பல வருட ஆசை

Friday, January 24, 2014



     எனக்கு இசையின்மீது அளவு கடந்த காதல் எப்போதும் உண்டு. சிறுவயது முதல் எதாவது கர்நாடக இசைக்கச்சேரியை நேரில் சென்று பார்க்கனும் என்று ஆசை. 

    இன்று எதேச்சையாக செய்தித்தாளில் வயலின் இசைக்கச்சேரி சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு அரங்கில் நடக்கிறது என்று படித்தேன். உடனே மாலை அங்கு ஆஜர் ஆகிவிட்டேன்.

    ஒரு மணி நேரம் நடந்தது. திருமதி.மீரா சுந்தர் அவர்கள் வயலின் இசைத்தார், சுமேஷ் மிருதங்கம், கிருஷ்ணா கடம் வாசித்தார். ராகம் தாளம் என எதுவும் எனக்கு தெரியாது. ஆனால், இசையை ரசிக்க தெரியும். அது போதாதா என்ன ?

   ஒரு மணிநேரமும் இசையின் இனிமையில் மூழ்க வைத்துவிட்டனர். தனிஅவர்த்தனம் - என்று மிருதங்கமும் கடமும் தனியாக வாசித்தனர். மிகவும் அருமையாக இருந்தது.

   பெரும்பாலும் தியாகராஜரின் பாடல்களைத்தான் இசைத்தனர். அவர்கள் இசைக்கும்போது அவர்கள் அவ்வளவு காதலோடு தங்கள் வாத்தியங்களை இசைக்கின்றனர். அந்த காதலும் என் காதுக்கு இனிமை கூட்டியது. அந்த அரங்கில் என் பெயரை பதிவு செய்துவிட்டு இதுப்போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தால் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

இசை - மனிதனை மனிதனாக வைத்திருக்க உதவும் ஒரு கருவி !!

* தினேஷ்மாயா *

0 Comments: