பெரியார் இன்னமும் நம் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம்.
இன்றும் கூட பெரியார் சிலையை உடைக்கிறார்கள் அவர் சிலை மீது காலணி வீசுகிறார்கள் என்றால் அது அவருடைய கொள்கைகளும் அவரும் இன்னும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார் என்பதற்கு ஒரு சான்று ஆகும். இதுபோன்ற தரம்கெட்ட செயல்களால் அவரின் புகழ் ஒன்றும் குறைந்துவிடாது மாறாக அவரின் புகழ் சமூகத்தில் அனைவரிடமும் சென்று சேர வழிவகுக்கிறது.
நம் சமூகத்தோடு பின்னிப்பிணைந்திருக்கும் பெரியாரின் கருத்துக்களை யார் வந்தாலும் எவர் வந்தாலும் மாற்ற முடியாது மறுக்க முடியாது.
பெரியாரின் 140 ஆவது பிறந்தநாளில் அவரின் சமூகநீதி கொள்கைகளையும் அவரையும் வழங்குவதில் நான் கர்வம் கொள்கிறேன்.
பெரியார்
தோற்றம்: 17.09.1879
மறைவு: சமூக அவலங்கள் இருக்கும் வரை அவர் மறைய மாட்டார்.
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment