கருப்பு சரித்திரம்

Saturday, February 28, 2015


சரித்திரத்தை பெரும் போராளிகள் மட்டும்

படைப்பதில்லை..

எம் உழைக்கும் வர்க்கமும் தினம் தினம்

ஓர் கருப்பு சரித்திரத்தை

படைத்துக்கொண்டுதான் இருக்கிறது...

* தினேஷ்மாயா *

வானவில்


நீ காற்றில் கிறுக்கிய கோலம்தான்

அந்த வானவில்லோ ??

* தினேஷ்மாயா *

17 ரூபாய் எங்கே போச்சு ?




சில தினங்களுக்கு முன், ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் தானியங்கி மையத்தில் பணம் எடுக்க சென்றேன். அந்த வங்கியில்தான் நான் கணக்கு வைத்திருக்கிறேன். பணம் எடுத்து பல தினங்களாச்சு அதனால் எவ்வளவு பணம் என் கணக்கில் இருக்கிறதென்று எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால், தோராயணமாக 500 ரூபாய் வைத்திருக்கிறேன் என்று மட்டும் நினைவிருக்கிறது. அன்று பணம் எடுக்க சென்றபோது, ஒரு அவசர தேவைக்காக என் கணக்கில் இருந்து 500 ரூபாய் பணம் வேண்டுமென்று தானியங்கி மையத்தில் பதிவு செய்தேன், ஆனால் கணக்கில் பணம் இல்லை என்று பதில் வந்தது. எவ்வளவு பணம் இருக்கிறதென்று பார்த்தேன். 499.95 இருந்தது. 5 காசுகள் குறைவாக இருந்தமையால் என்னால் 500 ரூபாய் பணம் எடுக்க முடியவில்லை. சரியென்று 400 ரூபாய் மட்டும் பணம் எடுத்துவிட்டு வந்தேன். சில மணிநேரம் கழித்து, என் கணக்கில் இருந்து 17 ரூபாய் பிடித்தம் செய்ததாக ஒரு குறுஞ்செய்தி வந்தது. ஏன் என்று என் இணையம் மூலமாக என் கணக்கில் சென்று பார்த்தபோது, பணம் குறைவாக இருந்து அதிக பணம் வேண்டுமென்று எடுக்க முயன்று அதை தானியங்கி மையம் நிராகரித்ததால், அதற்கு சேவை கட்டணமாக 17 ரூபாய் பிடித்தம் செய்த்தாக கூறப்பட்டது.

என்னடா இது !

என் கணக்கில் இல்லாத பணத்தை நீங்கள் கொடுத்துவிட்டு அதிகம் கொடுத்துவிட்டோம் என்று சொல்லி பணம் பிடித்தம் செய்தாலும் பரவாயில்லை. என் கணக்கில் பணம் எடுக்க நினைத்து, நான் கேட்ட பணம் நிராகரிக்கப்பட்டு, பின் அதைவிட குறைவான பணத்தைதானே எடுத்தேன். இதற்கு எதற்காக 17 ரூபாய் பிடித்தம் செய்யனும். ஒருவேளை, நான் வங்கி கிளைக்கு நேராக சென்று, ரூபாய்.499.95 இருக்கும் பட்சத்தில், 500 ரூபாய் எடுக்க நினைத்தால், உங்கள் கணக்கில் அவ்வளவு பணம் இல்லை, நீங்கள் போதுமான பணம் இல்லாமல் பணம் எடுக்க வந்தமையால் உங்கள் கணக்கில் இருந்து 17 ரூபாய் பித்தம் செய்துக்கொள்கிறோம் என்று சொன்னால் எப்படி இருக்கும் ?

மக்களின் நலனுக்காகவே வங்கிகளை அரசுடமையாக்கினார்கள். ஆனால் வங்கிகள் மக்களின் ரத்ததையும் உழைப்பையும் உறிஞ்சிதானே தங்கள் வியாபாரத்தை பெருக்குகிறார்கள். 17 ரூய்பாய் என்பது சிறிய தொகையாக இருந்தாலும், தினமும் 100 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் ஒரு ஏழையின் கணக்கில் இருந்து இப்படி பணம் எடுப்பது அவனை பெரிதும் பாதிக்கும் அல்லவா ?

முதலில், வங்கிகள் தேவையற்ற விடயங்களுக்காக சேவை கட்டணம் வசூலிப்பதை தடுத்தாக வேண்டும். சேவைக்கு எதற்கடா கட்டணம் ???

மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் வரை இதுபோன்ற அவலநிலை அன்றாடம் தொடர்துக்கொண்டேதான் இருக்கும்..

* தினேஷ்மாயா *

மாணவர்களை அரசு பள்ளிகள் 'உற்பத்தி' செய்வது எப்படி?



வருடந்தோறும் மே மாதம் முதல் வாரம் என்றால் தேர்வு முடிவுகள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகிவிடுகிறது. தேர்ச்சி முடிவுகளில் எந்தெந்த பாடங்களில் எத்தனை பேர் நூற்றுக்கு நூறு, எத்தனை பேர் மாநிலத்தில் முதலிடம், எத்தனை பேர் மாவட்ட முதலிடம் என்ற செய்திகள் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும். அடுத்த நாள் செய்தித்தாள்கள் முழுவதும் தனியார் பள்ளி விளம்பரங்களும், அவர்கள் நிகழத்திய சாதனைகளும் (?) நிறைந்திருக்கும்.
அரசுப் பள்ளிகளில் இத்தனை பள்ளிகள் எவ்வளவு சதவீதம் தேர்ச்சி எந்தெந்த பாடங்களில் எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி, எந்த பாடத்தில் தேர்ச்சி குறைந்தது என மீளாய்வு கூட்டங்கள் நடத்தி, அதிகாரிகள் தங்களை திட்டுவது, அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்டு நேரத்தை வீணடிப்பது என்பதெல்லாம் ஆசிரியர்களுக்கும், தலைமையாசிரியர்களுக்கும் பழகி விட்ட ஒன்றாகிவிட்டது.
தோல்வியடைந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற தகுதியில்லாதவர்களா? வெற்றி பெற்ற அனைவரும் தகுதியானவர்களா என்று உங்களுக்குள் ஒரு கேள்வி கேட்டுப்பாருங்கள்? உண்மை புரியும். தேர்வு நடந்த நாள் தோல்வியடைந்த மாணவனுக்கு நல்ல நாளாக அமையவில்லை. அல்லது தனது திறமையை வெளிப்படுத்தும் சூழல் இல்லை.
ஒரு மாணவன் வருடம் முழுவதும் என்ன கற்றுக்கொண்டான்? அதை எப்படி தேர்வில் எழுதினான் என்பெதெல்லாம் தாண்டி, அன்றைய தேர்வுக்கு யார் அறைக் கண்காணிப்பாளராக வந்தார்கள், எப்படி தாராளமாக நடந்து கொண்டார்கள் என்பதைப் பொறுத்தே மாணவர்களின் தேர்ச்சி நிர்ணயிக்கப்படுறது. அவ்வளவுதான். கடந்த வருடத்தில் மட்டும் சில மாவட்டங்கள் திடீரென 10 முதல் 15 இடங்கள் வரை தேர்ச்சி சதவீதத்தில் முன்னேறி இருக்கிறது. எப்படி இந்த மாயாஜாலம் நிகழந்தது என்பது விட்டலாச்சார்யா படங்களை விஞ்சும் மர்மங்களாக உள்ளது.
தமிழகத்தில் மட்டும் எப்படி இவ்வளவு தேர்ச்சி சதம் வருகிறது என்ற கேள்வியை அண்டை மாநில ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கேட்கும் போது நம்மிடம் பதில் இல்லை. தேர்ச்சி சதம் என்பது ஒரு முக்கியமான காரணிதான். ஆனால் அதையே கல்விக்கான அளவுகோலாக எடுத்துக்கொள்ள முடியுமா? மூன்றாம் தலைமுறையில் கற்கும் மாணவன் பெறும் மதிப்பெண்ணையே முதல் தலைமுறை கல்வி கற்கும் மாணவன் பெற முடியுமா?
வீட்டு வாசற்படியில் இருந்து பள்ளி வகுப்பறை வரை மகிழுந்தில் பயணம் செய்து கல்வி கற்கும் மாணவனும், விடுமுறை நாட்களில் வேலைக்கு சென்று சில பல மைல்கள் நடந்து சென்று, சில பாட ஆசிரியர்கள் இல்லாமல் தானே கற்கும் மாணவனும் ஒன்றா? ஈரோட்டில் விளையும் மஞ்சள் திருவண்ணாமலையில் விளையுமா? கன்னியாகுமரியில் விளையும் ரப்பர் கடலூரில் விளையுமா? இயற்கையாகவே ஒரு மண்ணில் எது விளையுமோ அது மட்டுமே விளையும். இது இயற்கை நமக்கு கற்றுத்தந்த பாடம்.
காஷ்மீர் ஆப்பிளை தமிழ்நாட்டில் விளைவிக்க முயற்சி செய்தால் தோல்வியே மிஞ்சும் என்பது நல்ல விவசாயிக்கு தெரியும். ஆனால் அதையும் தாண்டி நமது மண்ணுக்கு ஒத்துவராத பயிர்களை கடந்த 20, 30 ஆண்டுகளாக பயிரிட்டதும், உரமிட்டதும் நமது மரபு சார்ந்த விவசாயத்தையும், மண்ணின் தன்மையையும் கொன்றொழித்து விட்டது. நவீன உரங்களை நம்பி நாம், இன்று விசமுள்ள உணவுகளை உற்பத்தி செய்து வருகிறோம். பசுமைப் புரட்சி நமது மண்ணின் உயிரை எடுத்து விட்டது. தற்போது மண் மலடாகிவிட்டது. வெள்ளைக்காரன் நமது மரபு சார்ந்த விவசாயத்தை ஒழிக்க நினைத்தான். அது நிறைவேறிவிட்டது.
மாணவர்களும் அறிவில்லாத மலடுகளாக பள்ளிக்கல்வியை முடிக்கிறார்களோ என்ற சந்தேகம் தோன்ற ஆரம்பித்து விட்டது. ஒரு பயில் ஒரு மண்ணில் விளைய பல்வேறு காரணிகள் உள்ளது. பயிர் விளைச்சளைத் தரவில்லை எனில் விவசாயி மட்டும்தான் காரணமா? மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஆசிரியர்கள் காரணமா? பயிர் விளைய பருவமழை, மண்ணின் தன்மை, பயிர் செய்த காலம், பராமரிப்பு, நல்ல விதை போன்ற பல காரணிகள் உள்ளது.
பல ஆண்டுகளாக தீர்க்க முடியாத சமூக, பொருளாதார, சாதி ரீதியான, புவியியல் ரீதியான பல ஏற்றத்தாழ்வுகள் மாணவர்களின் குடும்பங்களில் நிலவி வருகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல பெற்றோர்கள் தினக்கூலிகளாக பெங்களூரிலும், திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளிலும் வேலை செய்து கொண்டுள்ளனர். மாணவர்கள் தாங்களே சமைத்து சாப்பிட்டு பள்ளிக்கு வரும் சூழல் உள்ளது. சில மாணவிகள், பெற்றோர் உடன் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதும் உண்டு.
தொடர்ந்து இடைவெளியில்லாமல் ஒரு நிலத்தில் பயிர் செய்தால் நிலம் மலடாகிவிடும். தொடர்ந்து நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தால் பயிர் வளராது என்பதும் நல்ல விவசாயிக்கு தெரியும். ஆனால் மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு, அரையாண்டு விடுமுறை, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதே காணாமல் போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. தனியார் பள்ளிகளைப் பார்த்து தற்போது அரசுப் பள்ளிகளும் அதைப் பின்பற்றும் சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டனர். தங்கள் விடுமுறையையும் மகிழ்ச்சியையும் பறித்த ஆசிரியர்கள் மீது ஏன் மாணவர்களுக்கு கோபம் வராது?
இன்று தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களாக உள்ளனர், தற்போது மாணவர்களும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவது வேதனையாக உள்ளது. வேலூரில் 10-ம் வகுப்பு மாணவன், ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சூழலை உருவாக்கியது, நமது கல்வி முறையின் மிகப்பெரிய தோல்வி என்பதை நவீன மெக்காலேக்கள் உணர்வார்களா?
ஒரு பெண்ணின் கருவறையில் உள்ள கருவை சோதிக்கும் போது முறையாக வளர்ச்சி இல்லை எனில், அதை கரு நீக்கம் செய்வதே ஓர் உண்மையான மருத்துவரின் கடமை. அது கொலையல்ல. ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மகிழுந்தில் பழுது என்றால் அதை அப்படியே ஒரு நிறுவனமோ, பொறியாளரோ சாலையில் ஓடவிட்டால் சில பல நபர்களை அது பலிவாங்கும். குறைபாடுடன் வாகனம் விற்பனைக்கு விடப்பட்டது தெரியவந்தால் நீதிமன்றம் மூலமாக பல லட்சங்கள் கோடிகளை நிறுவனம் தண்டம் கட்ட வேண்டி வரும். நிற்க.
இந்த காருக்கு பதிலாக நமது மாணவனை நினைத்துக்கொள்ளுங்கள். பொறியாளருக்கு பதிலாக ஆசிரியர்களையும், நிறுவனத் தலைவருக்கு பதிலாக நமது கல்வித் துறையையும் பொருத்திப் பாருங்கள். பள்ளி எனும் மனிதவள உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் எத்தனை குறைபாடுள்ள மகிழுந்துகள் வெளியே சென்று எத்தனை பேரின் உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெரியும்.ெ
தற்போது பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு முன்னால் மாணவனின் பங்கு உள்ளது. காரணம்... மாணவர்களுக்கு சமூகம் சார்ந்த கல்வியையோ, விழிப்புணர்வோ தராமல் வெறும் மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரங்களாக மாணவர்களை மாற்றிவிட்டது நவீன மெக்காலேக்களின் கண்டுபிடிப்பு.்
மதியம் 10 நிமிடமே இடைவேளை விட வேண்டும். மீதி நேரம் வடக்கு பார்த்து வாஸ்து முறைப்படி உட்கார்ந்து கொண்டு படிக்க வேண்டும் என்றெல்லாம் சுற்றறிக்கைகள் விடப்படுகிறது. 10 நிமிடத்தில் ஒரு மாணவன் உணவருந்த முடியுமா? பள்ளியில் சத்துணவு 10 நிமிடத்தில் வழங்கப்பட்டு விடுகிறதா? சிறைக் கைதிகளுக்கு இருக்கும் மனித உரிமை கூட மாணவர்களுக்கு இல்லையா? இப்படி பல கேள்விகள் எழுந்தாலும் நமக்கென்ன என்று ஆசிரியர்கள் இருந்துவிடுகிறார்கள்.
தேர்ச்சி சதவீதம் என்ற பெயரில் மாணவர்களை கசக்கிப் பிழவதும், அவன் எதையும் தெரிந்துகொள்ளத் தேவையில்லை, தேர்ச்சி பெற்றால் போதுமானது என்ற நிலைக்கு ஆசிரியர்களை கல்வித்துறை தள்ளி பல வருடங்கள் ஆகிவிட்டது.
ஒரு பள்ளியில் ஒரு பெண்ணாசிரியரை தகாத வார்த்தைகளில் திட்டுகிறார் ஒரு மாணவர். ஆசிரியர் அறைக்கு சென்று அழுவதை தவிர அந்த ஆசிரியையால் எதுவும் செய்ய முடியவில்லை. கடந்த வருடத்தில் மட்டும் எத்தனை பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதையும், எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதையும் ஆய்ந்து பாருங்கள், எத்தனை ஆசிரியர்கள் மாணவர்களால் தாக்கப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள் என நினைத்துப் பாருங்கள். நாம் கல்வி என்ற பெயரில் மாணவர்களுக்கு எதைக் கற்பித்தோம் என்பது புரியும்.
11, 12 ம் வகுப்பு பாடங்களில் 12-ம் வகுப்பு பாடங்களில் 10 சதவீதத்தைப் படித்தாலே தேர்ச்சி பெற்றுவிடலாம் என்பதே நிதர்சனம். 10 சதவீதத்தை கூட படிக்க முடியாமல் முடியாமல் மாணவன் தோல்வியுறுவதும், இந்த 10 சதவீதத்தைப் படிக்க வைப்பதற்கே சனி, ஞாயிறு, விடுமுறை, காலை, மாலை என்று சிறப்பு வகுப்புகளில் ஆசிரியர்களும், மாணவர்களும் அலைவதையும் நினைத்தால் தெரியும் நமதுமாணவனின் தரமும், கல்வித்துறையின் நிலையும்.
கற்றல் பணி மாணவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா என்று ஆய்வதற்கு எந்த அதிகாரியும், ஆசிரியர்களும் தயாராக இல்லை. தேர்ச்சி சதமும் மதிப்பெண்களும் தங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும் என்பதிலேதான் ஆசிரியர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.
பள்ளிக்கல்வித் துறையைப் பொறுத்த வரையில் கல்லூரி கல்விக்கு மூலப்பொருட்கள் தயார் செய்து அனுப்பும் ஒரு தொழிற்சாலையாக மாறிவிட்டது. ஆனால் மூலப்பொருட்களின் தரம்தான் தற்போது கேள்விக்குறி ஆகியுள்ளது. 12ம் வகுப்பை தாண்டிய மாணவர்கள் தங்கள் பள்ளிக்காலத்தில் எத்தனை முறை அறிவியல், மொழி ஆய்வகங்களில் நுழைந்தனர் எனக் கேட்டால் தெரியும். நமது பள்ளிக்கல்வியின் தரம். ஆனால் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் மட்டும் வானளவு உயர்ந்து நிற்கிறது.
இதையும் தாண்டி தேர்ச்சி சதவீதம் குறைந்தால் 'நான் மாற்றப்படுவேன், நீங்கள் தண்ணீர் இல்லா காட்டுக்கு மாற்றப்படுவீர்கள்' என்று ஆசிரியர்களை மன ரீதியாக பயமுறுத்தி, மாவட்டத்தின் நலன் கருதி ஆசிரியர்கள் எவ்வாறு தேர்வறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிவுரைகள் வழங்குவது வாடிக்கையாகிவிட்டது.
விளைவு...? தமிழைக் கூட வாசிக்கத் தெரியாத மாணவர்கள் 11ம் வகுப்பை அடையும் நிலையில் நமது கல்வியின் தரம் உள்ளது. அவனுக்கு தமிழ் தெரிந்தால் என்ன? ஆங்கிலம் தெரிந்தால் என்ன? நமக்கு தேர்ச்சி விகிதம் வந்தால் சரி. ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் மாணவர்களை அமர வைப்பதே பெரும் பாடாகி விட்டது. எனக்கு எப்படி தேர்ச்சி பெறுவது என்று தெரியும் என்று மாணவன் ஆசிரியரைப் பார்த்து கேலி செய்யும் நிலைக்கு ஆசிரியர் சமூகம் தள்ளப்பட்டுவிட்டது.
கற்றுக் கொடுப்பது கல்வி என்பது போய் புள்ளி விவரங்களில் சந்தோஷப்பட்டுக் கொள்கிறது அரசும், அரசு அதிகாரிகளும். மாதம் மும்மாரி மழை பெய்யாவிட்டால் உங்களை தண்ணீர் இல்லா காட்டுக்கு மாற்றிவிடுவேன் என்று மேலதிகாரி சொன்னால் நான்கு முறை நன்றாக பொழிந்தது என்று கூட புள்ளிவிவரம் சமர்ப்பித்து நல்ல பெயர் வாங்கும் அதிகாரிகள் பலர் உள்ளனர்.
கடந்த வருடம் ஐஐடி போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற ஒரு சுமார் லட்சம் மாணவர்களில் வெறும் 450 பேர் மட்டுமே தமிழகத்தைச் சார்ந்தவர்கள். அதிலும் வெறும் 31 பேர் மட்டுமே மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்கள். இதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதை விட்டுவிட்டு தேர்ச்சி சதம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கல்வித்துறை செயல்பட்டால் இந்த சமூகம் அதற்கு ஒரு பெரிய விலை கொடுக்க வேண்டிய நிலை வருங்காலத்தில் ஏற்படுவதை தடுக்க முடியாது.
உண்மையான பிரச்சனைகளை ஆராய்ந்து தரமான 'கல்வியை' (தேர்ச்சி சதவீதத்தை அல்ல) வழங்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தேர்ச்சி சதம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முன்னெடுக்கும் செயல்பாடுகள், கல்வி என்ற மரத்தின் வேரில் ஊற்றிய வெந்நீராகவே இருக்கும்.
*
கட்டுரையாளர் - கை.இளங்கோவன் | பொதுச் செயலாளர், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் சங்கம். | தொடர்புக்குelangotnhspg@gmail.com

நன்றி : தி இந்து தமிழ்.

* தினேஷ்மாயா *

வலை வீசி




உன் ஓரப்பார்வை எனும்

வலையை வீசி

உன் கன்னக்குழியில்

வீழ்த்திவிடுகிறாய் என்னை...

* தினேஷ்மாயா *

இவ்ளோதாங்க கவிதை !!

Friday, February 27, 2015



அடுக்கடுக்காய் வார்த்தைகள்

மூன்று தொடர்ச்சியான முற்றுப்புள்ளி ...

ஆங்காங்கே சில ஆச்சரியக்குறி !!

இப்போலாம் இவ்ளோதாங்க கவிதை !!

* தினேஷ்மாயா *

ஓர் யுகம்


காதலை சொல்லிவிட்டு

பதிலுக்காக காத்திருக்கும்

ஒவ்வொரு நொடியும்

ஒவ்வொரு யுகமாகும்..

* தினேஷ்மாயா *

சுட்டெரிக்கிறாய்


சூரியன் சுடும்..

நிலவுகூடவா சுடும் ?

உன் கண்களாய் என்னை

சுட்டெரிக்கிறாய்

உன் காதலால்...

* தினேஷ்மாயா *

பொறியியல் பட்டம்


தூரத்தில் இருந்தே

என்னை ஆட்டிப்படைக்கிறாயடி நீ !!

காதலில் பொறியியல் பட்டம்

பெற்றவளோ நீ ?

* தினேஷ்மாயா *

தேவதை சூழ் உலகு..


பிறர் வசிப்பது -

ஆழி சூழ் உலகு..

நான் வசிப்பது -

தேவதை சூழ் உலகு..

* தினேஷ்மாயா *

நவக்கிரகம்


கோயில் நவக்கிரகம் போல்

உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன்..

எப்போது எனக்கு வரம் அருள்வாயடி !!

* தினேஷ்மாயா *

நானும் அறிகிலேன் !!


அத்தனை கோடி அணுக்களில்

எது கருவாகும் என்று யாரும் அறிகிலார்..

என் ஆயிரமாயிரம் எண்ணங்களில்

எது உனக்கான கவிதை கருவாகும் என்றும்

நானும் அறிகிலேன் !!

* தினேஷ்மாயா *

தென்றலாய் வீசி



என் வானத்தில் மின்விசிறி வைத்தார்போல்

எப்போதும் என்மீது தென்றலாய் வீசி

என்னை குளிவித்துக்கொண்டேயிருக்கிறாய் நீ !!

* தினேஷ்மாயா *

காதல் ரவுடி..


உன்னிடமிருக்கும் கொஞ்சம் ரவுடித்தனம்

என்னை அதிகம் கவர்கிறது..

* தினேஷ்மாயா *

நீதானடி என் ப்ரியசகி..


என்றாவது ஒருத்தி

என் கிறுக்கல்களையெல்லாம்

தேடிவந்து படித்துப்பார்ப்பாள்

என்கிற குருட்டு நம்பிக்கையுடன்தான்

இன்னமும் கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்..

இந்த கிறுக்கல்களையெல்லாம் படிக்கும்போது

இது நானாக இருக்ககூடாதா என்று

ஒருகனமேனும் நினைத்தால் -

நீதானடி என் ப்ரியசகி..

* தினேஷ்மாயா *

குழந்தை வந்தவுடன்


குழந்தை வந்தவுடன்

தம்பதிகளிடையே அன்பு குறைந்துவிடும் -

ஆய்வு கூறுகிறது..

என் முதல் குழந்தையே நீதானடி..

நீ வந்ததும் நம்முள்

அன்பு கூடிவிட்டதேயன்றி குறையவில்லையே..

* தினேஷ்மாயா *

நீ பொய்யுரைக்கிறாய் !



நீ பொய்யுரைக்கிறாய் !

உனக்கு பேசத்தெரியுமென்று..

மௌன அழகியே..

காதலுக்கான பதிலை மௌனத்திலாவது சொல்வாயா ?

* தினேஷ்மாயா *

வாங்கிக்கொண்டு போ


யாருக்காகவோ எழுதிய கவிதைகளை

உனக்கு சமர்ப்பணம் செய்தால் நீ ஏற்றுக்கொள்வாயா ?

மாட்டாய் அல்லவா !

அருகில் வா..

உனக்கான கவிதைகளை வந்து வாங்கிக்கொண்டு போ !

அதை வேறொருத்திக்கு ஒருபோதும் அர்ப்பணிக்க மாட்டேன்..

* தினேஷ்மாயா *

பூங்காற்று


மாலைநேர பூங்காற்று

உன்னைத் தீண்டி தீண்டி

வெட்கப்பட்டு செல்கிறது..

* தினேஷ்மாயா *

அள்ளித்தருகிறாய்



ஒவ்வொரு நாளும்

நானுனக்கு

அன்பை அள்ளித்தருகிறேன் !!

ஒவ்வொரு நாளும்

நீயெனக்கு

ஆச்சரியங்களை அள்ளித்தருகிறாய் !!

* தினேஷ்மாயா *

ஜன்னல் நிலா


நிலா - உன்னை வெளியே விட்டால்

வானில் மறைந்திடுவாய் நீ !!

அதான் உன்னை

என் ஜன்னலில்

சிறைப்பிடித்து வைத்திருக்கிறேன் !!

* தினேஷ்மாயா *

பிடியுங்கள் அவளை !!


இரவெல்லாம் என் கனவில்

என்னுடன் கண்ணாமூச்சி

விளையாடிவிட்டு - இங்கே

ஒய்யாரமாய்

ஓய்வெடுக்கிறாள்..

பிடியுங்கள் அவளை !!

* தினேஷ்மாயா *

விடுமுறை


இன்று ஒருநாள் மட்டும்

காதலுக்கு விடுமுறை விட்டுவிடட்டுமா ?

உலகில் இருக்கும் மொத்த காதலையும்

நானே உன்மீது காட்டுவதால்

காதலுக்கு இங்கே அதிக தட்டுப்பாடு !!

* தினேஷ்மாயா *

குழந்தைத்தனம்


நமக்கோர் குழந்தை வந்தபின்னரும் கூட

உன் குழந்தைத்தனம் மாறவில்லையடி !!

* தினேஷ்மாயா *

இரவு..



இரவு...

என்னவொரு ரம்மியமான பொழுது தெரியுமா !

உன்னையே சிந்திப்பதற்கும்,

உன்னை ரசிப்பதற்கும்,

உன்னை வர்ணிப்பதற்கும்,

உன்னை தியானிப்பதற்கும் ஏற்ற தருணத்தை

இந்த இனிய இரவு மட்டுமே

எனக்கு வரமாய் தருகிறது..

* தினேஷ்மாயா *

காதல் பிறந்திருக்கிறது


பிறந்ததும் தன் தாயைத் தேடும்

ஆட்டுக்குட்டியைப்போல நானும்

உன்னைத் தேடுகிறேன்..

எனக்கு உன் மீது காதல் பிறந்திருக்கிறது..

* தினேஷ்மாயா *


கனவை தொலைத்தவன்



தூக்கத்தை தொலைத்தவனை

பார்த்திருப்பாய்..

உன்னால், என் கனவை

தொலைத்துவிட்டு நிற்கிறேன் பார்..

* தினேஷ்மாயா *

குற்றம்



பிறரிடம் குற்றம் காண்பதிலேயே நம் வாழ்க்கையின் பாதி நாட்களை நாம் கடந்துவிடுகிறோம்..

அதில் பாதியையாச்சும் நம் குறைகளை தீர்த்துக்கொள்ள பயன்படுத்தினால், நம் வாழ்க்கை வளமாகும்..

* தினேஷ்மாயா *

உயிரிலே என்னுயிரிலே



உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாயே இது காதல் சாபமா?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஓடமா ?

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண் துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா?
இனி தீயே வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தப்பின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ..
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல?
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்
பழுதான தேரடி..

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி

படம்: வெள்ளித்திரை
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடியவர்: நரேஷ் ஐயர்

* தினேஷ்மாயா *

என்னோடு நீயிருந்தால்



என்னோடு நீயிருந்தால்…
உயிரோடு நானிருப்பேன்…
உயிரோடு நானிருப்பேன்…

என்னோடு நீயிருந்தால்…
உயிரோடு நானிருப்பேன்…
என்னோடு நீயிருந்தால்…
உயிரோடு நானிருப்பேன்…

என்னோடு நீயிருந்தால்…
உயிரோடு நானிருப்பேன்…
உயிரோடு நானிருப்பேன்…

என்னோடு நீயிருந்தால்…
உயிரோடு நானிருப்பேன்…

உண்மை காதல் யாதென்றால்
உன்னை என்னை சொல்லேனே
நீயும் நானும் பொய் என்றால்
காதலை தேடி கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக
ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்குள்ளே நீர்ப்போல
நெஞ்சில் தேக்கி வைப்பேனே
 
பூவில் காம்பில் பூத்த பூமிப்பந்து நான்
சுத்தி சுத்தி வாழ்வேன் உன்னை மட்டும்தான்
உன் மனதை எனதாய் போத்தி படைப்பேன்
உடலில் உயிர்போல் உன்னுள் கிடப்பேன்
 
என்னோடு நீயிருந்தால் … இருப்பேன்…
உயிரோடு நானிருப்பேன்…

என்னோடு நீயிருந்தால் …
உயிரோடு நானிருப்பேன்…

என்னோடு நீயிருந்தால் …
உயிரோடு நானிருப்பேன்…

என்னோடு நீயிருந்தால் …
உயிரோடு நானிருப்பேன்…

படம்: ஐ
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள்: கபிலன்
பாடியவர்கள்: சித் ஸ்ரீராம், சின்மயி

* தினேஷ்மாயா *

ஜகடதோம் ஜகடதோம்

Thursday, February 26, 2015


ஜகடதோம் ஜகடதோம் வாழ்க்கையே போர்க்களம்
ஜகடதோம் ஜகடதோம் எழுதுவோம் சரித்திரம்
நடந்து நடந்து கால்தேயலாம்
விழித்து விழித்து கண்மூடலாம்
இருந்த போதும் வா போரிலே மோதலாம்

இருட்டை விரட்ட ஒரு சூரியன் 
அடுத்த திருப்பத்திலும் தோன்றலாம் 
நினைத்த கனவு கைக்கூடலாம் கூடலாம்

ஜகடதோம் ஜகடதோம் வாழ்க்கையே போர்க்களம்

பலக்கோடி காலங்கள் மண்ணுக்குள் வாழ்ந்தாலே 
கரித்துண்டு வாழ்க்கை ஒரு நாள் வைரமாக மாறும் 
வரலாற்றில் எந்நாளும் வலியின்றி வாழ்வில்லை 
வலிதானே வெற்றியில் ஏற ஏணி ஒன்று போடும் 

தீமையைத் தீயிட தீமையை நாடிடு
குற்றம் அதில் இல்லை
தோட்டத்தைக் காத்திட
வேலியில் முட்களை வைத்தால் தவறில்லை

கண்ணில் கார்காலம் ஓ.. இன்றே மாறாதோ
நெஞ்சில் பூக்காலம் ஓ.. நாளை வாராதோ
நடந்து நடந்து கால்தேயலாம்
விழித்து விழித்து கண்மூடலாம்
இருந்த போதும் வா போரிலே மோதலாம்

இருட்டை விரட்ட ஒரு சூரியன்
அடுத்த திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கைக்கூடலாம் கூடலாம்

ஜகடதோம் ஜகடதோம் வாழ்க்கையே போர்க்களம்

முடியாத பாதைதான் கிடையாது மண்மீது
முன்னேறும் நதிகள் எல்லாம் பள்ளம் பார்த்திடாது
விடியாத நாட்கள்தான் கிடையாது விண்மீது
விழி சிந்தும் ஈரம் பட்டு நெஞ்சம் மூழ்கிடாது

ஆலயம் என்பது கோபுர வாசலும் சிலையும் மட்டும்தான்
அதைவிட மேலெது ஆண்டவன் வாழ்வது
நல்லோர் உள்ளம்தான்

தாய்மை என்றாலும் ஓ.. உன்போல் ஆகாது
உண்மை நெஞ்சம் தான் ஓ.. உன்னைபோல் ஏது

நடந்து நடந்து கால்தேயலாம்
விழித்து விழித்து கண்மூடலாம்
இருந்த போதும் வா போரிலே மோதலாம்
இருட்டை விரட்ட ஒரு சூரியன்
அடுத்த திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கைக்கூடலாம் கூடலாம்

ஜகடதோம் ஜகடதோம் வாழ்க்கையே போர்க்களம்
ஜகடதோம் ஜகடதோம் எழுதுவோம் சரித்திரம்

படம்: தெய்வத்திருமகள்
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
வரிகள்: நா.முத்துகுமார்
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், மாயா, ராஜேஷ்

* தினேஷ்மாயா *

ஒரு வெட்கம் வருதே வருதே

Tuesday, February 24, 2015


ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைபாயுதே
இது என்ன முதலா முடிவா?
இனி எந்தன் உயிரும் உனதா?
புது இன்பம் தாலாட்டுதே
போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தடம் தடுமாற்றம் சுகம்

மழை இன்று வருமா வருமா
குளிர் கொஞ்சம் தருமா தருமா
கனவென்னை களவாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
பர பரபரவெனவே துடித்துடித்திடும் மனமே
வர வர வர கரைத் தாண்டிடுமே

மேலும் சில முறை
உன் குறும்பிலே நானே கோர்க்கிறேன்
உன் மடியிலே என் தலையணை
இருந்தால் உறங்குவேன்
ஆணின் மனதிற்குள்ளும் பெண்மை இருக்கிறதே
தூங்க வைத்திடவே நெஞ்சம் துடிக்கிறதே
ஒரு வரி நீ சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
எழுதிடும் காதல் காவியம்
அனைவரும் கேட்கும் நாள் வரும்

மழை இன்று வருமா வருமா
குளிர் கொஞ்சம் தருமா தருமா
கனவென்னை களவாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
இது முதல் அனுபவமே இனி இது தொடர்ந்திடுமே
வர வர வர கரைத் தாண்டிடுமே

காற்றில் கலந்து நீ
என் முகத்திலே ஏனோ மோதினாய்
பூ மரங்களில் நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்
தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே
நினைத்தப்பொழுதினிலே வரனும் எதிரினிலே
வெயிலினில் ஊர்கோலம் இதுவரை நாம் போனோம்
நிகழ்கிறதே கார்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைபாயுதே
இது என்ன முதலா முடிவா?
இனி எந்தன் உயிரும் உனதா?
புது இன்பம் தாலாட்டுதே
போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே துடிதுடித்திடும் மனமே
வர வர வர கரைத் தாண்டிடுமே

படம்: பசங்க
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
வரிகள் : தாமரை

* தினேஷ்மாயா *

சர்க்கரை நிலவே பெண் நிலவே



சர்க்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை
நீ இல்லையே

சர்க்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை
நீ இல்லையே

மனம் பச்சை தண்ணீ தான் பெண்ணே
அதை பற்ற வைத்தது உன் கண்ணே
என் வாழ்கை என்னும் காட்டை எரித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா

சர்க்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை
நீ இல்லையே

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணர தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை
அன்பே உன் புன்னகை எல்லாம்
அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே உன் பொன்னகை எல்லாம்
கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா
அதில் கொள்ளை போனது என் தவறா
பிரிந்து சென்றது உன் தவறா
நான் புரிந்து கொண்டது என் தவறா
ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதையல்ல கல்லின் சுவரா

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா

நவம்பர் மாத மழையில்
நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல்
மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில்
நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல்
மிக பிடிக்கும் என்றாய்

சுகமான குரல் யார் என்றால்
சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ
மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்தர் சிலை 
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய் ?

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா

படம் : யூத்
இசை : மணி சர்மா
பாடியவர்ஹரீஸ்ராகவேந்திரா
பாடல் வரி : வைரமுத்து


தினேஷ்மாயா *

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே

Monday, February 23, 2015



வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிருமுக சிரிப்பில்

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே..
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே..
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிருமுக சிரிப்பில்
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே..

காற்றின் பேரிசையும் மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனையும் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே..
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே..
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாயிந்திடுமோ
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே..
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே..

படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
வரிகள்: வைரமுத்து
இசை மற்றும் குரல் : ஏ.ஆர்.ரஹ்மான்

* தினேஷ்மாயா *

உன் பேரை சொல்லும் போதே



உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ...
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ...
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்

உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்...
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்...
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ...
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்...

நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
என் உலகம் தனிமை காடு, நீ வந்தாய் பூக்களோடு
எனனை தொடரும் கனவுகளோடு, பெண்ணே பெண்ணே...
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ...
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்...

உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ...
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ...
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்

உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிர, என் கையில் ஒன்றும் இல்லை
அதை தாண்டி ஒன்றுமே இல்லை,பெண்ணே பெண்ணே

நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ...
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்...

உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ...
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ...
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்


படம் : அங்காடித் தெரு
இசை : ஜி.வி.பிரகாஷ்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : ஹரிசரண், ஷ்ரேயா கௌஷல், சுரேஷ் ஐயர்

* தினேஷ்மாயா *

நினைவுகள்



நினைவுகள் பலரை வாட்டி வதைக்கும்..

ஆனால்,

உன் நினைவுகள்தான் என்னை உயிரோடு இருக்க வைக்கிறது..

* தினேஷ்மாயா *