது, நடக்கும்போது, உறங்கும்போது இப்படி எல்லா நேரங்களிலும் தொலைப்பேசி தொல்லைப்பேசியாக நம்முடன் பயணிக்கிறது. இறந்தபிறகு மனிதனுடன் சேர்த்து புதைக்கப்படுவதில்லை, அதைத்தவிர இந்த தொல்லைப்பேசி மனித உறவுகளை மேம்படுத்துவதை விடவும் அதிகம் பிளவையே ஏற்படுத்துவதை உணர முடிகிறது.
ஒரு மாதம் முழுவதற்கும் 1GB data பயன்படுத்திய நாம், இன்று ஒரு நாளைக்கு 1.5 GB data நமக்கு போதவில்லை. இணையம் என்வது சிலந்திவலை. அதில் இரைகள் சிக்குண்டு சிலந்திக்கு உணவாவதுபோல, அந்த வலையில் நாமும் சிக்குண்டு நம் மனிதத்தையும், வாழ்க்கையையும் நாசமாக்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. நல்ல விடயங்களுக்காக இணையம் பயன்பட்டாலும், குணம் நாடி குற்றமும் நாடி என்கிற விதிப்படி பார்த்தால், இதில் குணங்களைவிடவும் குற்றங்களே அதிகம் என்பது திண்ணம்.
உறவுகளையும், உணர்வுகளையும், மனிதத்தையும் மீட்டெடுப்போம்.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment