ஓரிடத்தில் வளர்ந்த
செடியை பிடுங்கி வேறொரு இடத்தில் நட்டுவைத்தால் அது செழிப்பாக வளரும் என்பதில் நிச்சயம்
இல்லை. அது இருக்கும் இடத்திலேயே விட்டிருந்தால் தனக்கான நீரை தானே எப்படியாவது தேடிக்கொண்டிருக்கும்,
அல்லது நீரின்றி வெயிலில் வாடி இறந்திருக்கும். அதை வேறொரு இடத்திற்கு மாற்றுவதால்,
அதன் வேர் மயிர்களில் உள்ள அதன் உயிர் பாதி பிரிந்துவிடுகிறது. வேரறுப்பது என்பது இதுதானோ
!?
அப்படி வேரறுக்கப்பட்டு
வேறொரு இடத்தில் நடப்பட்ட செடிகள் நன்றாக வளர ஒரு கைப்பிடி மண்ணை அது வளர்ந்த இடத்தில்
இருந்து எடுத்துவந்து புது இடத்தில் போடுவார்கள்.
ஒரு செடிக்கு இத்தனை
செய்கிறோம்.
ஆனால், தன் தாய்நாட்டை
விட்டு அகதிகளாய் வெளியேறும் மக்களுக்காக யார் என்ன செய்கிறார்கள் ? அவர்களை வேற்றுகிரக
மனிதர்களைப் போல் பார்ப்பது ஒன்றைத்தவிர !?
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment