சமீபத்தில் பார்த்து ரசித்த படங்கள்

Sunday, January 04, 2015




காவியத்தலைவன் - இப்படம் வெளிவரும் முன்னரே அனைத்து பாடல்களையும் கேட்டுவிட்டேன். பாடல்கள்தான் என்னை இந்த படத்தை பார்க்க அழைத்து சென்றது. இயக்குனருக்காகவும் இசையமைப்பாளர் ரஹ்மானுக்காகவும் இந்த படத்தை பார்த்தேன். நல்ல படம். சொல்லவந்ததை அருமையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.




கயல் - பிரபு சாலமன் அவர்களின் படம். அவருக்காகவும் பாடல்களுக்காகவும் படம் பார்த்தேன். பாடல்களை முதலில் கேட்கும்போது மைனா மற்றும் கும்கி பாடல்களின் சாயல் இருந்தது. பின்னர் கேட்க கேட்க அது மறைந்துவிட்டது. படம் நன்றாக இருந்தது. மைனா, கும்கி அளவுக்கு இல்லை. படத்தில் சற்று வேகம் விறுவிறுப்பு குறைவு. பாடல்கள் தேவையான நேரத்தில் வந்தாலும், மைனா, கும்கி படத்துக்கு உதவியது போல பெரிதும் உதவவில்லை. எது எப்படி இருந்தாலும் என் மனதை கவர்ந்தது இப்படம்.





Bhopal - A Prayer For Rain ; தேர்வுக்கு படித்துக்கொண்டிருக்கிறேன். அந்த வேளையில் இப்படம் வெளிவந்தது. இருப்பினும், இப்படத்தை பார்த்தே தீரவேண்டும் என்றிருந்தேன். தேர்வுகளுக்கு முன்னர் இப்படத்தை பார்த்துவிட்டேன். போபாலில் நடந்த விஷவாயு கசிவு சம்பவத்தை மையமாக வைத்து படமாக்கியிருந்தாலும், உண்மையை கொஞ்சம் திரித்து சொல்லியிருக்கின்றனர் என்பதுதான் எனக்கு அதிக வருத்தம். மற்றபடி, படத்தில் இரண்டாம் பாகம், பார்க்கும் ஒவ்வொருவரின் மனதையும் புரட்டிப்போடும் என்பதில் சந்தேகமில்லை.



பிசாசு - என்ன சொல்ல. சொல்ல வார்த்தைகள் இல்லை. மிஷ்கின் மீண்டும் ஜெயித்திருக்கிறார், ஜொலித்திருக்கிறார். மிக அருமையான படம். ஒரேயொரு பாடல் தான் படத்தில். அது ஏற்படுத்தும் தாக்கம் அதிகம். இளையராஜா அவர்கள் இல்லாத குறையை இப்படத்தில் வரும் வயலின் இசை போக்கிவிட்டது. படத்தின் ஆரம்பத்தில் வரும் வயலின் இசையை கேட்கவே இன்னொருமுறை படத்தை திரையரங்கம் சென்று பார்த்தேன்.


PK - சிறந்த படங்களின் வரிசையில் இதை வைக்கலாம். அமிர்கானின் நடிப்பும் ராஜ்குமார்ஹிரானி அவர்களின் இயக்கமும் அருமை. இந்த காலகட்டத்தில் அனைவரும் பார்க்கவேண்டிய படம்.


* தினேஷ்மாயா *

0 Comments: