எலேய்.. எந்திரிச்சு வெறும் வயிரா கிடக்க. எதாச்சும் குடி..
நல்லா அள்ளி தின்னு. அப்பத்தான் குடலு பெருசாகும். இப்படி கம்மியா அள்ளி தின்னா
எப்பிடி?
வெயில்ல வெளியே போகாதடா.. உச்சி வெயிலு.. ஒடம்புக்கு ஆகாது..
என்னடா சுருண்டு உக்காந்திருக்க. கால் வலியா. ஏண்டி அந்த வெளக்கெண்ணய்ய எடுத்துனு
வா. சுளுக்கு கிளுக்கு பிடிச்சிருக்கும்.. நீவி விட்டா சரியாயிரும்..
எத்துக்குடா ஆஸ்பத்திரி போற. செத்த இரு. மாமன அனுப்பி ஆத்துல நண்டு பிடிச்சார
சொல்றேன். ஆவி புடிச்சுட்டு நண்டு ரசம் தின்னா சளி பறந்துரும்..
இந்தா பிடி.. ஆயாகிட்ட 40 ரூவாதான் கன்னு இருக்கு. கைசெலவுக்கு வெச்சுக்கோ ..
இப்படி இன்னும்
ஏராளம் ஏராளம்.. இந்த கலப்படமில்லாத பேரன்பு, அவளுடன் சேர்த்தே புதைக்கப்பட்டது அந்த
சுடுகாட்டில்..
என் பாட்டி இறந்தாள்,
என் நினைவில் வளர்ந்தாள் !!
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment