இந்த வருடத்தின் முதல் பதிவு இது. என்ன பதியலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், தங்க மீன்கள் படத்தில் வரும் ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்கிற பாடலை பார்த்துக்கொண்டிருந்தேன்.
தங்க மீன்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக வாழ்ந்திருக்கும், செல்லம்மா கதாப்பாத்திரம் என்னை மிகவும் அழவைத்தது, கவரவும் செய்தது. அவளின் நடிப்பு அத்துனை கச்சிதம். அவள் பேச்சு, அவள் செய்கைகள், அவள் பேச்சின் தோரனை, அதிலிருக்கும் குறும்புத்தனம், அவளின் செல்ல கோபம், அவளின் கெஞ்சல், அவள் கேட்கும் கேள்விகள், அவளின் அழுகை, அவளின் புன்சிரிப்பு, தந்தையிடம் காட்டும் பாசம், அவளின் அப்பாவித்தனம் இப்படி ஒவ்வொன்றும் என்னை அதிகம் ஈர்த்தது.
நடிகைகளை வர்ணித்து எழுத ஆயிரம் பேர் இருக்கிறார்கள். நடிப்பை வர்ணிக்க ஒரு சிலரே. நான் அவளின் நடிப்பை வர்ணிக்க விரும்பினேன்.
இந்த செல்லம்மா என்றென்றும் என் மனதில் இருப்பாள். அவளின் நடிப்பு என்றும் என்னால் மறக்க முடியாது..
செல்லம்மா என்பது பாரதியின் துணைவியார் பெயர் என்பதையும் இங்கு நான் பதிந்தேயாக வேண்டும்..
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment