போகும் பாதை தூரமில்லை

Sunday, January 04, 2015



போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள் விலகும் அகஒளியில்
அன்னம் பகிர்ந்திடு
அன்னம் பகிர்ந்திடு

நதிபோகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை
வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை
ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே..

கருணை மார்பில் சுனை கொண்டவர் யார்
அன்னை பாலென்றாளே
அருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார்
இறைவன் உயிரென்றாரே
பெரும் கை ஆசியிலும்
இரு கை ஓசையிலும்
புவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே..

படம்: பிசாசு
வரிகள்: தமிழச்சி தங்கபாண்டியன்
இசை: ஏரால் கொரேலி
குரல்: உத்ரா உன்னிகிருஷ்ணன்

இப்பாடலில் வரும் வயலின் இசையை என்னவென்று சொல்ல. படத்தோடு பார்க்கும்போது இந்த வயலின் இசைக்கு என் இதயம் சற்று நின்று துடிக்கிறது..

* தினேஷ்மாயா *

0 Comments: